கள்ளக்குறிச்சி
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1977-78ம் ஆண்டு பழைய எஸ்எஸ்எல்சி
படித்த 108 முன்னாள் மாணவர்களுக்கு 60ம் அகவை திருமணம் நேற்று
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒரே நேரத்தில்
நடைபெற்றது.திருமணம்
என்பது ஆயிரம் காலத்து பயிர். சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது
என்பார்கள். எனவேதான் திருமண பந்தத்தை பெரியோர்கள் முன்னிலையில்
ஆசீர்வாதத்துடன் இனைக்கப்படுகிறது. அப்போது திருமண நாளில் பெரியோர்கள்
பல்லாண்டு நீடூழி வாழவேண்டும் என மணமக்களை வாழ்த்துகிறார்கள். அவ்வாறு
திருமணம் செய்யும் தம்பதிகள் ஏராளமானோர் மணிவிழாவை கடந்து
பேரக்குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்கின்றனர். ஆனால் ஒரே பள்ளியில் படித்த
108 பேர் மணிவிழா கொண்டாடிய சம்பவம் கள்ளக்குறிச்சியில் அரங்கேறி உள்ளது.
கள்ளக்குறிச்சி
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1977-78ம் ஆண்டு படித்த முன்னாள்
மாணவர்கள் தற்போது அரசு பணி, சுயதொழில், தொழில் அதிபர்களாக வெளிமாவட்டம்,
வெளி மாநிலம், வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களை ஒருங்கிணைத்து
60ம் கல்யாணம் நடத்த முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் திட்டமிட்டனர்.
அதன்படி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 108 பேரின் விலாசம் கொண்டு
அடையாளம் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து அகவை திருமணத்திற்கு ஏற்பாடு
செய்தனர்.
தொடர்ந்து நேற்று 108 முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன்
கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஒன்று கூடினர்.
இதனை தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் 108 பேருக்கும் 60ஆம் கல்யாணம் அந்தந்த
குடும்பத்தினரின் முன்னிலையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்களின்
உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். கடந்த 45 ஆண்டுகளுக்கு
முன்பு எஸ்எஸ்எல்சி படித்த முன்னாள் மாணவர்களின் 60ம் கல்யாணம் ஒரே நாளில்
நடைபெற்ற நிகழ்ச்சியை கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்கான
முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Monday 3 October 2022
முன்னாள் மாணவர்கள் 108 பேருக்கு 60ஆம் கல்யாணம்: கள்ளக்குறிச்சியில் ருசிகரம்:
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...