குறைப் பிரசவத்தில் குழந்தை பிறப்பதற்கான காரணங்களும் அறிகுறிகளும் – (Premature Baby): - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


குறைப் பிரசவத்தில் குழந்தை பிறப்பதற்கான காரணங்களும் அறிகுறிகளும் – (Premature Baby):


கருத்த‍ரித்த‍ப் பெண்களில் 100க்கு 10 சதவிகிதம் குறைப்பிரசவத்தில் குழந்தைகளை பிரசவிப்பதாக ஓராய்வு கூறுகிறது. இதற்கான காரணங்களையும் அறிகுறிகளையும் இங்கு காண்போம்.

‘டி அண்ட் சி‘ (D & C)

அடிக்கடி ‘டி அண்ட் சி‘ (D & C) எனப்படும் கருப்பைத் திசுச் சுரண்டல் (Uterine Tissue Exploitation) செய்து கொள்வதால் கருப்பையின் கழுத்துப் பகுதி வலுவிழந்து விடும். இதனால் கருப்பைத் திசு தளர்ந்து அதில் கருத்தரித்து வளரும் போது கருவைத் தங்க வைக்க முடியாமல் வாய் திறக்க ஆரம்பித்து விடும். பெரும்பாலும் இந்நிலையில் கரு சிதைந்து (Abortion) விடும். அவ்வாறு நிகழாத போது குறைப்பிரசவம் உறுதியாகும்.

குழந்தைக் கருவில் வளர்ந்து கொண்டிருக்கும் போது கருப்பையானது (Uterus) குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே அதாவது குழந்தையின் வளர்ச்சி (Baby Growth) முற்றுப் பெறும் முன்பே வெளியேற்றி விடுவது ஒரு காரணம். இத்தகைய தன்மையில் பிறக்கும் குழந்தை தான் குறை மாதக்குழந்தை அல்லது பிரிடெர்ம் பேபி (Preterm Baby)). கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு அதனால் குழந்தை எடை (Low Weight) குறைவாகப் பிறந்து விடுதல் இன்னொரு காரணம். இக்குழந்தையை வளர்ச்சி குறைந்த அல்லது முதிராத குழந்தை என்பார்கள். ஆங்கிலத்தில் இதற்கு பிரிமெச்சூர் பேபி (Premature   Baby) என்று பெயர்.

37-வது வாரத்திற்கு முன்பு பிறந்தால்

பொதுவாகக் குழந்தையானது 37-வது வாரத்திற்கு முன்பு பிறந்தால் குறைப் பிரசவக் குழந்தையாகவும், 37 வாரத்திற்குப் பிறகு பிறந்தும் எடை குறைவாக இருந்தால் முதிராத குழந்தையாகவும் கருதப்படுகிறது. தாயின் உடல்நலம் இன்னொரு முக்கியக் காரணம். தாய் போதுமான ஊட்டச்சத்து ( Health foods) சாப்பிடாதவராக இருந்து, கர்ப்பக்காலப் பராமரிப்பு (Pregnancy Term Care) போதுமானதாக இல்லாவிட்டாலும், ரத்த சோகை (Anemia)  மற்றும் அதனால் தோன்றும் அசதியினால் பாதிக்கப்பட்டிரு ந்தாலும் பால்வினை (STDs – Sexual) நோய்களால் தாக்கப்பட்டிருந்தாலும் குறைப்பிரசவம் (Preterm baby) நிகழும்.

ரத்த சோகை

ஏறக்குறைய 15 விழுக்காடு பெண்கள் ரத்தச் சோகை (Anemia) மற்றும் அசதியால் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பிணிக்கு கடுமையான காய்ச்சல் (Fever), ரத்தச் சோகை (Anemia), பிபி (ரத்தக்கொதிப்பு – (Blood Pressure-BP), சர்க்கரை (Diabetics) வியாதி, மஞ்சள் காமாலை (Jaundice), சிறுநீரக பாதிப்புகள் (Kidney Diseases), இதயநோய்கள் (Heart Diseases) மற்றும் தொடர்ந்த சீதபேதி (Dyriea) இருந்தாலும் குறைப் பிரசவமாகும். இவ்வாறு ஏற்படும் பிரசவங்களில் 65விழுக்காடு தாயின் உடல்நலக்குறைவால் தோன்றுகின்ற பிரச்சினையாகும். தாயின் வயது இன்னொரு முக்கியக் காரணம்.

கருப்பை

16 வயதுக்கு உட்பட்டவராகவோ அல்லது 35 வயதுக்கு மேற்பட்டவராகவோ இருக்கும் தலைச்சான் கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவம் நிகழ அதிக வாய்ப்பிருக்கிறது. அடிக்கடி கருத்தரிப்பவர்களுக்கும் குறைப்பிரசவம் நிகழும். செப்டேட்யுடரஸ் (Septate Uterus) எனப்படும் தடுக்க மைந்த கருப்பை, டைடெல்பிஸ் எனப்படும் இரட்டைக் கருப்பை, ஒற்றைக் கூம்பு கருப்பையான யுனிகார்னுயேட் யுடரஸ், கவர்க்கூம்பு கருப்பை எனப்படும் பைகார்னுயேட் யுடரஸ் ஆகியவற்றாலும் குறைப்பிரசவம் நிகழும்.

பிறவியில் வரும் பிரச்சினைகளால் வளர்ச்சியடையாத கருப்பை, கருப்பையில் பைப்ராய்டுகள் (fibroids in uterus) எனப்படும் நார்க்கட்டிகள், கருபை வளர்ச்சியடையாத நிலையில் கருத்தரித்தல், கருப்பை இடம் மாறுதல், குறையுள்ள விந்தணு மற்றும் முட்டையினால் கருத்தரித்தல் ஆகியவையும் குறைப்பிரசவத்தை உண்டாக்கும். குழந்தை இடம் மாறி அமைந்திருப்பதால் கருவுற்ற 5 விழுக்காடு பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படுகிறது.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H