ஓ.பி.சி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே அமல்படுத்தக் கோரி அதிமுக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.
மருத்துவப்
படிப்பில் OBC 50% இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரி
உச்சநீதிமன்றத்தில் அதிமுக மேல்முறையீடு செய்துள்ளது. ஓபிசி பிரிவுக்கு 50%
இடஒதுக்கீடு வழங்குவது பற்றி மத்திய அரசு 3 மாதத்தில் முடிவெடுக்க
உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவுக்கு 50%
இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கால
தாமதம் தேவையில்லாதது என்று அதிமுக மேல்முறையீடு மனுவில் கூறப்பட்டுள்ளது.







