
உணவில் அடிக்கடி பிரண்டைத் துவையல், வேப்பம்பூ ரசம், இஞ்சித் துவையல், கொத்தமல்லி, புதினா மற்றும் கறிவேப்பிலைத் துவையல் செய்து சாப்பிட்டு வருவது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புளித்த ஏப்பம் போன்றவற்றிலிருந்து நிவாரணம் தரும். அதிமதுரத்தைப் பொடியாக்கிச் சுவைப்பது, சாப்பிட்டவுடன் வெற்றிலை போடுவது, புதினா ஜூஸ் போன்றவையும் இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க உதவும்.
திரிபலாசூரணம் 1தேகரண்டி இரவில்,200மிலி வெந்நீரில் கொள்ள அஜீரணம், புளியேப்பம், மலச்சிக்கல் குணமாகும்.
அடிக்கடி ஏப்பம் வருவதை குணமாக்க வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து அதனுடன் இஞ்சி சாறுடன் கலந்து உட்கொள்ள வேண்டும்.
குளிர்ச்சியான தண்ணீரை குடித்து வந்தால், ஏப்பத்தில் இருந்து விடுபடலாம்.
அடிக்கடி ஏப்பம் வரும் போது, ஒரு கப் புதினா டீ குடித்தால், ஏப்பம் வரும் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடலாம்.
ஒரு கப் வெதுவெதுப்பான ப்ளாக் டீயை குடித்தால் ஏப்பத்திலிருந்து நிவாரணம் பெறலாம்.
இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி அது மூழ்குமளவு எலுமிச்சைச்சாறு விட்டு தேவைக்கேற்ப இந்துப்பு சேர்த்து வெயிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். நன்கு உலர்ந்த நிலையில் அந்த இஞ்சித்துண்டை எடுத்து வாயில் போட்டு சுவைத்து வந்தால் புளித்த ஏப்பத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.








