லயன்ஸ் சங்கம் சார்பாக சிறந்த ஆசிரியருக்கான சமுதாய சிற்பி விருது வழங்கும் விழா மணப்பாறையில் நடைபெற்றது.
திருச்சி
மாவட்டம் மணப்பாறை தனியார் திருமண மண்டபத்தில் 'மணப்பாறை லயன்ஸ் சங்கம்'
சார்பாக சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த
நிகழ்சில் துவக்கத்தில் இந்திய உறுதிமொழியை ஏற்று உலக அமைதிக்காக இரண்டு
நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி பின்பு நிகழ்ச்சியை தொடங்கினார்கள்.
நிகழ்ச்சியில்
சிறந்த முறையில் கல்வி சேவை ஆற்றிய ஆசிரியர்கள் லலிதா, ராணி, குருநாதன்,
கலியமூர்த்தி, சகாய விஜயராணி, துரைராஜ் ஆகிய ஆசிரியர்களுக்கு
சமுதாயச் சிற்பி என்ற விருதினை முதல் நிலை ஆளுநர் சௌமா ராஜரத்தினம் வழங்கி சிறப்புரையாற்றினார்.
சமுதாயச் சிற்பி என்ற விருதினை முதல் நிலை ஆளுநர் சௌமா ராஜரத்தினம் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி வழக்கறிஞர்
கிருஷ்ணகோபால் தலைமையில், சாசன தலைவர் சமுத்திரம் கணேசன் முன்னிலையில்
நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் நவமணி, செயலாளர் மதி உதயன்,
பொருளாளர் ராஜேந்திரன், முன்னாள் தலைவர் அம்மன் ஆறுமுகம், பிரமிளா,
செந்தில்குமார் மற்றும் லேனா சொக்கலிங்கம் ராஜன் பாபு என்ஜினீயர் நடராஜன்
சசிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கொரோனா காலம் என்பதால் சமூக இடைவெளியுடன் இந்த நிகழ்சி நடைபெற்றது.







