எளிதாக கிடைக்கும் லோன்கள்... அதிகரிக்கும் வீட்டுமனை விற்பனை... தரவுகள் கூறுவது என்ன! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


எளிதாக கிடைக்கும் லோன்கள்... அதிகரிக்கும் வீட்டுமனை விற்பனை... தரவுகள் கூறுவது என்ன!


மும்பை: கொரோனா காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிப்பில் இருந்தாலும் நாட்டில் மும்பை உள்பட சில பெரு நகரங்களில் வீட்டு மனை விற்பனை அதிகரித்து உள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

வங்கிகள், நிதி நிறுவனங்களில் வீட்டு கடன்களும் அதிகரித்து விட்டதாக கூறப்பட்டுளது. வீட்டு விற்பனை நிறுவனங்கள் விலையை குறித்து வழங்குவதால் விற்பனை அதிகரித்து காணபடுகிறது என தெரிகிறது.

உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது பொருளாதாரம் மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வந்தாலும், முழுமையாக முன்னேற்றம் அடையவில்லை.இந்த இக்கட்டான காலத்திலும் நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீட்டு மனைகள் விற்பனை அதிகரித்து உளளதாக தகவல்கள் தரவுகள் கூறுகின்றன. வீட்டுக்கான லோன்கள் எளிதாக கிடைப்பதால் வீட்டு மனைகள் விற்பனை அதிகரிக்க காரணம் என கூறப்படுகின்றன.

நைட் ஃபிராங் என்ற நிறுவனத்தின் தரவுகளின்படி மும்பை நகரத்தில் வீட்டு விற்பனை அக்டோபரில் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து இருந்ததாக கூறியுள்ளது. ஜூன் மாத இறுதியில், மும்பையில் வீட்டு விற்பனை விலைகள் 2018 ஆம் ஆண்டின் இதே காலாண்டில் இருந்ததை விட 0.45 சதவீதம் குறைவாக இருந்ததாக மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொந்த வீடு என்பது இந்தியாவில் பாதுகாப்பாகவும், அடையாளமாகவும், கவுரவமாகவும் பார்க்கப்படுவதாலும் அரசு, தனியார் வங்கிகள், இதர நிதி நிறுவனங்கள் மூலம் லோன்கள் எளிதாக கிடைக்கும் வகையில் இருப்பதால் வீட்டு மனைகள் விற்பனை அதிகரித்து வருகிறது.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி அக்டோபரில் அதிக அளவு வீட்டுக் கடன்கள் வழங்கி உள்ளதாக தரவு கூறுகின்றன. தொழில்துறை மற்றும் நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்வதோடு வீடுகளை கட்டி கொடுக்கும் இந்திய கூட்டு நிறுவனத்தின் புதிய பிரிவான கோத்ரேஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ், கடந்த மாதம் தனது அடமான சலுகையை தொழில்துறையில் மிகக் குறைந்த கட்டணத்துடன் அறிமுகப்படுத்தியது.

நாட்டின் ஒட்டுமொத்த கடன்கள் 0.5 சதவீதமாக சுருங்கியிருந்தாலும், ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் வீட்டுக் கடன்கள் 2.6 சதவீதம் அதிகரித்துள்ளன என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.நாட்டின் வங்கிகளில் ஒட்டுமொத்தமாக மோசமான கடன்கள் மார்ச் மாதத்திற்குள் இரண்டு தசாப்தங்களாக 12.5 சதவீத கடனாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 16 ஆண்டுகளில் இந்தியாவில் வங்கிகள், நிதி நிறுவனங்கள் குறைந்த வட்டி விகிதங்கள் அளிக்கின்றன. வீட்டு மனை விற்பனை நிறுவனங்கள் சலுகை விலையில் பல்வேறு வசதிகளுடன் வீட்டு மனைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. இது நுகர்வோர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.இந்தியாவில் 10 பெரிய நகரங்களில் வீட்டு மனை விற்பனை விலை என்பது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிடும்போது 35 சதவீதமாக குறைந்து உள்ளது என்று தரவுகள் கூறுகின்றன.

source: oneindia.com

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H