நாட்டில் பல வங்கிகள் இருந்தாலும் அவை அனைத்தும் ஒரே மாதிரி செயல்படுவதில்லை. ஒவ்வொரு வங்கியும் ஒன்றுக்கொன்று தனித்துவம் வாய்ந்தவை. அந்த வகையில் கீழ்க்காணும் 3 வங்கிகள் தனது கஸ்டமர்களுக்கு சேமிப்புக் கணக்குகளில் சிறந்த விகிதங்களை வழங்கிவருகிறது. அதைப்பற்றித் தான் இந்த பதிவில் நாம் காணப்போகிறோம். பல புதிய தனியார் வங்கிகள் மற்றும் சிறு நிதி வங்கிகளைக் காட்டிலும் பொதுத்துறை வங்கிகள் சேமிப்புக் கணக்குகளில் மிகக் குறைந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன. உங்கள் நிதியை சேமிப்புக் கணக்கில் வைத்தால் அதற்கு வங்கிகள் எவ்வளவு வட்டி செலுத்துகிறது என்பதைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டியது அவசியம். உங்கள் அவசர நிதியை பார்க்கிங் செய்வதற்கு சேமிப்புக் கணக்கையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
வட்டி விகிதங்களை முன்னணி தனியார் வங்கிகளுடன் ஒப்பிடல்:
பேங்க் பஜார் தொகுத்த தரவுகளின்படி, IDBI வங்கி சேமிப்புக் கணக்கில் 3.5 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது, அதைத் தொடர்ந்து Bank of Baroda மற்றும் Canara வங்கி 3.2 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன. முன்னணி தனியார் வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களுடன் இதை ஒப்பிடும்போது இந்த வட்டி விகிதங்கள் உண்மையில் போட்டித்தன்மை வாய்ந்தவை. உதாரணமாக, HDFC வங்கி மற்றும் ICICI வங்கி 3 சதவீதம் முதல் 3.5 சதவீதம் வட்டி மற்றும் Kotak Mahindra Bank 3.5 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன.
இருப்பினும், பெரிய பொதுத்துறை வங்கிகளிடம் சேமிப்புக் கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மிகக் குறைந்த வட்டி விகிதங்களையே பெறுகின்றனர். உதாரணமாக, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சேமிப்புக் கணக்கில் வெறும் 2.70 சதவீதத்தை மட்டுமே வழங்குகின்றன. சிறு நிதி வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை பொதுத்துறை வங்கிகளுடன் ஒப்பிடும்போது சிறு நிதி வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிக வட்டி விகிதம் கிடைக்கிறது. உதாரணமாக, AU சிறு நிதி வங்கி மற்றும் உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி முறையே 6 சதவீதம் மற்றும் 6.5 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
மினிமம் பேலன்ஸின் தேவைகள் உள்ளன:
பொதுத்துறை வங்கிகளின் சேமிப்புக் கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் 250 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. ஆனால் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில், அது இல்லை. இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவாகவே உள்ளது. ஏனெனில் பொதுத்துறை வங்கிகள் இந்திய அரசால் சப்போர்ட் செய்யப்படுகின்றன. மேலும் அந்த வங்கிகள், கீழ் மற்றும் நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்களை தங்கள் சேவைகளுடன் அணுகுவதில் அதிக அக்கறை கொண்டுள்ளனர். Axis வங்கி மற்றும் HDFC வங்கிக்கு மினிமம் பேலன்ஸ் தேவை ரூ .2,500 முதல் ரூ .10,000 வரை உள்ளது. ICICI வங்கியைப் பொறுத்தவரை, மினிமம் பேலன்ஸ் தேவை ரூ 1,000 முதல் ரூ 10,000 வரை உள்ளது.
நீங்கள் இருக்கும் இடத்தில் நல்ல பேரை பெற்றுள்ள வங்கிகள், நல்ல சேவை தரநிலைகள், பரந்த கிளை வலையமைப்பு மற்றும் ATM சேவைகளைக் கொண்ட வங்கியைத் தேர்வுசெய்வது முக்கியம்; அப்படி சரியான வங்கியை தேர்வு செய்தீர்களென்றால் சேமிப்புக் கணக்குகளில் அதிக வட்டி போனஸாக கிடைக்கும்
Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
இந்த 3 வங்கிகள் தான் சேமிப்புக் கணக்குகளில் வாடிக்கையாளர்களுக்கு அதிரடியான விகிதங்களை வழங்குகின்றன?
இந்த 3 வங்கிகள் தான் சேமிப்புக் கணக்குகளில் வாடிக்கையாளர்களுக்கு அதிரடியான விகிதங்களை வழங்குகின்றன?
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









