விமான துறையில் கேள்விப்படாத விஷயங்கள் ஏதாவது கூற முடியுமா? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


விமான துறையில் கேள்விப்படாத விஷயங்கள் ஏதாவது கூற முடியுமா?

 

முதலில் சம்பளத்தை பார்க்கலாம், Co-pilot என்று சொல்ல படும் Junior First Officer க்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை இருக்கும்.

அப்புறம் 700-800 மணி நேரம் விமானம் ஒட்டிய பிறகு First Officer ஆகலாம், அப்புறம் உங்கள் சம்பளம் வேற லெவல், மூன்றில் இருந்து ஏழு லட்சம் வரை இருக்கும். விமான சிப்பந்திகளக்கு மாதம் 30-50 ஆயிரம் சம்பளம்.

ஒரு விமானம் மேலே எழும்புவதற்கு ஓட கூடிய தூரம் 2-3 கிலோமீட்டர், அது ஓட கூடிய வேகம் 240-270 கிலோமீட்டர். இறங்கும் போது 20-30 கிலோமீட்டர் வேகம் குறையும்.

சில வித்தயாசமான விதி முறைகள் இங்கு பின்பற்ற படுவது உண்டு.

விமான ஓட்டிகள் தாடி வைக்க கூடாது, முழு கை சட்டை போட கூடாது.

சிப்பந்திகள் முழு கை சட்டை போடலாம், ஆனால் தாடி வைக்க கூடாது, அவர்களுக்கு நீச்சல் தெரிந்து இருக்க வேண்டும், முகத்தில் பரு இருக்க கூடாது, ரொம்ப உயரமாகவும் இருக்க கூடாது, ரொம்ப குள்ளமாகவும் இருக்க கூடாது.

விமானத்தின் முக்கியமான ஒரு அங்கம் “Black Box”, நாம் தான் அவ்வாறு குறிப்பிடுகிறோம், ஆனால் அந்த துறையில் இருப்பவர்கள் அதை FDR என்பார்கள், அந்த கருப்பு பெட்டியில் FDR மட்டுமல்ல CVR இம் இருக்கும். அதற்கு பெயர் கருப்பு பெட்டி தான் ஆனால் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

FDR - Flight data recorder

CVR - Cockpit voice recorder

இது விமானத்தின் வாலில் இருக்கும், ஏன் என்றால் விபத்து ஏற்பட்டால் அந்த பகுதி அவ்வளவு எளிதில் உடையாது.

இந்த கருப்பு பெட்டியை கண்டு பிடித்தவர் ஆஸ்திரேலியா விஞ்ஞானி David Warren, 1957.

அது என்ன சில விமானத்தில் மட்டும் ஒரு வெள்ளை வால் போல் வருகிறது. அது புகை என்று எல்லோர்க்கும் தெரியும், அந்த விமானம் வெகு உயரத்தில் பறப்பதால் அந்த புகை காற்றில் கரைவது இல்லை, அந்த இடத்தில் காற்றின் அடர்த்தி அதிகமா இருக்கிறது என்று அர்த்தம்.

ஆங்கிலத்தில் அந்த புகையை Contrail என்று சொல்லுவார்கள்.

உள்ளூர் விமானங்கள் உயரம் குறைவாக பறக்கும், வெளிநாடு செல்லும் விமானங்கள் கொஞ்சம் உயரம் அதிகமா பறக்கும். குறைந்தது 10000 அடி முதல் அதிகபட்சமாக 44000 அடி வரை பறக்கும். 66000 அடி கூட பறக்க இயலும், ஆனால் அனுமதி கிடையாது.

பாதுகாப்பு விதிமுறைகள்:

ஒரு விமானிக்கு உச்சா வருகிறது என்றால், ஒரு பணி பெண்ணை அழைத்து cockpit இல் உட்கார வைத்து விட்டு தான் செல்ல வேண்டும். ஒரு வேலை அந்த மற்றொரு விமானி தூங்கி விட்டாலோ அல்லது இறந்து விட்டாலோ அந்த cockpit டின் கதவை திறந்து விடுவதற்கு.

நீண்ட நேர பயணபடும் விமானத்தில் விமானிகள் உறங்குவதற்கு தனியாக பங்க் பெட் உண்டு.

நீண்ட நேர பயணபடும் விமானத்தில், அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை விமான பணிப்பெண் விமானியுடன் பேச வேண்டும். இரண்டு விமானிகளும் தூங்கி இருக்கலாம் அல்லது இரண்டு பேரும் இறந்து இருக்கலாம். இது ஒரு அதிகபட்ச பாதுகாப்பு முறை தான், இருந்தாலும் இதை கடைபிடிக்க வேண்டும்.

அப்படி ஒரு அவசியம் ஏற்பட்டால் விமான பணி பெண்ணால் cockpit அறைக்குள் நுழைய முடியும், ஒரு ரகசிய எண்ணை பதிவு செய்தால்.

கூடுதல் தகவல்: உங்கள் கழிவறையில் உள்ள “Toilet seat” இல் இருக்கும் கிருமியின் அளவு 265 CFU (Colony forming units), அதுவே விமானத்தில் உள்ள tray யில் இருக்கும் கிருமியின் அளவு 2,155 CFU.

விமானத்தில் வழங்க படும் உணவு அவ்வளவு சுவையாக இருக்காது, அதற்கு காரணம், உயர் காற்று அழுத்தினால், உங்களுக்கு வாசனை அறியும் திறன் குறைந்து விடும். மேலும் உங்களுக்கு இனிப்பு, புளிப்பும் பகுத்து அறியும் திறனும் மட்டு பட்டு விடும்.

கூடுமானவரை விமானத்தில் வழங்கப்படும் உணவை தவிர்த்து விடுங்கள்.

ஏன் என்றால், அது குறைந்தது 6 மணி நேரம் முன்பு தயாரித்து, நீங்கள் விமானம் ஏறும் முன்பு சூடு ஏற்ற பட்டு இருக்கும்.

அப்புறம் படத்தில் வட்டமிட்ட sign board (STOL - Short takeoff and landing), சின்ன விமானங்கள் அதை உபயோகித்து கொள்ள… அது போல இன்னும் சில குறியிடுகள் உள்ளன L - Left, R - Right & C - Center.

இன்னும் நிறைய இருக்கு, நான் படித்ததை சிலவற்றை மட்டும் பதிவு செய்துள்ளேன், அந்த துறையில் இருப்பவர்கள் இன்னும் அறிவார்கள், அவர்களும் பதிவு இட்டால், நாம் மேலும் அறிந்து கொள்ளலாம்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H