நாடு முழுவதும் இன்று முதல் வணிக சிலிண்டரின் விலை ரூ. 17 அதிகரித்துள்ளது. இதனால், வணிகர்கள் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் இன்று பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதில், பொது மக்கள் தங்கள் இல்லங்களில் சமையலுக்கு பயன்படுத்தும் சிலிண்டர் அல்லாத, வணிகரீதியிலான சிலிண்டர் விலை ரூ.17 உயர்ந்துள்ளது. அதாவது ஒருசிலிண்டர் விலை ரூ.1,446.50 லிருந்து, 17 ரூபாய் அதிகரித்து, ரூ. 1,463.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
மானிய சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமின்றி, ரூ.710 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சிலிண்டர் விலையை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.









