மேஷம்:
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்லதொரு நாளாகும். சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும், வெற்றிகரமாக எனக்கு கல்வி நன்றாக இருக்கும். கணிதப் பாடத்தில் தேர்ச்சி சிறப்பாக இருக்கும். பத்திரிக்கை துறை எழுத்துத் துறை மற்றும் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாக இன்றைய நாள் அமையும்.
மேஷ ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி 2020 : நட்சத்திரங்களுக்கான பலன்கள் இதோ!
ரியல் எஸ்டேட் கட்டிட தொழில் வாகன தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு சற்று கூடுதலான வேலை வாங்கக் கூடிய நாள் இன்றைய நாள். உணவுத் தொழிலில் இருப்பவர்களுக்கும் கமிஷன் ஏஜென்சி போன்ற தொழிலில் இருப்பவர்களுக்கும் இன்று வருமானம் நன்றாக இருக்கும். உடல்நலன் நன்றாக இருந்து வரும். ஒரு சிலருக்கு கழுத்து மற்றும் தோள்பட்டை செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் வந்து நீங்கும்.
ராகு கேது பெயர்ச்சி 2020: வீட்டில் நாமே பரிகார பூஜை செய்வது எப்படி? : குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சிக்கான எளிய பரிகாரம் இதோ
ரிஷபம்:
எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் மருத்துவத்துறை உணவு தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு இன்றைய நாளில் சிறப்பானதொரு உயர்வை காண்பார்கள். கடன் பிரச்சினைகள் சற்றே மனதில் கவலையை ஏற்படுத்தினாலும், அவற்றை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.
ரிஷப ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி 2020 : சவாலையும், சாகத பலனை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்!
நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை. வணிகவியல் இயந்திரவியல் தொழில் போன்றவற்றில் உள்ளவர்களுக்கு சற்று கவனம் கூடுதலாக தேவை. விநாயகப் பெருமானை வழிபடவும்.
மிதுனம்:
உங்களுடைய பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் சமுதாயத்தில் கூடும். மாணவர்களின் கல்வி நன்றாக இருந்து வரும். திருமணம் போன்ற சுப காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். காதல் தொடர்பான விஷயங்களில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாகும்.
மிதுன ராசி ராகு கேது பெயர்ச்சி பலன் 2020 : இனி விடிவுகாலம் தான் !
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தன வரவு நன்றாக இருக்கும். புது தொழில் முயற்சிகள் தொடர்பான திட்டமிடுதல் மனதில் ஏற்படும். சொத்து சம்பந்தப்பட்ட செயல்களும் சிந்தனைகளும் ஆதாயம் தருவதாக அமையும்.
வாஸ்து அடிப்படை கேள்விகள் : எந்த மாதிரி வீடு, மனை வாங்கினால் யோகமும், லாபமும் ஏற்படும்?
கடகம்:
சிம்மம்:
வேலை தேடுபவர்களுக்கு நாளின் முற்பகுதியில் நல்ல பலன் கிட்டும். புது தொழில் முயற்சிகள் எடுப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். போட்டி பந்தயம் லாபம் தருவதாக அமையும். நண்பர்கள் மற்றும் சுற்றத்தார்கள் அனுகூலம் உண்டு.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு காண சுமூகமான சூழ்நிலை நிலவும். வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி உண்டு. மருந்து மற்றும் மருத்துவ துறை ஆன்மீகத் துறை இயந்திரவியல் வங்கி தொழில் வரவு செலவு போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நன்மை ஏற்படும். உணவு தொழில் மற்றும் வாகனத் தொழிலில் இருப்பவர்களுக்கு இன்றைய நாளின் பிற்பகுதியில் சற்று பின்னடைவு வர வாய்ப்பு உண்டு.
சிம்ம ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 : அதிர்ஷ்டம் இருந்தாலும் எச்சரிக்கை தேவை
கன்னி:
கோவில் செல்லுதல் தெய்வப் பணிகள் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். தனவரவு உண்டு. கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். உடல் நலம் நன்றாக இருந்து வரும். வாகன வகையில் அனுகூலம் உண்டு.
பத்திரிக்கை துறை எழுத்துத் துறை மற்றும் கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு தங்களுடைய காரியங்கள் சற்று கால தாமதம் ஆக வாய்ப்பு உள்ளது. சுய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு.
கன்னி ராசி ராகு கேது பெயர்ச்சி பலன் 2020 - நன்மைகளும், சில சிரமங்களும் கலந்த பலன்
துலாம்:
பிற்பகலில் சற்று காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பேச்சில் கவனம் தேவை. குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டு. புதிய கல்லூரி சேர்க்கைகள் விரும்பியவாறு கிடைக்க ஏதுவான நாளாக இன்றைய நாள் அமைகிறது.
மருந்து மருத்துவம் ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நாளின் பிற்பகுதி நன்றாக இருக்கும். பெண்களுக்கு நல்லதொரு நாளாகும். காதலில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக உள்ளது. புது தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மை உண்டாகும்.
துலாம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன் 2020 : சுப நிகழ்வுகள் விரைவில் நடக்கும்
விருச்சிகம்
- விருச்சிக ராசிக்கான ராகு கேது பெயர்ச்சிபலன் 2020 - பழைய கஷ்ட நிலை மாறி முன்னேற்றம் நிச்சயம்
கோபத்தை குறைத்து கொள்வது அவசியம். கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருந்துவரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவினங்கள் உண்டு. உடல் அசதி அதிகமாக இருந்து வரும். தாங்கள் எடுக்கும் முயற்சிகளில் சற்று கால தாமதம் ஆக வாய்ப்புண்டு என்பதால் மனதை ஒரு நிலையில் நிறுத்துவது நல்லது.
தனுசு:
புதிய தொழில் முயற்சிகள் புதிய ஒப்பந்தங்கள் போன்றவற்றை நாளை தள்ளி வைப்பது நல்லது. சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சற்று காலதாமதம் ஆனாலும், வெற்றிகரமாக முடியும். பெண்களுக்கு சிறப்பான நாள் ஆகும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
பத்திரிக்கைத் துறை விஷுவல் மீடியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். அரசுத்துறை காரியங்களில் சற்று கால தாமதம் ஆகலாம். சொத்து விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஆதாயம் கிடைக்கும். இடம் மாறுவது சொத்து வாங்குவது போன்ற சிந்தனைகளில் ஈடுபடுவீர்கள்.
தனுசு ராசி ராகு கேது பெயர்ச்சி 2020 - நீண்ட கால துன்பத்திலிருந்து விடிவு காலம்
மகரம்:
கணவன்-மனைவியரிடையே சிறு சிறு பிணக்குகள் வந்து செல்ல வாய்ப்பு உண்டு என்பதால் வார்த்தையை அளந்து பேசுவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பெண்களுக்கு பொறுமையைக் கைக் கொள்ளும் நாளாக இன்றைய நாள் அமைகிறது. தங்களுடைய பிறந்த வீட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்றே அதிகமானாலும், பாராட்டு பெறும் அளவிற்கு கடின உழைப்பை போட்டு வெற்றி பெறுவீர்கள். வயோதிகர்களுக்கு சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு விலகும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. அதிக நேரம் டிவி மொபைல் மற்றும் சோஷியல் மீடியாவில் நேரத்தை செலவழிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சலும், செலவுகளும் உண்டாகும். விநாயகப் பெருமான் வழிபாடு விக்கினம் தீர்க்கும்.
மகர ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 : அலைச்சலும், பொறுப்பும் அதிகரிக்கும்
கும்பம்:
சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். மாணவர்களின் கல்வி மேம்படும்.
உறவினர்கள் வருகை அல்லது நண்பர்களை சந்திப்பது போன்ற மனதுக்கு இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். ஆயில் அண்ட் கேஸ் வங்கித்துறை மருத்துவத்துறை ஆன்மீகம் போன்றவற்றில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல நிகழ்வுகள் நடக்கும். பெண்களுக்கு இனிய நாளாக இந்த நாள் அமைந்தாலும், நாளின் பிற்பகுதியில் சற்று விட்டு கொடுத்து செல்வது குடும்ப அமைதியே மேம்படுத்தும்.
கும்ப ராசி ராகு கேது பெயர்ச்சி 2020 - வசதி வாய்ப்பு ஏற்படும்; பண விஷயத்தில் கவனம் தேவை
மீனம்:
ராகு தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்
ஒரு சிலர் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பர். இவைகளில் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. தொழில் மாற்றத்தைப் பற்றி அல்லது இடமாற்றத்தை பற்றி சிந்திக்கும் நாளாக இன்றைய நாள் அமையும்.
தன வரவு உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. தாய் வழி சொந்தம் வந்ததால் மற்றும் நண்பர்களால் தனவரவும் மன மகிழ்ச்சியும் கிடைக்கும். கணக்குத் துறை உணவுத்துறை மற்றும் சுற்றுலா துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. குழந்தைகளால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். வாகனம் ஓட்ட கற்றுக் கொள்வதற்கு ஆரம்பிக்க நல்ல நாள் ஆகும்.








