தமிழிலக்கிய* *வினா/ விடைகள்: By ஸ்ரீகோச்சிங் - தமிழ்- PG : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Saturday 31 October 2020

தமிழிலக்கிய* *வினா/ விடைகள்: By ஸ்ரீகோச்சிங் - தமிழ்- PG :

1.செந்தமிழ் இதழ் தொடங்கிய ஆண்டு  - 1903

2.செந்தாமரை நாவல் ஆசிரியர்  -  மு.வரதராசன்
3.செம்பியன் தேவி நாவலாசிரியர்    -  கோவி.மணிசேகரன்
4.          செய்யுள்களைக் காவடிச் சிந்தில் பாடியவர்கள் – வள்ளலார் , அண்ணாமலை ரெட்டியார்
5.          செல்வத்துபயனே ஈதல் – நக்கீரர் – புறநானூறு
6.சேக்கிழார் இயற்பெயர் – அருண்மொழித்தேவர்
7.சேது நாடும் தமிழும் நூலாசிரியர் – ரா.இராகவையங்கார்
8.சேயோன்  - முருகன்
9.சேர அரசர்களைப் பாடும் சங்க நூல் –பதிற்றுப்பத்து
10.சேர நாட்டில் ஆடும் கூத்து – சாக்கைக் கூத்து
11. சேரர் தாயமுறை நூலின் ஆசிரியர் – சோமசுந்தர பாரதியார்
12.       சேனாவரையர் இயற்பெயர் – அழகர்பிரான் இடைகரையாழ்வான்
13.சைவக் கண்கள் நூல் ஆசிரியர் – ஜி.எம்.முத்துசாமிப் பிள்ளை
14.சைவசமயக் குரவர்கள்  - நால்வர்
15.சைவத் திறவுகோல்  நூலாசிரியர் – திரு.வி.க
16.சைவத்தின் சமரசம் நூலாசிரியர் – திரு.வி.க
17.       சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும் நூல் –மணிமேகலை
18.சொக்கநாதர் உலா பாடியவர் – தத்துவராயர்
19.சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுபிள்ள
20. சொற்கலை விருந்து நூலாசிரியர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை
21.சோமசுந்தரக் களஞ்சியாக்கம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
22.சோம்பலே சுகம் – பூர்ணம் விசுவநாதன்
23.சோமு என அழைக்கப் படுபவர் – மீ.ப.சோமசுந்தரம்
24.சோழ நிலா நாவலாசிரியர் - மு.மேத்தா
25.ஞாநசாகரம் இதழாசிரியர் – மறைமலையடிகள்
26.ஞான ஏற்றப்பாட்டு பாடியவர் – வேதநாயக சாஸ்திரி
27.ஞானக் குறள் ஆசிரியர்  -  ஔவையார்
28.       ஞானபோதினி ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
29.       ஞானவெண்பாப் புலிப்பாவலர்  –   அப்துல் காதீர்
30.டாக்டருக்கு மருந்து நாடக ஆசிரியர் – பி.எஸ்.ராமையா
31.       டி.கே.எஸ்.சகோதரர்கள் நாடக சபை – மதுரை ஸ்ரீபால ஷண்முகாநந்த சபை
32.தக்கயாகப் பரணி ஆசிரியர்  –  ஒட்டக்கூத்தர்
33.தசரதன் குறையும் கைகேயி நிறையும் நூலாசிரியர்  -   சோமசுந்தரபாரதியார்
34.       தஞ்சைவாணன் கோவை ஆசிரியர் – பொய்யாமொழிப் புலவர்
35.தண்டி ஆசிரியர்  -  தண்டி
36.       தண்டியலங்கார அணிகளின் எண்ணிக்கை  –  35 அணிகள்
37.       தண்டியலங்கார ஆதார நூல் – காவியரதர்சம்
38.       தண்டியலங்காரத்தின் மூல நூல் – காவ்யதர்சம்
39.தண்ணீர் தண்ணீர் ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
40.       தணிகைபுராணம் பாடியவர் - கச்சியப்ப முனிவர்
41.தத்துவராயர் பாடிய பள்ளியெழுச்சி – திருப்பள்ளியெழுச்சி
42.தம் கல்லறையில் ‘ இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் ’ என எழுதியவர் ’ – ஜி.யு.போப்
43.தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுள் செய்தார் என்றவர்- நச்சினார்க்கினியர்
44.தம் மனத்து எழுதிப்  படித்த விரகன் - அந்தக்கவி வீரராகவ முதலியார்
45.தமக்குத் தாமே கூறும் மொழி – தனிமொழி
46. தமிழ் நாடகப் பேராசிரியர் – பம்மல் சம்பந்தம்
47.தமிழ் நாட்டில் குகைக் கோயி கள் தோன்றிய காலம் – பல்லவர் காலம்
48.தமிழ் நாட்டின் மாப்பசான் - புதுமைப்பித்தன்
49.தமிழ் நாட்டின் ஜேன்ஸ் ஆஸ்டின் – அநுத்தமா
50.தமிழ் நாவலர் சரிதம் எழுதியவர் - கனக சுந்தரம் பிள்ளை
51.தமிழ் நெறிவிளக்கம் கூறும் இரு பிரிவுகள் – ஆயிடைப்பிரிவு,சேயிடைப் பிரிவு
52.தமிழ் மதம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
53. தமிழ் மொழியின் உப நிடதம் -  தாயுமானவர் திருப்புகழ் திரட்டு
54.தமிழ் வியாசர் - நம்பியாண்டார் நம்பி
55.தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர் – நாமக்கல் கவிஞர்
56.தமிழ்க் கவிஞருள் அரசர் என வீரமாமுனிவரால் குறிப்பிடப்படுபவர்– திருத்தக்கதேவர்
57. தமிழகத்தில் பழங்காலத்தில் யவனக்குடியிருப்பு இருந்த பகுதி – அரிக்கமேடு
58.தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட ஆண்டு – 1712 தரங்கம்பாடி
59.தமிழகத்தின் வால்டர் ஸ்காட் – கல்கி
60.தமிழ்ச்சங்கம் இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் செப்பேடு – சின்னமனூர்ச் செப்பேடு
61.தமிழச்சி நூலாசிரியர் – வாணிதாசன்
62.தமிழ்ச்சுடர் மணிகள் நூலின் ஆசிரியர் – எஸ் .வையாபுரிப் பிள்ளை
63.தமிழ்த்தாத்தா - உ.வே.சா
64.       தமிழ்த்தென்றல் -  திரு.வி.க
65.தமிழ்நாட்டின் பழைய நகரமாக வால்மீகி ,வியாசரும் குறிப்பிடுவது – கபாடபுரம்
66.தமிழ்ப் பண்கள் எண்ணிக்கை – 103
67. தமிழ்ப் புலவர் சரித்திரமெழுதியவர் – பரிதிமாற்கலைஞர்
68. தமிழ்மாறன் என்று அழைக்கப்படும் ஆழ்வார் - நம்மாழ்வார்
69.தமிழ்மொழி - பின்னொட்டு மொழி
70.தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் சங்க நூல் –புறநானூறு
71.தமிழன் இதயம் நூலாசிரியர் - நாமக்கல் கவிஞர்
72.தமிழி – பழைய தமிழ் எழுத்துக்கள்
73.தமிழிசை இயக்கத்தைத் தொடங்கியவர் – அண்ணாமலை அரசர்
74.தமிழில் தோன்றிய முதல் உலா நூல் - திருக்கயிலாய ஞான உலா
75.தமிழில் பாரதம் பாடியவர்  – வில்லிபுத்தூரார்
76.தமிழில் முதல் சதக இலக்கியம்  –  திருச்சதகம்
77.தமிழிலக்கிய வரலாற்றை முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் – எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை
78.தமிழின் முதல் நாவல் -  பிரதாப முதலியார் சரித்திரம் -
மாயூரம் வேத நாயகர்
79.தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை -  பாரதிதாசன்
80.       தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவியவர் – சீகன்பால்கு
81.       தர்மனுக்கு ,பாலைக் கோதமனார் அறிவுரை கூறியதாகக் கூறும் பாடல் -  புறநானூறு 366
82.தரு என்பது – கீர்த்தனங்கள் – இசைப்பாட்டு
83.தலைச்சங்கப் புலவர் – சக்கரன் எனக் கூறும் நூல் – செங்கோன் தரைச்செலவு
84.       தலைமுறைகள் நாவலாசிரியர் –  நீல .பத்மநாபன்
85.தலைவன் பிரிந்த நாளை  ,தலைவி சுவற்றில் கோடிட்டு எண்ணும் பாடல்அமைந்த நூல் –நற்றிணை
86.தவமோ தத்துவமோ நாவல் ஆசிரியர் - கோவி.மணிசேகரன்
87.தழற்புரை நிறக்கடவுள் தந்த தமிழ் என்று தமிழைச் சிவன் தந்ததாகப் பாடியவர்– கம்பர்
88.       தனிப்பாடல்களின் தொகுப்பு என அழைக்கப்படும் சங்க நூல்கள் – நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு
89.தாகூரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர்  - த.நா.குமாரசாமி
90.தாண்டக வேந்தர் - திருநாவுக்கரசர்
91.தாமரைத் தடாகம் நூலாசிரியர்  -  கார்டுவெல் ஐயர்
92.தாமரைப் பூவிற்கு ஒப்பாகக் கூறப்படும் நகரம் – மதுரை
93.தாய் அடித்தால் தந்தை உடனணைப்பார் எனப் பாடியவர்  -  வள்ளலார்
94.தாயுமான சுவாமிகள் கணக்கர் வேலைப் பார்த்த இடம் - விஜயரகு நாத சொக்கலிங்க நாயக்கர் அவை
95.       தாழ்த்தப்பட்டோர் விண்ணப்பம் பாடிய கவிஞர் – கவிமணி
96.       தானைமறம் – தும்பை
97.       தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும் கவிதை நூல் ஆசிரியர்  –  நா.காமராசன்
98.       தி.ஜானகிராமனின் சாகித்திய அகாடமி விருது பெற்ற சிறுகதை – சக்தி வைத்தியம்
99.       திண்டிம சாஸ்திரி சிறுகதையாசிரியர் - பாரதியார்
100.   திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர் - கணிமேதாவியார்
101.   திணைமொழி ஐம்பது ஆசிரியர் – கண்ணன் சேந்தனார்
102.   திரமிள சங்கம் தோற்றுவிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.470
103.   திரமிள சங்கம் தோற்றுவித்தவர்  - வச்சிர நந்தி
104.   திரமிளம்  என்னும் வடநூலில் இருந்து தமிழ் என்னும் சொல் தோன்றியது எனும் நூல் –பிரயோக விவேகம்
105.   திராவிட சாஸ்திரி - சி.வை.தாமோதரம் பிள்ளை
106.   திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி – தெலுங்கு
107.   திராவிட மொழிகளில் சிதைவு மொழிகள்  -   பாலி,பிராகிருத மொழிகள்,
108.   திராவிட மொழிகளைத் திருந்திய,திருந்தா மொழிகள் என்றவர் – டாக்டர் கார்டுவெல்
109.   திராவிட வேதம் - திருவாய் மொழி
110.   திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழ் மொழி பெயர்ப்பாளர் – கா.கோவிந்தன்
111.   திரிகடுகம்  -  சுக்கு,மிளகு,திப்பிலி
112.   திரிகடுகம் ஆசிரியர் – நல்லாதனார்
113.   திரு.வி.க.நடத்திய இதழ்கள் – தேசபக்தன், நவசக்தி
114.   திருக்கச்சூர் நொண்டி நாடகம் எழுதியவர் – மாரிமுத்துப் புலவர்
115.   திருக்கண்னப்ப தேவர் திருமறம் நூலாசிரியர் – கல்லாடர்
116.   திருக்குறள் குமரேச வெண்பா எழுதியவர் - ஜெகவீர பாண்டியர்
117.   திருக்குறளாராய்ச்சி நூலாசிரியர் – மறைமலையடிகள்
118.   திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் – ஜி.யு.போப்/வ.வே.சு.ஐயர்/தீட்சிதர்/ராஜாஜி
119.   திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்தவர் – வீரமாமுனிவர்
120.   திருக்குறளை ஜெர்மனியில் மொழிபெயர்த்தவர் – டாக்டர் கிரால் / கிராஸ்
121.   திருக்குற்றாலநாதர் உலா எழுதியவர் – திரிகூடராசப்பக் கவிராயர்
122.   திருக்கோவைப் பாடல் எண்ணிக்கை - 400 பாடல்கள்
123.   திருகுருகைப் பெருமாளின் இயற்பெயர் - சடையன்
124.   திருச்சீரலைவாய் என்றழைக்கப் படும் ஊர் -  திருச்செந்தூர்
125.   திருஞான சம்பந்தம் உலா ஆசிரியர் – நம்பியாண்டார் நம்பி
126.   திருஞானசம்பந்தர் கால நிச்சயம் நூலாசிரியர் -  பெ.சுந்தரம் பிள்ளை
127.   திருத்தி எழுதிய தீர்ப்புகள் கவிதை நூலாசிரியர் – வைரமுத்து
128.   திருத்தொண்டர் திருவந்தாதி பாடியவர்  -  நம்பியாண்டார் நம்பி
129.   திருந்தாத திராவிட மொழிகளில் அதிகமாகப் பேசப்படும் மொழி - கோண்டா
130.   திருநாவுக்கரசரால் சைவத்திற்கு மாறிய மன்னன் - மகேந்திர வர்மன்
131.   திருநாவுக்கரசரின் இயற் பெயர் – மருள்நீக்கியார்
132.   திருநாவுக்கரசருக்கு சமண மதத்தில் கொடுக்கப்பட்ட பட்டம் – தருமசேனர்
133.   திருநாவுக்கரசரைத் துன்புறுத்திய மன்னன் – மகேந்திரவர்மன்
134.   திருநெல்வேலி சரித்திரம் எழுதியவர் -  டாக்டர் கார்டுவெல்
135.   திருப்பள்ளி எழுச்சி பாடிய நாயன்மார் – மாணிக்கவாசகர்
136.   திருப்பனந்தாள் காசிமடத்தை நிறுவியவர் – தில்லைநாயகசுவாமிகள் 1720
137.   திருப்பாதிரியூர்க் கலம்பக ஆசிரியர் – தொல்காப்பியத் தேவர்
138.   திருப்புகழ் பாடியவர்  - அருணகிரி நாதர்
139.   திருமங்கை ஆழ்வார் மன்னராக வீற்றிருந்த நாடு – திருவாலிநாடு
140.   திருமங்கை ஆழ்வாரின் இயற்பெயர் – கலியன்
141.   திருமந்திரம் பாடல் எண்ணிக்கை – 3000
142.   திருமழிசைஆழ்வார் இயற்பெயர்      - பக்திசாரர்
143.   திருமால் வாணாசூரனின் சோ எனும் அரணைச் சிதைத்தது - கந்தழி
144.   திருமுருகாற்றுப்படை ஆசிரியர்  – நக்கீரர்
145.   திருவள்ளுவ மாலைக்கு உரை எழுதியவர் – சரவணப் பெருமாள் ஐயர்(1869)
146.   திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் நூல் ஆசிரியர் – மு.வரதராசன்
147.   திருவள்ளுவரைப் போற்றும் சைவசித்தாந்த நூல் – நெஞ்சு விடு தூது
148.   திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யூ.போப்
149.   திருவாசகப் பாடல் எண்ணிக்கை        - 656
150.   திருவாரூர் பள்ளு, முக்கூடற் பள்ளு ஆசிரியர் – திரிகூட ராசப்பர்
151.   திருவாவடுதுறை  ஆதீன மடத்தை நிறுவியவர் – நமச்சிவாய மூர்த்தியார்
152.   திருவிளையாடற் புராணத்தின் மூல நூல் - ஹாலாஸ்ய மான்மியம்
153.   திருவெங்கை உலா ஆசிரியர் -  சிவப்பிரகாச சுவாமிகள்
154.   திருவேரகம் –  சுவாமிமலை
155.   திருவொற்றியூர் ஒருபா ஒருபது பாடியவர் - பட்டினத்தார்
156.   தில்லானா மோகனாம்பாள் நாவலாசிரியர் – கொத்தமங்கலம் சுப்பு
157.   தில்லைநாயகம் நாடக ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
158.   திவ்யகவி என அழைக்கப்பெறுபவர் –  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
159.   தின வர்த்தமானி இதழாசிரியர் - பெர்சிவல் பாதிரியார்
160.   துன்பியல் நாடக முடிவை முதன் முதலில் காட்டியவர் – பம்மல் சம்பந்தம்
161.   தெந்தமிழ்நாட்டுத் தீதுதீர் மதுரை எனக் கூறும் நூல் – சிலம்பு
162.   தென்பிராமியின் மற்றொரு பெயர் – திராவிடி
163.   தென்றமிழ்த் தெய்வப் பரணி எனக் கூறப்படும் நூல் – கலிங்கத்துப் பரணி
164.   தென்னவன் பிரமராயனெனும்
165.   தேசபக்தன் கந்தன் நாவலாசிரியர் - கே.எஸ்.வெங்கட்ரமணி
166.   தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் – தேருர் – 1876
167.   தேம்பாவனி அறங்கேற்றப்பட்ட இடம் – மதுரை
168.   தேம்பாவனி எழுதியவர் – வீரமாமுனிவர்
169.   தேரோட்டியின் மகன்   நாடகாசிரியர் - பி.எஸ்.ராமையா
170.   தேவயானப் புராணம் பாடியவர் – நல்லாப்பிள்ளை
171.   தேவருலகிலிருந்து பூவுலகிற்குக் கரும்பு கொண்டு வந்த பரம்பரை
– அதியமான்
172.   தேவாரப் பண்களை வகுத்தவர்கள் – திரு நீலகண்ட யாழ்ப்பாணர் ,அவரது மனைவி மதங்கசூளாமணி
173.   தேன் மழைக் கவிதைத்தொகுப்பு       - சுரதா
174.   தொகையும் பாட்டும் பிறந்த காலம் – கடைச்சங்க காலம்
175.   தொடக்க காலத்தமிழ் எழுத்துக்கள் -   தமிழி
176.   தொண்டர் சீர் பரவுவார் – சேக்கிழார்
177.   தொண்டைமண்டலச் சதகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
178.   தொல்காப்பிய ஆராய்ச்சி ,தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு ஆசிரியர் – சி.இலக்குவனார்
179.   தொல்காப்பிய இயல்களின் எண்ணிக்கை – 27
180.   தொல்காப்பிய பொருளதிகார உரை முதலில் வெளியிட்டவர்
– பூவிருந்தவல்லி க.கன்னியப்ப முதலியார்
181.   தொல்காப்பிய மூலம் கையடக்க பதிப்பு வெளியிட்டவர்
சி.புன்னைவன நாத முதலியார் – 1922
182.   தொல்காப்பிய மெய்ப்பாடுகள் –  8
183.   தொல்காப்பியக் கடல்,தொல்காப்பியத்திறன் கட்டுரைத் தொகுப்பாசிரியர் - வ.சுப.மாணிக்கனார்
184.   தொல்காப்பியச் சண்முக விருத்தி நூலாசிரியர் – செப்பறை சிதம்பர சுவாமிகள்
185.   தொல்காப்பியச் சூத்திர விருத்தி எழுதியவர் – மாதவச் சிவஞானமுனிவர்
186.   தொல்காப்பியத்தில் உள்ள பேராசிரியர் உரை
– பொருளதிகாரம்  இறுதி நான்கு இயல்கள்
187.   தொல்காப்பியத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் உரை
– அகத்திணையியல்,புறத்திணையியல்,மெய்ப்பாட்டியல்
188.   தொல்காப்பியத்தில் புலவர் குழந்தை உரை – பொருளதிகார உரை
189.   தொல்காப்பியப் பாயிரம் பாடியவர் – பனம்பாரனர்
190.   தொல்காப்பியம் அரங்கேற்றத் தலைமையேற்றவர் – அதங்கோட்டாசான்
191.   தொல்காப்பியம் குறித்து ஆராய்ந்தவர் – க.வெள்ளைவாரனார்
192.   தொல்காப்பியம் குறிப்பிடும் தமிழ் எழுத்துக்கள் – 33
193.   தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வகைமையின் பெயர் – வனப்பு
194.   தொல்காப்பியம் சுட்டும் தாமரை, வெள்ளம்,ஆம்பல்
– எண்ணுப்பெயர்கள் (பேரெண்கள்)
195.   தொல்காப்பியம் –நன்னூல் முதல் ஒப்பீட்டு நூல் வெளியிட்டவர்
-க.வெள்ளைவாரனார்
196.   தொல்காப்பியர் ‘ நாட்டம் இரண்டும்  கூட்டியுரைக்கும் குறிப்புரை ’ எனக் கூறுவது  – கண்கள்
197.   தொல்காப்பியர் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள் – 3
198.   தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
199.   தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
200.   தொல்காப்பியர் சுட்டும் இடைசெருகல் ஆசிரியர்கள்
  –கந்தியார்,வெள்ளியார்
201.   தொல்காப்பியர் சுட்டும் விடுகதையின் பெயர் – பிசி
202.   தொல்காப்பியர் பன்னிருபடலம் எழுதுவதில் பங்குபெறவில்லை என்றவர் – இளம்பூணர்
203.   தொல்காப்பியரின் இயற்பெயராக நச்சினார்க்கினியர் கூறுவது
-திரணதூமாக்கினியார்
204.   தொல்காப்பியரின் இயற்பெயரான திரணதூமாக்கினியாரின்  தந்தை
– சமதக்கினி
205.   தொல்காப்பியரை வைதிக முனிவர் என்று சுட்டுபவர்
– தெய்வச்சிலையார்
206.   தொல்காபிய உரைவளத் தொகுப்பு – ஆ.சிவலிங்கனார்
207.   தொன்னூல் விளக்கம் ஆசிரியர் – வீரமாமுனிவர்
208.   தொன்னூல் விளக்கம் எழுதியவர் – வீரமாமுனிவர்
209.   தொன்னூற்றொன்பது வகை மலர்களைப் பற்றிக் கூறும் நூல்
– குறிஞ்சிப்பாட்டு
210.   தோகை, கவி என்ற தமிழ்ச் சொற்கள் ஹீப்ரு மொழியில் வழங்கப்படுவது – துகி,சுபி
211.   நண்டும் தும்பியும் நான்கறி வினாவே ” எனும் நூல் – தொல்காப்பியம்
212.   நந்தர், மோரியர் குறிப்புகளைக் காட்டும் நூல் – அகநானூறு
213.   நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் எழுதியவர் – கோபால கிருஷ்ணபாரதியார்
214.   நந்திக்கலம்பகம் எழுதப்பட்ட ஆண்டு –  கி.பி.880
215.   நந்திபுரத்து நாயகி நாவலாசிரியர் - அரு.இராம நாதன்
216.   நந்திவர்மன் காதலி நாவலாசிரியர் – ஜெகசிற்பியன்
217.   நந்திவர்மன் மீது பாடப்பட்ட கலம்பகம் – நந்திக்கலம்பகம்
218.   நம்பியகப் பொருள் எழுதியவர் -         நாற்கவிராச நம்பி
219.   நம்மாழ்வார் ( மாறன்) அழைக்கப்படும் அலங்கார நூல் - மாறனலங்காரம்
220.   நமர்  - ஒற்றர்
221.   நரிவிருத்தம் பாடியவர் – திருத்தக்கத்தேவர்
222.   நல்லது செய்தல் ஆற்றிராயின் அல்லது செய்தல் ஓம்புமின்
– நரிவெரூவுத்தலையார் – புறநானூறு
223.   நல்லது செய்தல் ஆற்றீராயினும், அல்லது செய்தல் ஓம்புமின் எனும் நூல் – புறநானூறு
224.   நவக்கிரகம் படைப்பாளி – கே.பாலச்சந்தர்
225.   நவநீதப்பாட்டியலின் ஆசிரியர் – நவநீத நடனார்
226.   நளவெண்பா ஆசிரியர் – புகழேந்திப்புலவர்
227.   நளவெண்பா காண்டங்கள் – 3
228.   நளவெண்பாவின் மூல நூல்- நளோபாக்கியானம்
229.   நற்கருணைத் தியான மாலை ஆசிரியர் – கார்டுவெல்
230.   நற்றாய் கூற்று இடம்பெறும் முதல் அகப்பொருள் நூல் – தமிழ்நெறி விளக்கம்
231.   நற்றிணை அடி வரையறை – 9 - 12
232.   நற்றிணை எப்பொருள் பற்றிய நூல் – அகப்பொருள்
233.   நற்றிணையப் பாடிய அரசர்கள் எண்ணிக்கை – 3   { அறிவுடைநம்பி, உக்கிரப்பெருவழுதி,பாலைபாடிய பெருங்கடுங்கோ }
234.   நற்றிணையில் அடிகளால் பெயர்பெற்றவர்கள் – 7 பேர் –தேய்புரிப்பழங்கயிற்றியனார்,மடல் பாடிய மருதங்கீரனார்,
235.   வண்ணப்புறக்கந்தரத்தனார், மலையனார், தனிமகனார், விழிகட்பேதையார்,பெருங்கண்ணனார் , தும்பிசேர்கீரனார்
236.   நற்றிணையில் அமைந்த பாடல்கள்  - 400
237.   நற்றிணையில் பாடல் தொடரால் பெயர் பெற்றோர் – 7
238.   நற்றிணையில் முழுதும் கிடைக்காத பாடல் – 234 –ஆம் பாடல்
239.   நற்றிணையின் பாவகை – அகவற்பா
240.   நற்றிணையின் முதல் உரையாசிரியர் – பின்னத்தூர் நாராயணசுவாமி ஐயர்
241.   நற்றிணையின் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
242.   நற்றிணையைத் தொகுப்பித்தவன் – பன்னாடு தந்த மாறன்வழுதி
243.   நற்றிணையைப் பாடிய புலவர்கள் – 175
244.   நற்றிணையைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவரும் பாடல் எண்ணிக்கை - 192
245.   நறுந்தொகை எனும் நூல் - வெற்றி வேட்கை
246.   நன்னூல் ஆசிரிய விருத்தத்தின் வேறு பெயர் – உரையறி நன்னூல்
247.   நன்னூல் ஆசிரிய விருத்தம் எழுதியவர் – ஆண்டிப்புலவர்
248.   நன்னூல் காண்டிகை உரை எழுதியவர் – முகவை இராமாநுசக் கவிராயர்
249.   நன்னூல் காலம் - 13-ஆம் நூற்றாண்டு
250.   நன்னூல் கூறும் நூலின் உத்திகள் – 32
251.   நன்னூல் கூறும் மாணாக்கர் வகை. – மூவகை மாணாக்கர்
252.   நன்னூலாசிரியர் - பவணந்தி முனிவர்
253.   நன்னூலுக்கு விருத்தப்பாவில் உரை எழுதியவர் – ஆண்டிப்புலவர்
254.   நன்னூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – இலாசரஸ்
255.   நாக நாட்டரசி நாவலாசிரியர் – மறைமலையடிகள்
256.   நாச்சியார் திருமொழி பாடியவர் – ஆண்டாள்
257.   நாடக அரங்கங்களை மூடுமாறு சட்டமியற்றிய நாடு – இங்கிலாந்து
258.   நாடக வழக்கும் ” என்ற தொடர் இடம்பெற்ற நூல் – தொல்காப்பியம்
259.   நாடகக் காப்பியம் -                 சிலப்பதிகாரம்
260.   நாடகத் தலைமை ஆசிரியர் – சங்கரதாஸ் சுவாமிகள் - 40 நாடகங்கள்
261.   நாடகம் வழக்கிழந்த காலம் – இருண்ட காலம்
262.   நாடகம் வளர்ச்சி குன்றிய காலம் – ஜைன் ,பௌத்தக் காலம்
263.   நாடகமேடையில் நடிகர்களை அறிமுகப்படுத்துபவன் – கட்டியங்காரன்
264.   நாடகவியல்,நாடக இலக்கண ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
265.   நாட்டியத் தர்மி என்ற சொல்லே நாடகம் என்றவர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை
266.   நாணல் நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர்
267.   நாதமுனிகள் பிறந்த ஊர் – வீரநாராயணபுரம்
268.   நாமக்கல் கவிஞரின் சுயசரிதை - என் கதை -வே.இராமலிங்கம் பிள்ளை
269.   நாலடியாரை மொழி பெயர்த்தவர் – ஜி.யு.போப்
270.   நாலாயிரக்கோவை பாடியவர் – ஒட்டக்கூத்தர்
271.   நாலாயிரத்திவ்யபிரபந்தத்தைத் தொகுத்தவர் – நாதமுனிகள்
272.   நாவலாசிரியை லட்சுமி இயற்பெயர் – திரிபுரசுந்தரி
273.   நாவுக்கரசர் பாடிய பதிக எண்ணிக்கை – 311
274.   நாற்கவிராச நம்பியின் இயற்பெயர் - நம்பி நாயனார்
275.   நான்மணிக்கடிகை நூலாசிரியர் – விளம்பி நாகனார்
276.   நிகண்டுகள் அமைய அடிப்படையானது – தொல்காப்பிய உரியியல்,மரபியல்
277.   நினைவு மஞ்சரி நூலாசிரியர் – உ.வே.சா.
278.   நீதி தேவன் மயக்கம் நூலாசிரியர் - அறிஞர் அண்ணா
279.   நீரும் நெருப்பும் கவிதைத் தொகுப்பாசிரியர் – சுரதா
280.   நீலகேசி உரையின் பெயர் – நீலகேசி விருத்திய சமய திவாகரம்
281.   நூற்றெட்டுத் திருப்பதிக் கோவை  எடுத்துக்காட்டு நூல் – மாறனலங்காரம்
282.   நெஞ்சறிவுறுத்தல் பாடியவர் – வள்ளலார்
283.   நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல் - முல்லைப்பாட்டு
284.   நெஞ்சில் ஒரு முள்  நாவலாசிரியர் – மு.வரதராசன்
285.   நெஞ்சுக் கலம்பகம் பாடியவர்- புகழேந்திப் புலவர்
286.   நெடு நல்வாடை ஆசிரியர் - நக்கீரர்
287.   நெடு நல்வாடை நூலின் அடிகள் – 183
288.   நெடுங்கடை  - வீட்டின் முன்
289.   நெடுந்தொகை  - அகநானூறு
290.   நெடுநல்வாடை ஆராய்ச்சி  நூலாசிரியர் – கே.கோதண்டபாணிப் பிள்ளை
291.   நெடுமொழி - தற்புகழ்ச்சி
292.   நெல்லும் உயிரன்றே ,நீரும் உயிரன்றே,மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் – மோசிகீரனார்- புறநானூறு
293.   நேமி நாத இலக்கண நூலாசிரியர் - குணவீர பண்டிதர்
294.   நேர்,நிரை அசைகளை தனி,இணை என்றவர் – காக்கைப்பாடினியார்
295.   பக்திச்சுவை உணர்த்தும் நூல் –திருமுருகாற்றுப்படை
296.   பகை நாட்டை கொள்ளையடித்தல் -மழபுல வஞ்சி                            
297.   பகைவர் மகளிர் கூந்தலைக் கயிறாக்கி யானைகளைக் கட்டி இழுக்கும் செய்தி இடம் பெற்ற நூல் - பதிற்றுப் பத்து
298.   பங்கிம் சந்திரரின் வந்தே மாதரம் வங்கப் பாடலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் -- பாரதி
299.   பச்சை மாமலைபோல் மேனி –என்று பாடியவர் – தொண்டரடிப்பொடியாழ்வார்
300.   பட்டத்து யானை கவிதை நூல் ஆசிரியர் – நா.காமராசன்
301.   பட்டினப்பாலை ஆசிரியர் - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
302.   பட்டினப்பாலை பாட்டுடத்தலைவன் – கரிகாற்பெருவளத்தான்
303.   பட்டினப்பாலையின் வேறு பெயர் – வஞ்சிநெடும்பாட்டு
304.   பண் வகுக்கப் பெற்ற சங்க நூல் – பரிபாடல்
305.   பண்டிதமணி என அழைக்கப் படுபவர் - மு.கதிரேசன் செட்டியார்
306.   பண்டைத் தமிழ் எழுத்துக்கள் நூலாசிரியர் - நா.சுப்பிரமணியன்
307.   பண்டைத்தமிழரும் ஆரியரும் நூல் ஆசிரியர் – மறைமலையடிகள்
308.   பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் – கலித்தொகை
309.   பணவிடு தூது பாடியவர் - சரவணப் பெருமாள் கவிராயர்
310.   பத்தாம் திருமுறை - திருமந்திரம்
311.   பத்திற்றுப் பத்தில் கிடைக்காத பத்து – முதல் பத்து,பத்தாம் பத்து
312.   பத்துக்கம்பன் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்
313.   பத்துப்பாட்டிலுள்ள புற நூல்கள் – 7
314.   பத்துப்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
ஜெ.வி.செல்லையா –இலங்கை
315.   பத்மஸ்ரீ விருது பெற்ற நாடகக்கலைஞர் – டி.கே.சண்முகம்
316.   பத்மாவதி சரித்திரம் எழுதியவர் - அ.மாதவையா
317.   பதிற்றுப் பத்தால் பாடப்படும் மன்னர்கள் – சேரமன்னர்கள்
318.   பதிற்றுப் பத்தில் 2 -6 ஆம் பத்துக்கள் போற்றும் குடி – உதியஞ்சேரல் குடி
319.   பதிற்றுப் பத்தில் 7 -9 ஆம் பத்துக்கள் போற்றும் குடி – இரும்பொறை மரபு
320.   பதிற்றுப் பத்தில் அந்தாதி முறையில் அமைந்த பத்து -  நான்காம் பத்து
321.   பதிற்றுப் பத்தில் ஆறாம் பத்து பாடியவர் – காக்கைப் பாடினியார்
322.   பதிற்றுப் பத்தில் இரண்டாம் பத்தை பாடியவர் - குமட்டூர்க் கண்ணனார் 
323.   பதிற்றுப் பத்தில் நான்காம் பத்தைப் பாடியவர் – காப்பியாற்றுக் காப்பியனார்
324.   பதிற்றுப் பத்து  திணை - பாடாண்திணை
325.   பதிற்றுப் பத்து எட்டாம் பத்து பாடியவர் ,பாடப்பட்டவர்
– அரிசில்கிழார்   / தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
326.   பதிற்றுப் பத்து ஏழாம்பத்து பாடியவர் ,பாடப்பட்டவர்
– கபிலர் / செல்வக்கடுங்கோ வாழியாதன்
327.   பதிற்றுப் பத்து கடவுள் வாழ்த்துப் பாடியவர் – நச்சினார்க்கினியர்
328.   பதிற்றுப் பத்து பாடிய பெண்பாற் புலவர் – காக்கைப்பாடினியார்,நச்செள்ளையார்
329.   பதிற்றுப் பத்து முதன்முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா
330.   பதிற்றுப் பத்துப் பாடல்களின் அடிக்குறிப்பில் உள்ளவை- துறை,வண்ணம்,தூக்கு( இசை)
331.   பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்துப் பாடியவர் – பரணர்
332.   பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்தின் தலைவன் –  இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
333.   பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள்  ஒரே புற நூல் - களவழி நாற்பது
334.   பம்மல் சம்பந்தம் நாடக சபா – சுகுண விலாச சபா
335.   பரணி நூலின் உறுப்புக்கள்- 13
336.   பரமார்த்த குரு கதையாசிரியர் –வீரமாமுனிவர்
337.   பரிபாடல் அடி வரையறை - 25-400 வரை
338.   பரிபாடல் பாடிய புலவர்களின் எண்ணிக்கை – 13
339.   பரிபாடலில் தற்போது கிடைத்துள்ள பாடல் எண்ணிக்கை – 22
340.   பரிபாடலில் வருணிக்கப்படும் நகரம் –மதுரை
341.   பரிபாடலின் பழைய உரைகாரர் – பரிமேலழகர்
342.   பரிபாடலின் மொத்தப் பாடல்கள்– 72 ( எழுபது பரிபாடல் என்பது இறையனார் அகப்பொருள் உரை)
343.   பரிபாடலுக்குப் பண்ணிசைத்தவர் எண்ணிக்கை- 10
344.   பரிமேலழகரின் உரை சிறப்பைக் கூறும் நுண்பொருள்மாலை ஆசிரியர்– திருமேனி ரத்தினக் கவிராயர்
345.   பல்கலைச் செல்வர் என்றழைக்கப்படுபவர்
- தெ.பொ.மீனாட்சி சுந்தரம்
346.   பல்லக்கு - சிறுகதை நூல் ஆசிரியர் – ரா.கி.ரங்கராஜன்
347.   பல்லியம் - பலவகை இசைக் கருவிகள்
348.   பவளமல்லிகை சிறுகதையாசிரியர் -கி.வா.ஜகநாதன்
349.   பழமொழி ஆசிரியர்  – முன்றுறையரையனார் –
350.   பழைய உரை இல்லாத எட்டுத்தொகை நூல் – நற்றிணை
351.   பழைய ஏற்பாடு மொழிபெயர்க்கப்பட்ட மொழி – ஹீப்ரு
352.   பழைய சமஸ்கிருத மொழியின் இலக்கண வகை – சொல்லிலக்கணம்
353.   பள்ளு நாடகத்தின் மூலம் – உழத்திப் பாட்டு
354.   பன்னிரண்டாம் திருமுறையைப் பாடியவர் – சேக்கிழார்
355.   பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் நூலாசிரியர் – ஜெகவீரபாண்டியர்
356.   பாட்டும் தொகையும் எனக் கூறப்படும் இலக்கியம் – சங்கஇலக்கியம்
357.   பாட்டும் தொகையும் பிறந்த காலம் – மூன்றாம் சங்கம்
358.   பாண்டி நன்னாடுடைத்து நல்ல தமிழ் - ஔவையார்
359.   பாண்டிக் கோவை நூல் பாட்டுடைத்தலைவன் – நெடுமாறன்
360.   பாண்டிமாதேவி நாவல் ஆசிரியர் – நா.பார்த்தசாரதி
361.   பாண்டியன் பரிசு ஆசிரியர் – பாரதிதாசன்
362.   பாணபுரத்து வீரன் நாடக ஆசிரியர் – சாமிநாத சர்மா
363.   பாதீடு - பங்கிட்டுக் கொடுத்தல்
364.   பாம்பலங்கார வருக்கக் கோவை பாடியவர் – படிக்காசுப் புலவர்
365.   பாரத அன்னைத் திருபள்ளி எழுச்சிப் பாடியவர் – பாரதியார்
366.   பாரத சக்தி மகா காவியம் – சுத்தானந்த பாரதியார்
367.   பாரத வெண்பா பாடியவர் - பெருந்தேவனார்
368.   பாரதப் போரில் இருபடைகளுக்கும் உணவளித்த மன்னன்
– பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்
369.   பாரதப்போரில் உணவு வழங்கிய மன்னன்
– சோழன் குலமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
370.   பாரதிதாசனின் அழகின்சிரிப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் –  பரமேஷ்வரன்
371.   பாரதிதாசனைப் பாவேந்தர் என்றவர் - தந்தை பெரியார்
372.   பாரதியின் கண்ணன் பாட்டு,குயில்பாட்டு,பாஞ்சாலி சபதம்                ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – சேக்கிழார் அடிப்பொடி        என்.இராமச்சந்திரன்
373.   பாரிகாதை நூலாசிரியர் – ரா.ராகவையங்கார்
374.   பாரியின் சிறப்பைப் பாடிய புலவர் – கபிலர்
375.   பாலங்கள் நாவலாசிரியர் - சிவசங்கரி
376.   பாவகையால் பெயர்பெற்ற தொகைநூல் – கலித்தொகை , பரிபாடல்
377.   பாவைகூத்துச் செய்தி இடம்பெற்ற நூல் – குறுந்தொகை  
378.   பிசிராந்தையார் சேரனுக்குத் தூது அனுப்பியது – அன்னச்சேவல்
379.   பிசிராந்தையார் புலவரின் நாடு – பாண்டியநாடு
380.   பிரஞ்சு மொழியை ஆராயத் தோன்றிய முதல் நிறுவனம் – பிரஞ்சு அகாடமி – கி.பி.10
381.   பிரபுலிங்க லீலை ஆசிரியர் - சிவப்பிரகாச சுவாமிகள்
382.   பிரயோக விவேகம் ஆசிரியர் – சுப்பிரமணிய தீட்சிதர் – 17 –ஆம் நூற்றாண்டு
383.   பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் – 10
384.   பிறந்ததெப்படியோ? நூலாசிரியர் – தெ.பொ.மீ.
385.   புண்ணுமிழ் குருதி எனும் அடி இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து
386.   புணர்ச்சி விதியைக் கூறியவர் - புத்தமித்திரர்
387.   புதியதும் பழையதும் நூலாசிரியர் - உ.வே.சா
388.   புதுக்கவிதை வடிவில் முதன்முதலில் கவிதை எழுதியவர் – ந.பிச்சமூர்த்தி
389.   புதையல் நாவலாசிரியர் - கலைஞர் கருணா நிதி
390.   புராட்டஸ்டண்ட் கிருத்துவர் பயன்படுத்தும் பைபிளை மொழிபெயர்த்தவர் – போவர் -1871
391.   புராணங்கள் எண்ணிக்கை – 18
392.   புலவர் கண்ணீர் நூலாசிரியர்                  - மு.வரதராசன்
393.   புலவர் புராணம் பாடிய ஆசிரியர் - தண்டபாணி சுவாமிகள்
394.   புலியூர் யமக அந்தாதி நூலின் ஆசிரியர் – கணபதி ஐயர்
395.   புறநானூற்றில் அமைந்து வரும் பா –அகவற்பா
396.   புறநானூற்றில் ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் – 14
397.   புறநானூற்றின்  கிடைக்காத பாடல் – 267,268
398.   புறநானூற்றின் பழைய உரை கிடைத்துள்ள பாடல் எண்ணிக்கை - 260
399.   புறநானூற்றின் பாடல் எண்ணிக்கை – 399+ கடவுள் வாழ்த்து

400.   புறநானூற்றின் பாடலின் அடியளவு – 4 -40



3 comments:

  1. செய்திகள் மிக அருமையாக இருந்தது. பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. நன்றி

    ReplyDelete
  2. தங்களின் கல்விப்பணி வணங்கதற்குரியது.மிக்க நன்றி!

    ReplyDelete
  3. தேர்வுக்கு பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. பாராட்டுக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H