நவ கிரகங்களின் ராஜகிரகமாக கருதப்படும் சூரியன் பெயர்ச்சியாகும் அடிப்படையில்தான் ஒவ்வொரு மாதப் பிறப்பும் கணக்கிடப்படுகிறது.
தமிழ் மாதங்களின் ஐந்தாவது மாதமான ஆவணி மாதத்தில் சூரியன், கடக ராசியில்
இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். சிம்மத்தில் சூரியன் ஆட்சி பலம்
பெறுகிறார். மற்ற கிரகங்களைப் போல் அல்லாமல் சூரியன் மற்றும் சந்திரன்
இந்த இரண்டு கிரகங்களுக்கும் ஒரே ஒரு வீடுதான் ஆட்சி வீடாக அமைந்து உள்ளது.
எனவே ஆவணி மாதம் சிம்ம ராசியில் ஆட்சி பெறும் சூரியனின் பலம் மிகவும்
குறிப்பிடத்தக்கது.
உங்கள் ராசிக்கு சூரியன் சாதகமானவரா, நட்பு கிரகமா அல்லது பகை கிரகமா
என்பதைப் பொறுத்து ஆவணி மாதத்தின் பலன் அமையும். சஞ்சரிக்கும் இடத்தை விட
குருவின் பார்வைக்கு பலம் அதிகம் என்ற அடிப்படையில், எந்த கிரகத்தின் மீது
குருவின் பார்வை படும் பொழுதும், தீய பலன்கள் குறையும். அந்த வகையில்
உங்கள் ராசிக்கு சூரியன் பகை கிரகமாக இருந்தாலும் அல்லது மறைவு ஸ்தானத்தில்
சிம்மத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து இருந்தாலும் குருவின் பார்வை இந்த
மாதம் முழுவதுமே சூரியன் மீது இருப்பதால் பெரும்பாலான ராசிகளுக்கு
சூரியனால் எந்த கெடுதலும் நேராது என்பது இந்த ஆவணி மாத சிறப்பாகும். இந்த
மாதத்தில் நான்கு கிரகங்கள் ஆட்சி, உச்ச பலம் கொண்டுள்ளன. சனி மகரத்தில்
ஆட்சி மற்றும் வக்கிரம்
குரு மீனத்தில் ஆட்சி மற்றும் வக்கிரம் சூரியன் சிம்மத்தில் ஆட்சி
புதன் கன்னியில் உச்சம் மற்றும் வக்கிரம்
துலாம் ராசிக்கு நிதானமாக செயல்பட வேண்டிய மாதம்:
தொழில் வளர்ச்சி, தொழில் விரிவாக்கம் மற்றும் புதிய தொழில் தொடங்கும்
எண்ணம் ஆகியவை நிறைவேறும். சூரியனின் பெயர்ச்சி, வணிகத்தில்
இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கொடுக்கும். மூத்த சகோதரர்களிடம் தன்மையாக
நடந்து கொள்ள வேண்டும். ராசியிலேயே கேதுவும், ஏழாம் வீட்டில் ராகுவும்
இருப்பதாலும், 12இல் உச்சம் பெற்ற புதன் மறைவதாலும், பேசும் முன்பு,
செயல்படும் முன்பு நன்றாக யோசித்து நிதானமாக செய்ய வேண்டும். உடல்
ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிக ராசிக்கு யோகமான, ஆளுமையை நிரூபிக்கும் மாதம்:
சூரியன் ஆட்சி பலத்தோடு, திக்பலமும் பெற்று சிம்மத்தில் 10 ஆம் வீட்டில்
அமர்ந்திருப்பது விருச்சிக ராசிக்கு பெரிய யோகமாகும். அலுவலக ஊழியர்கள்,
தொழில் செய்பவர்கள், என்று உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலையில் சம்பள
உயர்வு, பதவி உயர்வு, மரியாதை ஆகியவை அதிகரிக்கும். இது வரை இருந்து வந்த
பிரச்சனைகள் காணாமல் போய்விடும். செல்வாக்கு அதிகரிக்கும், உங்கள் பேச்சை
அனைவரும் கேட்பார்கள்.
தனுசு ராசிக்கு ஏற்றமான காலம்:
ஏழரைச் சனி முடிந்து விட்டதே என்று நினைப்பதற்குள், வக்கிரமாகி மீண்டும்
மகரத்தில் சஞ்சரிக்கிறது. சனியால் கொஞ்சம் தடைகள் மற்றும் தாமதங்கள்
ஏற்படலாம். அஷ்டமத்தில் இருந்த சூரியன் இப்போது பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி
பெற்று அமர்ந்திருப்பதால், இது நாள் வரை இருந்த அனைத்து மனக் கவலைகளும்
நீங்கும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். இத்தனை நாட்கள்
அலைகழிகப்பட்டிருந்தால், அவை எல்லாம் நீங்கி விடும். பண வரவு கிடைக்கும்,
சுப காரியங்கள் நிகழ்வும், தந்தையுடன் இருந்த மனகசப்புகள் தீரும்.
மகர ராசிக்கு எதிலும் கவனமாக இருக்க வேண்டிய மாதம்:
மகர ராசியினருக்கு இந்த மாதம் கிரக சஞ்சரிப்புகள் அவ்வளவு சாதகமாக இல்லை
என்று கூறலாம். ராசியிலேயே சனி வக்கிரமாகி அமர்ந்துள்ளது. அதே போல,
மூன்றாம் வீட்டில் குருவும் வக்கிரம். அஷ்டம ஸ்தானமான சூரியன் சிம்மத்தில்
ஆட்சி பெற்று மறைந்துள்ளது. எனவே, எந்த விஷயத்திலும் கவனமாக இருக்க
வேண்டும். தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்க்கவும், சட்டத்துக்கு
புறம்பான காரியங்களை ஈடுபடக் கூடாது, கடன் வம்பு வழக்குகளில் சிக்கிக்
கொள்ளும் ஆபத்து இருக்கிறது. அனுமன் வழிபாடு செய்தால் கவலைகள் நீங்கும்.
கும்ப ராசிக்கு நிம்மதியான மாதம்:
கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பம்,
வீடு, அலுவலகம், தொழில் என்று எல்லாவற்றிலும் கும்ப ராசிக்கு இந்த மாதம்
நிம்மதியான உணர்வைத் தரும். கூட்டு வணிகத்தில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு
உயரும். அரசுப் பணிக்காக காத்திருப்பவர்களுக்கு பணி நியமனம் கிடைக்கும்
சாத்தியம் உள்ளது. உஷ்ணம் சார்ந்த உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால்,
ஆரோக்கியத்தின் மீது கூடுதல் அக்கறை தேவை.
மீன ராசிக்கு பிரச்சனைகள் தீரும், பணப்புழக்கம் அதிகரிக்கும்:
சட்ட சிக்கல்களில் சிக்கிக் கொண்டிருந்தால், அதற்கெல்லாம் விடிவு காலம்
கிடைக்கும். தந்தை வழி, தாய் வழி உறவினர்களுடன் இருந்த பகை நீக்கி, சொத்து
விஷயங்கள் சாதகமாக முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில் மற்றும்
கூட்டாளிகளுடன் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வண்டி வாகனம்
வாங்கும் யோகம் கிடைக்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும், தடைகள் விலகி
வாழ்வில் முன்னேற்றம் காணபப்டும்.