Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் அற்புதமான நாட்டு மருந்து.
ஹோட்டல்
உணவுகளை தொடர்ச்சியாக உட்கொண்டு வரும் போது, உடலில் கொலஸ்ட்ராலின் அளவு
அதிகரித்து, உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை சந்திக்கக் கூடும். என்ன தான்
கொலஸ்ட்ரால் உடலில் சில முக்கிய பணிகளை செய்து வந்தாலும், அதன் அளவு
அதிகமாகும் போது, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் பல நோய்களுக்கு
உள்ளாக்கும். இங்கு கொலஸ்ட்ராலைக் குறைக்க மருத்துவர்களே பரிந்துரைக்கும்
அற்புத நாட்டு மருந்து கொடுக்கப் பட்டுள்ளது.
அதைப் படித்து தயாரித்து, அவற்றை உட்கொண்டு வர, விரைவில் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.
தேவையான பொருட்கள்:
விதை இல்லாத பேரிச்சம் பழம் - 3-4
இஞ்சி சாறு- 2 டீஸ்பூன்
பேரிச்சம் பழம்.
பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
இது இரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்புக்களை கரைத்து விடும்.
இஞ்சி:
இஞ்சியில்
உள்ள மருத்துவ குணத்தால், கொலஸ்ட்ரால் அளவு வேகமாக குறையும். ஏனெனில்
இதில் உள்ள குறிப்பிட்ட அமிலம் உடலில் தேங்கும் அதிகப்படியான கொலஸ்ட்ராலைக்
கரைத்து விடும்.
செய்முறை:
முதலில்
மேலே கொடுக்கப் பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, அத்துடன் சிறிது
தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
உட்கொள்ளும் முறை:
தயாரித்து
வைத்துள்ள கலவையை தினமும் இரவில் உணவு உட்கொண்ட பின் சாப்பிட வேண்டும்.
இப்படி 2 மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட
கொலஸ்ட்ரால் முழுமையாக கரைந்து விடும்.
குறிப்பு:
இந்த
இயற்கை மருந்தை தொடர்ந்து உட்கொண்டு, அதோடு சரியான டயட் மற்றும் உடற்
பயிற்சியை செய்து வந்தால், அதிகப் படியான கொஸ்ட்ரால் குறையும். முக்கியமாக
இந்த மருந்தை உட்கொண்டு வரும் போது, உணவுகளில் எண்ணெய் சேர்ப்பதைத்
தவிர்க்க வேண்டியது அவசியம்.
*வாழைப்பூ அடை.*
தேவையான பொருட்கள்:
குதிரைவாலி அரிசி - 100 கிராம்,
மைசூர் பருப்பு - 30 கிராம்,
உளுத்தம்பருப்பு - 50 கிராம்,
முளைக்கட்டிய பாசிப்பயறு - 25 கிராம்,
வாழைப்பூ - முக்கால் கப்,
பெரிய வெங்காயம் - 1,
வரமிளகாய் - 4 அல்லது 5,
மல்லித்தழை - சிறிதளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு,
அரிசி தவிட்டு எண்ணெய்,
இந்துப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாழைப் பூவை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும்.
எல்லா
வகைப் பயறு, பருப்பு, அரிசி வகைகளை ஒன்றாக தண்ணீரில் ஊறவைக்கவும்.
வெங்காயம், மல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். இஞ்சி, உப்பு, வரமிளகாயை
அரைத்து, இதனுடன் ஊறவைத்த பருப்பு வகைகளையும் சேர்த்து கரகரப்பாக
அரைக்கவும். அரைத்த மாவில், பொடியாக நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம்,
மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். தோசைக் கல்லில் எண்ணெய்
தடவி அடைகளாக வார்க்கவும். மூடி போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
பயன்கள்:
குதிரைவாலி,
முளைக்கட்டிய பயறு ஆகியவை கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். மைசூர் பருப்பு,
அடை மிருதுவாக இருக்க உதவுவதோடு, புரதம் மற்றும் இரும்புச் சத்தைத் தரும்.
வாழைப்பூ, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியில் உள்ள நார்ச்சத்து, கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவியாக இருக்கும்.
*வெந்தயக் கீரை சப்பாத்தி.*
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - ஒரு கப்,
சோயா மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
வெந்தயக் கீரை - முக்கால் கப்,
மிளகாய்தூள் - கால் டீஸ்பூன்,
ஆலிவ் ஆயில் - அரை டீஸ்பூன்,
உப்பு,
அரிசி தவிட்டு எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
கால்
டீஸ்பூன் அரிசி தவிட்டு எண்ணெயில், பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரையைச்
சேர்த்து வதக்கி, இறக்கும்போது, மிளகாய்தூள் சேர்த்து மேலும் வதக்கி
இறக்கவும். கோதுமை மாவில் எல்லாப் பொருட்களையும் சேர்த்து, வெதுவெதுப்பான
நீர்விட்டு, சப்பாத்தி மாவு பிசைந்துவைக்கவும். ஆலிவ் ஆயிலை, சப்பாத்தி
மாவு பிசையும்போது சேர்க்காமல், சப்பாத்தியை இடும்போது, நடுவில் 2, 3
சொட்டு விட்டு தடவி, மீண்டும் மடித்துத் தேய்க்க வேண்டும். தோசை கல்லில்,
எண்ணெய் சேர்க்காமல் சப்பாத்திகளைச் சுட்டு எடுக்கவும்.பயன்கள்: சோயா மாவு
மற்றும் வெந்தயக் கீரையில் ஒமேகா 3 அடங்கி உள்ளது. வெந்தயக் கீரை, மீன்
எண்ணெய்க்குச் சமம். ஆலிவ் ஆயிலிலும் ஒமேகா 3 உள்ளது. இந்தச்
சப்பாத்தியில், அதிகப் புரதமும் நார்ச்சத்தும் வைட்டமின் ஏ சத்தும்
இருக்கிறது. இவை எல்லாமே கொலஸ்ட்ராலைக் குறைக்கப் பெரிதும் உதவும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









