
தமிழகத்தில்
புதிதாக தொடங்கப்படவுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளிலும், இந்த ஆண்டே மாணவர்
சேர்க்கை நடைபெறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில்
செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில்
நாளொன்றுக்கு 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருவதாகவும்,
நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படவுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளிலும், இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடைபெறும் எனக் கூறினார்.
மேலும்,
கிசான் சம்மான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை
எடுக்க குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றார்.
முன்னதாக,
மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள்
குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது, 52 கோடி ரூபாய் மதிப்பிலான
அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி
வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர்.







