இறைவனை வழிபடுவதற்காக ஆலயங்களுக்குச் செல்லும் அனைவருக்கும், ஆலயத்தில் உள்ள அர்ச்சகர் விபூதி, குங்குமம் பிரசாதமாக கொடுப்பார்.
அப்படி தரப்படும் பிரசாதமான விபூதி, குங்குமத்தை நெற்றியும் வைக்கும் முறையும் சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட விரல்களைப் பயன்படுத்தியே நெற்றியில் விபூதியை பூசிக்கொள்ள வேண்டும் என்பது ஐதீகமாக இருக்கிறது. நாம் நெற்றியில் அணியும் விபூதியை, எடுக்க சில விரல்களை பயன்படுத்தும் போது தீமையும், சில விரல்களை பயன்படுத்தும் போது நன்மையும் நிகழ்வதாக சொல்கிறார்கள்.
நெற்றியில் அணியும் திருநீறு விளக்கும், உயர்ந்த தத்துவம் என்னவென்றால், 'நாடாண்ட மன்னனும், நூல் பல கற்ற பண்டிதரும் கடைசியில் பிடி சாம்பல் ஆவார்கள்' என்பதாகும்.
மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகமாக இருப்பதால், அதன் வழியாக அதிக சக்தி வெளிப்படுவதோடு, இயற்கையின் மற்ற சக்தி அம்சங்களையும் தமக்குள் ஈர்த்துக்கொள்ளும் வர்ம பகுதியாகவும் அது உள்ளது. சூரிய கதிர்களின் சக்தி அலைகளை ஈர்த்து, நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீறு நன்றாக செய்யும். அதனால் நெற்றியில் திருநீறு பூசுவது என்பது பல உள்ளர்த்தங்களை கொண்டதாக அறியப்படுகிறது.
திருநீறு மகிமை
நெற்றியில் பிரம்மன் எழுதிய தலையெழுத்தை அழித்து, இறையருளை பதிக்கும் தன்மையும் திருநீற்றுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த விபூதியை நெற்றியில் எப்படி எடுத்து பூச வேண்டும் என்று சில சம்பிரதாயங்கள் உள்ளன. ஆள்காட்டி விரலை, விபூதி அணிவதற்கு பயன்படுத்துவதும் தவறு. அந்த விரலைக் கொண்டு விபூதி பூசுவதால், பொருள் இழப்பு உண்டாகும். அதே போல் நடுவிரலைக் கொண்டும் விபூதி அணிந்து கொள்ளக் கூடாது. நடுவிரலில் விபூதியைத் தொட்டு நெற்றியில் இட்டுக் கொண்டால் நிம்மதியின்மை ஏற்படும்.
எந்த விரலில் பூசுவது
விபூதியை அணிந்து கொள்வதற்கு மோதிர விரலே சரியான ஒன்று. மோதிர விரலினால் விபூதியை தொட்டு அணிந்து கொள்ளும் அனைவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அடைவார்கள். சிறு விரல் எனப்படும் சுண்டு விரலும் விபூதி அணிந்து கொள்ள ஏற்றதல்ல. இதன் மூலம் விபூதி அணிந்து கொண்டால் கிரக தோஷங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. மோதிர விரல் மற்றும் கட்டை விரல் இரண்டையும் சேர்த்து விபூதியை எடுத்து, மோதிர விரலால் விபூதியை நெற்றியில் அணிந்து கொள்பவர்களுக்கு, உலகமே வசப்படும். அவர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைப் பெறும்.
கீழே சிந்த வேண்டாம்
திருநீரு பூசும் போது எக்காரணம் கொண்டும் திருநீர் கீழே சிந்துதல் கூடாது. அது போல கோயில்களில் நாம் நெற்றியில் ஈட்ட பிறகு எஞ்சிய திருநீற்றை கோயில் தூண்களில் போடுதலும் கூடாது. அதனை, ஒரு இலையில் மடித்து பத்திரப்படுத்தலாம் , முடிந்தால் மற்றவருக்குக் கொடுக்கலாம்.
எப்படி பூச வேண்டும்
ஆள்காட்டி விரலால் தொட்டு, பொட்டு போல் பூசுதல் கூடாது. நெற்றி நிறையப் பூசுதல் வேண்டும். அவ்வாறு திருநீற்றை நெற்றி நிறைய பூசும் போது , நமது முன் வினையால், பிரம்மன் நமது தலையில் எழுதியிருக்கும் கெட்ட முன்வினைப் பயன்கள் ஈசனின் அருளால் அழிக்கப்படும் என்பது ஐதீகம். அது போல, பையில் உள்ள திருநீற்றை தலைகீழாகக் கவிழ்த்தல் கூடாது. ஈர உடையுடனும், ஒற்றைத் துணி உடுத்திக் கொண்டும், ஆடை இன்றியும் திருநீற்றைப் பூசிக் கொள்ளுதல் கூடாது.
என்ன பலன் கிடைக்கும்
திருநீற்றை புருவ மத்தியில் இட்டால் வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம். தொண்டைக்குழியில் இட்டால் நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம். நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதியில் இட்டால் தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், வீபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.
எந்த இடத்தில் பூசக்கூடாது
நாம் தினமும் விபூதி வைத்துக்கொள்வதற்கு பின் அறிவியல் உண்மை ஒளிந்துள்ளது. மனித உடலில் நெற்றி என்பது மிகவும் முக்கியமான பாகமாகும். நெற்றியின் வழியாகவே மனித உடலானது அதிக அளவிலான சக்தியை வெளியிடவும் உள்ளிழுக்கவும் செய்யும். புகை நிற விபூதியும் பொன்னிற விபூதியும் கூடாது. தலையை கவிழ்த்தும் நடுங்கிகொண்டும் வாயை திறந்து கொண்டும் பேசிக்கொண்டும் பூசக்கூடாது. ஒருவிரலால் கண்டிப்பாக எடுக்கவோ தரிக்கவோ கூடாது சண்டாளர் பாவிகள் முன்னும் அசுத்த நிலத்திலும் வழி நடையிலும் பூச கூடாது. தீட்சை பெற்றவரும் சந்தியா காலம் தவிர மற்ற காலங்களில் உத்தூலனமாகவே பூச வேண்டும். வலது கை பூசும்போது இடது கை இடுப்புக்கு கீழ் தொங்ககூடாது.
பாவம் சேரும்
விபூதியை கீழே சிந்தக்கூடாது. கொடுப்பவர் கீழாகவும் வாங்குபவர் மேலாகவும் நின்று வாங்ககூடாது
திண்ணை
ஆசனம் பலகை குதிரை சிவிகை இவற்றின் மீது அமர்ந்து விபூதி வாங்ககூடாது.
ஒருவர் திருநீறு தருகிறார் என்றால் வாங்க மறுக்க கூடாது. ஆலயங்களில்
வாங்கிய திருநீற்றை தூண்களிலும் சிற்பங்களிலும் போட்டுவிட்டு வருவது ஆலயம்
செல்லாததை விட கொடிய பாவசெயல்
விபூதி மந்திரம்
விபூதி பூசிக் கொள்ளும் போது இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் அதன் மகிமைகளை நீங்களே காலப்போக்கில் உணர்ந்து கொள்வீர்கள். "மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு செந்துவர் வாயுமைப் பங்கன் திருஆல வாயான்திரு நீறே". விபூதி பூசிக் கொள்ளும் போது இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் அதன் மகிமைகளை நீங்களே காலப்போக்கில் உணர்ந்து கொள்வீர்கள்.