ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவர் 2.5 மணி நேரம் ஐஸ் கியூப் நிரப்பப்பட்ட பெட்டியில் இருந்துள்ளார்.
ஜோசப்
கோபெர்ல் என்ற நபர் ஐஸ் கியூப்கள் நிரப்பப்பட்ட கண்ணாடி பெட்டியின் உள்ளே 2
மணி நேரம், 30 நிமிடங்கள் மற்றும் 57 வினாடிகள் இருந்துள்ளார். பெட்டியை
நிரப்ப 200 கிலோகிராம்களுக்கும் அதிகமான ஐஸ் கியூப்ஸ் தேவைப்பட்டது என
தகவல்கள் வெளியாகியுள்ளது. கோபெர்ல் நீச்சல் உடையைத் தவிர வேறு எதுவும்
அணியாமல் உள்ளே இருந்தார்.
"நேர்மறையான
உணர்ச்சிகளைக் வெளிப்படுத்துவதால் என்னால் வலியை கட்டுப்படுத்த முடிந்தது,
அதனால் இந்த வேதனையை நான் குறைக்க முடியும்" என்று கோபெர்ல்
செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
ஐஸ் கியூப்கள் நிரப்பப்பட்ட பெட்டிக்குள் இருந்து
உதவியாளர்கள் தன்னை வெளியே எடுத்தபோது சூரிய ஒளி தன் முதுகின் மீது
விழுந்ததை நன்றாக உணர முடிந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரியாவிலுள்ள
மெல்க் நகர சதுக்கத்தில் 2019ம் ஆண்டு 30 நிமிடங்கள் வரை ஐஸ் பெட்டிக்குள்
இருந்த கோபெர்ல் தற்போது தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார். அட்வரது
சாதனை முயற்சியை மக்கள் பலர் ஒன்றுகூடி பார்த்து அவருக்கு உற்சாகம்
அளித்தனர்.

கோபெர்ல்
தனது சொந்த சாதனையை மீண்டும் ஒரு முறை முறியடிக்க திட்டமிட்டுள்ளார்.
சுமார் 2.5 மணி நேரம் ஐஸ் கியூபிற்குள்ளேயே இருந்த கோபெர்ல்-க்கு பலர்
பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதுமட்டும் அல்லாமல், இதனை யாரும்
விளையாட்டாக வீட்டில் முயற்சி செய்து பார்க்க வேண்டாம் எனவும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.







