பொறியியல் போன்ற தொழில்நுட்பக் கல்லூரிகளில் மட்டுமே வளாகத்தேர்வு (கேம்பஸ் இண்டர்வியூ) மூலம் தனியார் நிறுவனங்கள் ஆட்கள் தேர்வு செய்யும் நடைமுறை மாறி, கலை, அறிவியல் கல்லூரிகளிலும் வளாகத் தேர்வுகளை நடத்தி தங்களுக்குத் தேவையான ஆட்களை தேர்ந்தெடுக்கிறது என்றாலும், மதுரை தியாகராசர் கலை, அறிவியல் கல்லூரி வளாகத் தேர்வுக்கென பிரத்யேக கவனம் செலுத்துகிறது. வங்கி, ஐடி, இன்சூரன்ஸ் போன்ற நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருகின்றனர். இதற்குத் தேவையான தகவல் தொடர்பு, மொழி அறிவுத்திறன் உள்ளிட்ட தகுதிக்கான பயிற்சிகளை அளிக்க, சிறப்பு அலுவலர் ஒருவரை நியமித்து, கல்லூரி செயலர் க. ஹரி தியாகராசன் கவனம் செலுத்துகிறார்.
இக்கல்லூரியில் 4 ஆண்டாக பைஜூஸ் என்ற கல்விப் பயிற்சி நிறுவனம், எல்என்டி, புளு-ஸ்டார் இந்தியா, விப்ரோ, ஜூகோ, எச்சிஎல், ஐசிஐசிஐ, சவுத் இந்தியன் வங்கிகள், தொழில்நுட்பம், மருத்துவம், இன்சூரன்ஸ், பைனான்ஸ் போன்ற 15-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் வளாகத்தேர்வில் தெடர்ந்து பங்கேற்றன.
வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கில் தொடர்ந்து இக்கல்லூரிச் செயலர் ஹரிதியாகராசன், முதல்வர் பாண்டிராஜா, கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலர் ராஜேஷ் செயல்படுகின்றனர்.
வர்த்தமான் சங்கர் கூறுகையில், ‘‘ . வேலை வாய்ப்புக்கான மொழித்திறன் உள்ளிட்ட பயிற்சி அளித்ததால் வெற்றி பெற்றேன். கலை, அறிவியல் கல்லூரியில் படித்த என்னைப் போன்ற பலர் நல்ல வேலை வாய்ப்பை பெற்றுள்ளோம். இதற்காக கல்லூரி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம்,’’ என்றார்.









