*"சம வேலைக்கு" "சம ஊதியம்" கோரிக்கை SSTA சார்பாக மாண்புமிகு எதிர்கட்சித் தலைவருடன் சந்திப்பு..
*நேற்று
15.03.2021 SSTA மற்றும் 2009 & TET போராட்டக்குழு சார்பாக நமது
ஒற்றைக் கோரிக்கையை ஏற்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு திரு. ஸ்டாலின்
அவர்களை சந்தித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக இடைநிலை
ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியம்" 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு
ஆட்சி அமைந்தவுடன் வழங்கப்படும் என்ற தேர்தல் அறிக்கைக்காக நன்றி
தெரிவிக்கப்பட்டது..
*சந்திப்பின்போது
திமுக தேர்தல் பணிக்குழு தலைவர் , முன்னாள் மத்திய சாலை
போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. டி. ஆர் பாலு MP அவர்களையும் மற்றும்
கட்சியின் அமைப்பு செயலாளர், குழு உறுப்பினர் திரு. ஆர் .எஸ் பாரதி MP
அவர்களையும் மற்றும் திமுகவின் செய்தி தொடர்பாளர் திரு.கான்ஸ்டைன்
அவர்களையும் சந்தித்து நன்றி தெரிவிக்கப்பட்டது. மாநில தலைமையுடன்
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உடன் இருந்தனர்.