இன்று கிடைத்த ஒரு தகவல் -பென்சன் மற்றும் கமூடேஷன் பற்றியது.
30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension
கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும்
கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம்
சேர்த்து வரும் தொகையாகும்.
உதாரணமாக 30ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000
ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு
(40000+5000)÷2+100= 22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும். இவரே 24
ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100= 18100பென்ஷனாகக்
கிடைக்கும். (அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து
சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக்
கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation
வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.
முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு.
30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப்
பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூபாய் ஹெல்த்
அலவன்ஸூம் சேர்ந்து பென்ஷனாகக்கிடைக்கும் என்று முந்தைய பதிவில் பார்த்தோம்








