தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை
வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள்
மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
அந்த வகையில் சேலம்,
நாமக்கல், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி
மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது.
சென்னையை
பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்
என்றும் நகரின் சில பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும்
கூறப்படுகிறது.







