💿 இந்த அறிவிப்பு கணினி ஆசிரியர்களுக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு
🖱️ தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை அனைத்து நிலைகளிலும் கணினி அறிவியலை கட்டாயப் பாடமாகக் கொண்டு வர நடவடிக்கை வேண்டும்.
🖱️ மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப (30:1) அனைத்து பள்ளிகளிலும் பி.எட்., முடித்த கணினி ஆசிரியர்களை தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.
🖱️ கணினி துறையில் இளநிலை பி.எட்., (UG+B.Ed.,) & முதுநிலை பி.எட்., (PG+B.Ed.,) முடித்த கணினி பட்டதாரிகளுக்கு தகுதியின் அடிப்படையில் பணி வரையறை செய்து கணினி ஆசிரியர்கள் அனைவரையும் அரசு பள்ளிகளில் பணி நியமனம் செய்ய புதிய கல்விக்கொள்கையில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வர வேண்டும்; இதனை செயல்படுத்த மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
🖱️ கணினி & இணையம் இன்றியமையாத இன்றைய சூழ்நிலையில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் நவீன கணினி ஆய்வகம் & இணையதள வசதியை ஏற்படுத்திக்கொடுக்க மாநில அரசுகளுக்கு நிதியுதவி அளித்து இந்த திட்டத்தை செயல்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும்.
🖱️பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு தேர்ச்சி முறையை கொண்டுவர 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை கணினி அறிவியலை தமிழ், ஆங்கிலம், கணிதம் போன்று ஆறாவது கட்டாயப்பாடமாகக் கொண்டுவர புதிய கல்விக்கொள்கையில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்து இந்த கல்வியாண்டு முதலே இந்த நடைமுறையை படிப்படியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 🖱️ Etc.
👆👆 இதுபோன்ற கணினி ஆசிரியர்களுடைய நீண்டநாள் கோரிக்கைகளை இந்த வாரத்திற்குள் ஆங்கிலம் அல்லது தமிழில் https://innovateindia.mygov.in/nep2020/ இந்த இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்ய வேண்டும்.
‼️ இது கணினி ஆசிரியர்களுக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு. நீங்கள் அனுப்பும் ஒரு சிறிய செய்தி கூட கணினி ஆசிரியர்களின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும்.









