பல்வேறு போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ்களை பதிவேற்ற, டி.என்.பி.எஸ்.சி., உத்தரவிட்டுஉள்ளது.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:தடய அறிவியல் துறையில், இளநிலை அறிவியல் அதிகாரி பணிக்கான தேர்வில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள்; ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பணிகளுக்கு தேர்வானவர்கள். தமிழக சிறை துறையின், ஜெயிலர் பணிக்கு தேர்வானவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களை, டி.என்.பி.எஸ்.,சிக்கு ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.தமிழக அரசு கேபிள், 'டிவி' நடத்தும் சேவை மையங்களுக்கு சென்று, நாளை முதல் வரும், 14ம் தேதிக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறுவோரின் பெயர்கள் இறுதி பட்டியலில் இருந்து நீக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.









