மூக்கடைச்சிட்டு மூச்சு விட சிரமமா இருக்கா, இந்த கீரையை சாப்பிடுங்க! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


மூக்கடைச்சிட்டு மூச்சு விட சிரமமா இருக்கா, இந்த கீரையை சாப்பிடுங்க!

மூக்கடைச்சிட்டு மூச்சு விட சிரமமா இருக்கா, இந்த கீரையை சாப்பிடுங்க!


நிலத்தில் தனித்து படர்ந்து தனித்தன்மையோடு வளரக்கூடியதுதான் மூக்கிரட்டை என்னும் மூலிகை செடி. இது ஊதா நிற பூக்களை கொண்டிருக்கும். இலைகள் மேல் பச்சை நிறத்திலும் கீழ்ப்பக்கத்தில் சற்று வெளுத்தும் இருக்கும். வேர் தடிமனாக இருந்தாலும் இவை பூமிக்குள் இருக்கும். தண்டுகள் தனித்து இருக்கும்.

இந்தக்கீரையை புணர்னவா என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலுக்கு உயிரூட்டுவதால் மூக்கிரட்டை இந்த ஒரு பெயரும் உண்டு. இவை என்னவெல்லாம் மாயம் செய்கிறது பார்க்கலாமா?

​ரத்த அணுக்களை அதிகரிக்கும் :

உடலில் ரத்த அணுக்கள் இல்லை என்றால் உடல் சீராக இயங்காது என்று தான் சொல்ல வேண்டும். ரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் என்று மூன்று விதமானாணுக்கள் உள்ளது. இவை நமது எலும்பு மஜ்ஜைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணுக்கள் உடலில் சீராக இருக்க வேண்டுமெனில் வாரம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறை இந்த கீரையை உணவாக எடுத்துகொள்ளலாம்.

மூக்கிரட்டை கீரையுடன் பாசிப்பருப்பு சேர்த்து கூட்டாக செய்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் உடலில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உடலுக்கு பலம் கொடுக்கும். உடலில் வாத நோய்கள் இல்லாமல் செய்யும்.

​மூலத்தை குணப்படுத்தும் :

மலம் கழிக்கும் போது நீர்ச்சத்தோடு இளக்கமாக வெளிவரவேண்டும். ஆனால் மாறாக கடினமாக இருந்தால் அவை மலச்சிக்கலை உண்டு செய்யும். தொடர்ந்து இந்த நீர்ச்சத்து பற்றாக்குறையாகவே இருக்கும் போது மலச்சிக்கல் மூலம் பிரச்சனையைஅ உண்டு செய்யும்.

மூக்கிரட்டை கீரையை சுத்தம் செய்து அம்மியில் வைத்து மை போல் அரைக்க வேண்டும். இதை சிறு நெல்லிக்காய் அளவு எடுத்து வாயில் போட்டு விழுங்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும். தினமும் இரண்டு வேளை காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். மூலக்கட்டி இருந்தாலும் அவை சுருங்கி பூரணமாக குணமாகும்.

மூக்கிரட்டை கீரை எடுத்துகொள்ளும் போது அதிக காரம் உணவில் சேரக்கூடாது. அதிக உஷ்ணம் தரக்கூடிய உணவை எடுக்க கூடாது. உடலுக்கு குளிர்ச்சித்தரும் உணவுகள் தான் எடுக்க வேண்டும். புளிக்கு மாற்றாக எலுமிச்சை பழத்தையும், மிளகாய்க்கு பதிலாக மிளகும் சேர்த்து கொள்ளலாம். மலக்குடலை சுத்தம் செய்யவும் கூடும்.

​வாத நோய்க்கு மருந்தாகும் :

மூக்கிரட்டையை உணவாக எடுத்துகொள்ளும் போது உடலில் இருக்கும் வாதம் இறங்கும். இந்த வாதம் மூட்டுகளில் தங்கி அங்கு கடுமையான வலியை உண்டாக்கும். இந்த வாத நோய் தடுக்க மூக்கிரட்டை உதவும். மூக்கிரட்டையோடு வாத நாராயணன் கீரையையும் சேர்த்து தான் மூட்டுவலிக்கு மருந்தாக முன்னோர்கள் பயன்படுத்தினார்கள்.

மூக்கிரட்டை கீரையை அவ்வபோது உணவில் சேர்த்து வந்தால் மூட்டுவலிகளையும் தவிர்க்க முடியும். சித்தமருத்துவத்தின் படி மூக்கிரைட்டை கீரையின் வேர்களை நீர் விட்டு காய்ச்சி மிதமாக அருந்திவந்தால் வாத நோய்கள் வராமல் தடுக்கும்.

​மூட்டுகளில் வீக்கம் :

மூட்டு வலிகளோடு மூட்டுகளில் வீக்கமும் இருந்தால் அதை குறைக்க மூக்கிரட்டை கஷாயம் குடிக்கலாம். மூக்கிரட்டையுடன் சீரகம், பெருங்காயம் சேர்த்து கொதிக்கவைத்து குடித்தால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் குறையும். தாங்க முடியாதவலி உபாதையும் குறையக்கூடும்.

​கபம் சார்ந்த நோய்கள் :

உடலில் உண்டாகும் கபம் சார்ந்த நோய்களுக்கு மூக்கிரட்டை கீரை பலன் கொடுக்கும் என்கிறது சித்தர் கற்ப முறை. இவை மூச்சுக்குழாயை விரிவாக்கும் தன்மை கொண்டிருக்கிறது என்பதால் ஆஸ்துமா நோய்க்கான மருந்தாக செயல்படுகிறது.

உடலில் நச்சு நீரால் சளியும், மூச்சுத்திணறலும் உண்டாகி மூக்கடைப்பை உண்டாக்கும். மூக்கடைப்பு இருக்கும் போது மூச்சுத்திணறலும் ஏற்பட்டால் மூக்கிரட்டை வேரில் சிறிது மிளகுத்தூள் கலந்து குடித்து வந்தால் மூச்சுத்திணறல் பாதிப்புகள் நீங்கும்.

​உடல் நச்சுக்கள் வெளியேற :

உறுப்புகளில் கழிவை வெளியேற்றும் செயலை இவை செய்கிறது. கல்லீரல் மற்றும் சிறுநீரக கழிவுகளை சிறந்த முறையில் வெளியேற்ற இவை உதவுகிறது.

மூக்கிரட்டை குறித்து ஆய்வு செய்யும் போதுஇவை ரத்தத்தில் அதிகரித்திருக்கும் யூரியா, கிரியேட்டினைன் அளவை குறைப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. இதிலிருக்கும் போயரவினோன் - இ என்னும் வேதிப்பொருளுக்கு உடலில் உண்டாகும் தசைப்பிடிப்புகளை இளக்கும் தன்மை உண்டு. இதயத்தசைகளில் உண்டாக்கும் பாதிப்புகளைத் தடுக்கும்.

☘️☘️☘️

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H