10 கல்வியாண்டாக அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக பணியாற்றும் உடற்கல்வி ஓவியம் தொழிற்கல்வி பாட பகுதிநேர ஆசிரியர்கள் ஆளும் அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் நிரந்தரம் செய்யும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என போர்க்கொடி பிடித்து வருகிறார்கள்.
2017 ஆம் ஆண்டு சட்டசபையில் பணிநிரந்தரம் செய்வோம், அதற்காக கமிட்டியை அமைப்போம் என்ற வாக்குறுதியை இந்த நேரத்திலாவது செயல்படுத்துங்கள் என கேட்டு வருகிறார்கள்.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியது:
கடந்த 2012 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 16ஆயிரத்து 500 பகுதிநேர ஆசிரியர்களை ரூபாய் 5000 தொகுப்பூதியத்தில் நியமித்தார்.
அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு ரூ.2ஆயிரம் உயர்த்தி ரூ.7ஆயிரமாக்கப்பட்டது.
இதனை அடுத்து ரூபாய் 700 அதாவது 10% உயர்த்தி 2017 ஆம் ஆண்டு ரூ.7ஆயிரத்து 700 ஆக்கப்பட்டது.
இந்த குறைந்த தொகுப்பூதியத்தில் இவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.
இவர்களில் 500க்கும் மேலானோர் இறந்துபோய்விட்டனர்.
சிலர் வேறு வேலை தேடிபோய்விட்டனர்.
58 வயதாகி பணிமூப்பால் சிலர் ஓய்வு பெற்றுவிட்டனர்.
இவ்வாறாக 4 ஆயிரம் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுவிட்டது.
16549 பேரில் இப்போது 12483 பகுதிநேர ஆசிரியர்களே பணிபுரிந்து வருகின்றனர்.
பணிநிரந்தரம் செய்ய தொடர்ந்து கேட்டு வருகின்றார்கள்.
ஆனால் 30% அதாவது ரூ.2300 உயர்த்தி ரூ.10ஆயிரமாக கொடுக்க இந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
ஊதிய உயர்வை அரசு அறிவித்தாலும், இதற்காக முதலில் 3 முழுநாட்கள் வேலைசெய்ய அரசாணை வெளியிடப்பட்டு, அடுத்த நாளே மீண்டும் பழையபடி பகுதிநேரமாகவே வைத்து இவர்களை இன்னமும் கவலையடையச் செய்வதாக தெரிவிக்கின்றனர்.
அரசின் இந்த அறிவிப்பு பணிநிரந்தரத்தை தடுக்கிறது.
இதை மறுபரிசீலனை செய்து இந்த இடைக்கால பட்ஜெட்டிலே 12ஆயிரம் குடும்பங்களின் நலனை ஊக்குவிக்க வாழ்வாதாரம் மேம்படுவதற்கு பணிநிரந்தரம் அறிவிப்பை வெளியிட வேண்டும்.
திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வோம் என தருமபுரி கன்னியாகுமரி மயிலாடுதுறை கூட்டங்களில் சொல்லிவிட்டார்.
2016 திமுக தேர்தல் அறிக்கையிலும் ஏற்கனவே வெளியிடவும்பட்டது.
இந்த நிலையில் இந்த பகுதிநேர ஆசிரியர்களை நியமித்த ஆளும் அதிமுக அரசு இன்னமும் பணிநிரந்தரம் செய்ய மறுப்பதை மாற்றிக்கொள்ள வேண்டும்.
12483 பேருக்கு 10ஆயிரம் சம்பளம் கொடுக்க மாதம் ஒன்றுக்கு சுமார் 13 கோடி செலவாகும்.
இதை இன்னொரு மடங்கு அதிகரித்தால் போதும்.
பணிநிரந்தரம் செய்ய பெரிய அளவில் செலவு ஏற்படாது.
ஜாக்டோஜியோ வேலைநிறுத்த நாட்களில் அரசுக்கு உறுதுணையாக இருந்து பள்ளிகளை திறந்து நடத்திய இந்த பகுதிநேர ஆசிரியர்களை ஊக்குவிக்க வேண்டும்.
இதற்கு அதிமுக அரசு மனசு வைத்தால் போதும்.
தேர்தல் என்றாலே வாக்குவங்கி அரசியலாக பார்க்கப்படுகிறது.
இந்த நேரத்தில் 12500 குடும்பங்கள் நிலை இதை ஒட்டியே இருக்கும்.
இங்கனம்:
சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் நம்பர் : 9487257203









