
வாழப்பாடி :கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், தனியார் பள்ளி பெண் முதல்வர், டீ விற்பனை செய்து வருகிறார்.
சேலம்
மாவட்டம், வாழப்பாடி அருகே, சோமம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா, 35;
மனைவி செல்வி, 32. இவர், முதுநிலை இயற்பியல் மற்றும் பி.எட்., ஆசிரியர்
பட்டம் பெற்றுள்ளார்.
இவரது கணவர் சிவா நடத்தி வரும் மழலையர்
பள்ளியில், முதல்வராக பணிபுரிந்து வருகிறார். மார்ச், 24 முதல், ஊரடங்கு
அமலில் உள்ளதால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.இதனால், வேலை இழந்த இவர்,
பள்ளிக்கு எதிரே வண்ணாத்திகுட்டை பஸ் ஸ்டாப் அருகில், ஆவின் பாலகம்
பெட்டிக் கடையில், டீ விற்பனை செய்து வருகிறார்.
இவ்வாறு, அவர் கூறினார்.








