கொரோனா தொற்று காரணமாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல்
கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு எழுத முடியாமல் போனது. இதனால், இறுதி
செமஸ்டர் தேர்வு தவிர்த்து மற்ற செமஸ்டர் தேர்வுகளில் இருந்து
மாணவர்களுக்கு விளக்கு அளிக்கப்பட்டது. அதற்கான மதிப்பெண் முந்திய செமஸ்டர்
தேர்வுகளின் அடிப்படையில், உள் மதிப்பீட்டு அடிப்படையிலும் கணக்கிடப்பட்டு
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில்,
அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட
வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதையடுத்து, தமிழக அரசு அறிவியல்
கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் அந்த
தேர்வு எழுதுவதற்காக தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தி இருந்தால் அந்த
பாடங்களில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனால், கலை மற்றும் அறிவியல் பொறியியல் கல்லூரிகளில் அரியர் வைத்திருக்கும் ஏராளமான மானவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

இதனிடையே,
அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக
அறிவிக்கப்பட்டதை ஏற்க முடியாது என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அகில இந்திய
தொழில்நுட்பக் கல்வி கவுன்சில்(AICTE) கடிதம் அனுப்பியது.

இந்த
நிலையில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கிய விவகாரம் தொடர்பாக அகில
இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் தலைவர் தமிழக உயர்கல்வித்துறை செயலாளருடன்
ஆலோசனை நடத்தியுள்ளார்.
அப்போது தமிழக அரசு தரப்பில் அரியர்
மாணவர்களுக்கு தேர்வை நடத்த தமிழக அரசு தயாராக இல்லை என்று வெளியான தகவல்
தவறானது என இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலிடம் தமிழக அரசு
தெரிவித்துள்ளது. மேலும், பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்வு நடத்த
வேண்டும் என்று தமிழக அரசிடம் திட்டவட்டமாக கூறியுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
இதனால் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கிய
தமிழக அரசின் முடிவு திரும்பப்பெறக்கூடும் என்கிற கருத்தை கல்வியாளர்கள்
முன்வைக்கின்றனர்.







