Peak hours என்னும் மெட்ரோ பயணிகள் அதிகமாக வரக்கூடிய நேரங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் சேவையும் இயங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மெட்ரோ நிறுத்தங்களிலும் மெட்ரோ ரயில் 50 வினாடிகள் நின்று செல்லும், முன்பு 20 வினாடிகள் மட்டுமே நின்று சென்று வந்த நிலையில். பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து பொறுமையாக மெட்ரோ ரயில்களில் ஏறுவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் இருக்கைகளில், ஒரு இருக்கை இடைவெளிவிட்டு மட்டுமே பயணிகள் அமர முடியும்.
மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள இரண்டு நுழைவாயில்கள் மட்டுமே செயல்படும்.
பயணிகள் மாஸ்க் அணிவது கட்டாயம்.
உடல் வெப்ப பரிசோதனை மேற்கொண்டு நோய்த்தொற்று அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
மெட்ரோ ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசம் வழங்கப்பட்டுள்ளது.









