பள்ளிக் கட்டணத்தை கட்ட நிர்பந்திக்க கூடாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகள் அனைத்தும் நடப்பு கல்வி ஆண்டிற்கான கட்டணத்தில் மீதமுள்ள 35 சதவீதத்தை பிப்ரவரி மாதத்திற்குள் வசூலித்து கொள்ளலாம் என சென்னை உயிர் நீதி மன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.கொரோனா முடக்கம் காரணமாக மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வரும் நிலையில் பள்ளிக் கட்டணத்தை முழுமையாக கட்ட முடுயாத சூழல் ஏற்பட்டது.
செப்டம்பர் 30 வரை 40 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனக் கூறப்பட்ட நிலையில் மீதமுள்ள 35 சதவீதம் கட்டணத்தை வசூலிக்க தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுபற்றி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது, "கல்விக் கட்டணம் வசூல் செய்வது குறித்து பெற்றோர்களை வற்புறுத்தக் கூடாது,உரிய கால அவகாசம் கொடுக்க வேண்டும் என தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.