திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனம் தொடங்கவிருப்பதாக தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா
பரவல் காரணமாக திருமலை திருப்பதியில் கடந்த மார்ச் மாதம் பக்தர்கள்
தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த ஜூன் மாதம்
கட்டுப்பாடுகளுடன் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி
வழங்கப்பட்டது.
அதன்விளைவாக, திருப்பதியில் கரோனா
பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. மேலும் 2 அர்ச்சகர்கள் தொற்றுக்குப்
பலியாகினர். இதையடுத்து, கோயில் நடை மூடப்பட்டது.
இந்த நிலையில் திருப்பதியில் மீண்டும் பக்தர்கள் தரிசனத்துக்கு நாளை முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும்
நிலையில், வழக்கமாக வழங்கப்படும் இலவச தரிசன டிக்கெட்டுகள் அந்தந்த
கவுண்டர்களில் கிடைக்கும் என்று வதாக தேவஸ்தானம் அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.







