27.08.2022 அன்று நடைபெற உள்ள CRC பயிற்சி குறித்த தகவல்கள்.
அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களின் கனிவான கவனத்திற்கு.
18.08.2022
இன்று 11.30 மணி அளவில் மாநில திட்ட இயக்ககத்தில் நடைபெற்ற கூட்டத்தில்
27.8.2022 - குறுவள மையம் பயிற்சி பற்றி கீழ்கண்ட தகவல்கள்
வழங்கப்படுகிறது.
1) 11 &12 கையாளும் முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அடுத்த மாதம் நடைபெற உள்ளது.27.8.22 பயிற்சி இல்லை.
2) 1 to 3, 4 to5, and 6 to10, வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு 27.8.2022 பயிற்சி கட்டாயம் நடைபெறும்.
3)
இந்த சிஆர்சி பயிற்சிக்கு ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட கருத்தாளர்கள்
(facilitators) -TNSED app மூலமாக, I m facilitator, பயிற்சி மையத்தின்
உடைய UDISE மற்றும் crc handling class ஆகியவற்றை இன்று மாலைக்குள் பதிவு
செய்தல் வேண்டும்.
4) Facilitator- க்கு 8 videos மாநிலத் திட்ட இயக்கத்தில் இருந்து தரப்பட்டவுடன் அவர்களுக்கு பகிரப்படும்.
5)
அனைத்து கருத்தாளர்களுக்கும் வருகின்ற திங்கட்கிழமை 11 முதல் 12 மணி வரை
youtube வாயிலாக live session உள்ளதை தெரியப்படுத்த வேண்டும்.
(ஞாயிற்றுக்கிழமைக்குள் 8 videos முழுமையாக பார்த்திருத்தல் வேண்டும்).