பணியின் விவரங்கள்:
| பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் |
| Theatre Assistant | 335 | ரூ.16,600 - 52,400/- |
வயது வரம்பு:
அறுவை சிகிச்சை அறை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயதாகவும் அதிகபட்ச வயது 32 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுதிறனாளிகளுக்கு 42 ஆகவும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 50 வயதாகவும், Destitute Widow பிரிவினருக்கு 59 வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
இந்த பணிக்கு 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலகியல் / இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களுடன் அடங்கிய அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அறுவை சிகிச்சை அறை உதவியாளர் சான்றிதழ் பணியை ஒரு ஆண்டுகள் நிறைவு செய்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணிக்கு முழுமையாகக் கல்வியில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை அறை உதவியாளர் சான்றிதழ் படிப்பின் அடிப்படையில் 50% , 12 ஆம் வகுப்பு அடிப்படையில் 30% மற்றும் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களில் 20 % என்ற அடிப்படையில் விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://www.mrb.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள Online Registration படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக SC / SCA / ST / DAP(PH) / DW பிரிவினருக்கு ரூ.300 மற்றும் இதர பிரிவினருக்கு ரூ.600 செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://mrbonline.in/
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 22.02.2023.









