
நிவர் புயலின் தற்போதைய நிலை குறித்து (இரவு 8.10 மணி) சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, நிவர் புயல் சென்னையில் இருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
புதுச்சேரியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. கடலூரிலிருந்து 95 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது.
தற்போது மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் இந்தப் புயல் கரையை நெருங்கி வருகிறது. இந்தப் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று நள்ளிரவு 2 மணிக்கு மேல் புயல் கரையை கடக்கும் என்று தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைவர் எஸ் என் பிரதான் தகவல் தெரிவித்துள்ளார்.
மிரளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் ஒரு லட்சம் பேரை மீட்டு உள்ளதாகவும், புதுச்சேரியில் ஆயிரம் பேரை மீட்டு உள்ளதாகவும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைவர் எஸ் என் பிரதான் பேட்டியளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








