வெளிநாட்டில் வசிக்கும் பிரிட்டன் குடிமக்களுக்காக பிரிட்டனின் நான்கு பகுதிகளின் காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வருகிறது தனியார் நிறுவனமான MY BAGGAGE. இதன் மூலம் வெளிநாடு வாழ் பிரிட்டன் மக்கள் தங்களுக்கு தேவையுள்ள நேரங்களில் தாய்நாட்டின் காற்றை கொஞ்சம் சுவாசித்துக் கொள்ளலாம் என்கிறது அந்நிறுவனம்.
இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் இருந்து காற்றை புட்டியில் அடைத்து ஆகாய மார்க்கமாக சப்ளை செய்கிறது இந்நிறுவனம். கண்ணாடி பாட்டிலில் காற்றை பிடித்து, மரத்தினாலான கார்க்கை கொண்டு அதை அடைத்து விற்கிறது.









