வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. ஆனாலும் ஒரு சில தினங்கள் அதிகம் பெய்யும் மழை நிலையில், மற்ற தினங்கள் மழை இல்லை.
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.