வயது என்பதற்கு எந்த வேலியுமில்லை.. Just numbers அவ்வளவுதான்... படித்ததில் பிடித்தது - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


வயது என்பதற்கு எந்த வேலியுமில்லை.. Just numbers அவ்வளவுதான்... படித்ததில் பிடித்தது

 

*வாழ்க்கையில் எல்லோரும் ஒன்று தான்!

*20 வயசுக்கு அப்புறம், வெளிநாடும்,
*உள் நாடும் ஒண்ணு தான்.*

*எப்படி இருந்தாலும், எங்க இருந்தாலும்,
அட்ஜஸ்ட் பண்ண கத்துக்குவோம்.

30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும்
ஒண்ணுதான்.கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம்.

40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும்,குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான்.குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க.

50 வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான்.எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள்,
கரும் புள்ளிகள் வந்துரும்.

60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணுதான்.ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணுதான்.

70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ
எல்லாம் ஒண்ணுதான்.மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்ச இடத்தில் மட்டுமே புழங்க முடியும்.

80 வயசுக்கு அப்புறம், பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாமே ஒண்ணு தான்..!அதிகமா செலவழிக்க முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும், ஆசைகளும் குறைஞ்சிருக்கும்.

90 வயசுக்கு அப்புறம் ஆணோ, பெண்ணோ
ஒண்ணு தான் !ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய தன்மைகளும்.. எல்லாமே மங்கி போயிருக்கும்.

100 வயசுக்கு அப்புறம், படுத்து இருந்தாலும், நடந்துட்டு இருந்தாலும் எல்லாம் ஒண்ணு தான் !
நடக்க முடிஞ்சா கூட, செய்யுறதுக்கு எந்த வேலையுமே இருக்காது.

*என் வாழ்க்கையும், உங்க வாழ்க்கையும் ஒண்ணு தான்...

அதனால வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்..

*என்ன இருக்கோ, அதுக்காக சந்தோஷப் பட கத்துக்குவோம், இல்லாதத நினைச்சு
துயரப்படுறத விட்றுவோம்...

நார்மன் வின்சென்ட் பீலே என்ற உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்
“The power of positive thinking” என்ற புத்தகத்தில் அவர் வாழ்வில் நிகழ்ந்த அருமையான நிகழ்ச்சி ஒன்றைப் பற்றி குறிப்பிடுகிறார்...

தோல்வி மேல் தோல்வி அடைந்து விரக்தியின் விளிம்பில் இருந்த ஒருவர் பீலேவை சந்திக்க வருகிறார்.

தனது வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் தான் சிரத்தையுடன் சிரமப்பட்டு செய்யும் செயல்கள் கூட
துன்பமயமாக இருக்கிறது என்றும் பீலேவிடம் புலம்பினார்.

பீலே அவரிடம் ஒரு துண்டு காகிதத்தை எடுத்து
அதன் நடுவே கோடு ஒன்றைப் போட்டுக் கொடுத்தார்.

கோட்டுக்கு வலது பக்கம் அவருடைய வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளையும் கோட்டுக்கு இடது பக்கம் துன்பமயமான நிகழ்வுகளையும் எழுதச் சொன்னார்.

வந்தவரோ “என் வாழ்க்கையை பொறுத்த வரையில் வலது பக்கம் எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. வலது பக்கம் காலியாகவே இருக்கப் போகிறது” என்று புலம்பிக் கொண்டு அந்த துண்டு காகிதத்தை வாங்கினார்.

சிறிது நேரம் கழித்து காகிதத்தை வாங்கிப் பார்த்த போது வலது பக்கம் காலியாகவே இருந்தது.

இப்போது பீலே சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.

உங்களுடைய மகன் எப்போது ஜெயிலில் இருந்து வந்தான்?” என்று பீலே கேட்டார்.

அதற்கு அவர் எனது மகன் ஜெயிலுக்கே போகவில்லையே என்று கூறினார்.

இது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே.
இதை வலது பக்கம் எழுதலாமே” என்றார்.

தொடர்ந்து “உங்களுடைய மனைவி உங்களை எப்போது விவாகரத்து செய்தார்?”
என கேட்ட கேள்விக்கு என் மனைவி
என்னுடன் தான் இருக்கிறாள் என்றார்.

எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தீர்கள்?”
என்ற கேள்விக்கு சாப்பிடாமல் நான் இருந்ததில்லை என்று பதிலளித்தார்.

உங்கள் வீடு தண்ணீரில் இழுத்து சென்ற போது
என்ன செய்தீர்கள்?” என்ற கேள்விக்கு என் வீடு பத்திரமாகத் தான் இருக்கிறது என்று பதில் கூறினார்.

இப்படி ஒவ்வொரு கேள்வியாக கேட்க கேட்க கோட்டின் வலப் புறம் நிரம்பியிருந்தது.

இடது பக்கத்தில் எழுத இன்னும் இடமிருந்தது.

கடந்த காலத்தில் முழுக்க முழுக்க மகிழ்ச்சியான நிகழ்வுகளைக் கொண்ட மனிதர் என்று இந்த உலகில் யாரும் இல்லை.

அது போல முழுக்க முழுக்க துன்பமயமான நிகழ்ச்சிகளை மட்டும் கொண்ட மனிதர் என்று யாரும் இல்லை.

*இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை...!

ஆனால் சிலர் துன்பமான நிகழ்வுகளை மட்டுமே கணக்கிலெடுத்து தங்களுடைய வாழ்க்கையை தாழ்த்திக் கொள்கிறார்கள்...

கடந்த காலம் நம் தலையை உடைக்கும் சுத்தியலாக இருக்கக் கூடாது...

அது நம்மை முன்னோக்கி உந்தித் தள்ளும் தள்ளு பலகையாக இருக்க வேண்டும்.

*என்ன நடந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வேன் என்று முடிவெடுங்கள்...

*மகிழ்ச்சியே உங்கள் வாழ்க்கையின் வழியாக இருக்கட்டும்...

வாசிக்கிறதை நிறுத்தி விட்டு பேனாவையும் துண்டு காகிதத்தையும் எடுத்து கோடு போட ஆரம்பிச்சிட்டீங்களா...?

மகிழ்ச்சியாய் எழுத ஆரம்பியுங்கள்...
வலது பக்கம் நிரம்பட்டும். இடது பக்கம் காலியாகட்டும்....

*Feel the power of positive Thinking...

*That is the BIGGEST SECRET OF LIFE...!!!

*Age does not matter at every stage of Life !

*வாழ்க்கையில் எல்லோரும் ஒன்று தான்!"



Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H