கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழக மக்கள் முகக்கவசம், தனிநபர் இடைவெளி கட்டாயம் பின்பற்றுவதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எழுதிய கடிதத்தில் தெரிவித்து இருப்பதாவது,
முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு செல்வது தற்போது அதிகரித்துள்ளது. தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டமாக இருப்பதும் அதிகரித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் மீண்டும் கொரோனா அதிகரிக்கும்.
திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அதிகமானோர் கூடும் இடங்களில் கொரோனா வழி காட்டிய நெறிமுறைகளைப் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
* பொது இடங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மாஸ்க் அணிவது உறுதி செய்ய வேண்டும். அணியாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த அமல்படுத்த வேண்டும்.
* தனிமனித இடைவெளி இல்லாமல் மக்கள் கூடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
* திருமணங்கள், வணிக வளாகங்கள், பொது இடங்கள் மற்றும் சந்தைகளில் தனிமனித இடைவெளி மற்றும் முக கவசம் அணிவதை கண்காணிக்கவேண்டும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.










