அண்டை மாநிலத்தில் 10, 12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் உறுதி
இந்த நிலையில்
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தற்போது 10, 12 வகுப்புகளுக்கு
பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. முதல்வர் பினராய்
விஜயன் அவர்கள் தலைமையில் நடந்த இந்த ஆலோசனையில் 10 மற்றும் 12ம்
வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது என்று உறுதி செய்யப் பட்டது
இதனையடுத்து இந்த தேர்வின் அட்டவணை கேரள மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான keralapareekshabhavan.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கேரளாவைப் போலவே தமிழகத்திலும் 10, 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்









