பூஜ்யம் கல்வியாண்டு என்றால் என்ன?
ஒரு
கல்வியாண்டு முழுவதையும் கைவிடுவதே பூஜ்யம் கல்வியாண்டு ஆகும். அதன்படி,
பள்ளிகள் திறக்கப்படாது. பாடங்கள் நடத்தப்படாது. தேர்வுகள் நடக்காது.
உதாரணமாக 2019-20ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு படித்திருந்தால் நடப்பு
கல்வியாண்டு எந்த வகுப்பும் படிக்கவில்லை என்று கருதப்படும். அடுத்ததாக
2021-22ஆம் கல்வியாண்டில் தான் இரண்டாம் வகுப்பிற்குச் செல்வார்கள்.
ஆனால்
புதிதாக சேரும் மாணவர்களுக்குத் தான் பிரச்சினை வரும். நடப்பு
கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு சேர தயாராக உள்ளவர்கள் மற்றும் அடுத்த
கல்வியாண்டில் சேர தயாராக இருப்பவர்கள் என இரண்டு மடங்கு எண்ணிக்கையில்
2021-22ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் சேருவர். மேலும்
நடப்பு கல்வியாண்டில் சேர முடியாதவர்களுக்கு எல்லா வகுப்புகளிலும் ஓராண்டு
தள்ளிப் போகும்.இவ்வளவு சிக்கல்கள் இருப்பதால் தமிழக அரசு தீவிரமாக
ஆராய்ந்து முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை
அனைத்து வகுப்பினரும் தேர்வுகள் எழுதாமல் தேர்ச்சி என்று
அறிவிக்கப்பட்டால், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அரசு
என்ன முடிவு செய்யும்.
காலாண்டு,
அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படாத சூழலில் அவர்களுக்கான மதிப்பெண்களை
எவ்வாறு கணக்கிடப்படும் என பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இது கல்லூரிகளில்
சேரும் மாணவர்களுக்கு பல்வேறு குழப்பங்களையும், சிக்கல்களையும்
ஏற்படுத்தக்கூடும்.
இந்த
ஆண்டு பூஜ்யம் கல்வி ஆண்டாக அறிவிப்பது குறித்து முதலமைச்சர் தான்
முடிவெடுக்க வேண்டும். சூழ்நிலைக்கேற்ப முதலமைச்சர் என்ன முடிவெடுக்கிறாரோ
அந்த முடிவுகளை தான் பள்ளி கல்வித்துறை செயல்படுத்தும்.








