
ஈரோடு: பெருந்துறையில் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்திவருகின்றனர். அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதற்கு மருத்துவ மாணவர்கள் எதிப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவருகின்றனர். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போது 3,85,000 கல்வி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணமாக ரூ.13,620 -ஐ மட்டுமே வசூலிக்க மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.







