அரசுப்பணியாளர் தேர்வாணையம்(TNPSC)தேர்வெழுதி வெற்றி பெற்று இளநிலை உதவியாளராக அரசுப் பணியில் சேரத்தான் அத்தனை கடும் முயற்சிகள் எடுக்க வேண்டும்.இதற்காக ஒன்று ரெண்டல்ல பத்தாண்டுகள் பயிற்சி மையங்களில் தவம் கிடந்தவர்களும் உண்டு. அதற்கு பின்னர், பதவி உயர்வுகளுக்கு பணியில் சேர்ந்த சம்பந்தப்பட்ட துறைத் தேர்வுகள் எழுதினால் மட்டும் போதும்.வருவாய்த்துறையை பொறுத்தவரை பல பதவிகளை கடந்து மாவட்ட வருவாய் அதிகாரி வரை வர வாய்ப்பு உள்ளது.அவர்களை நீங்கள் தகுதி இல்லாதவர்கள் என்றோ, மீண்டும் நியமனத்தேர்வைப் போன்ற தேர்வை எழுதி வாருங்கள் என்றோ கூறுவது கிடையாது. பணியில் சேர்ந்த நாளின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்குகிறார்கள்.அவர் கருணை அடிப்படையில் வந்தவர் என்றோ,போராட்ட காலத்தில் உள் நுழைந்தவர் என்றோ,தேர்வாணையத்தால் வந்தவர் என்றோ கூறி எங்களுக்குத்தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என யாரும் கோருவதில்லை.அவர்கள் பணிமூப்பு விதி (service seniority rules) அறிந்தவர்கள்.Servival of the fittest என்ற டார்வின் கோட்பாடு களை எல்லாம் கூறி கொடி பிடிப்பதில்லை. இது இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு எதிரானது.எந்த ஆணை பிறப்பிப்பதாக இருந்தாலும் முன்தேதியிட்டு நிர்ப்பந்தம் செய்ய இயலாது.NCTE வழிகாட்டலாக இருந்தாலும் cut off date என்பது ஆணை வெளியிட்ட நாளுக்கு பின்னர் பணிக்கு வந்தவர்களுக்கே பொருந்தும்.
உதாரணமாக இடைநிலை ஆசிரியர்களை எடுத்துக்கொள்வோம்.அரசாணை 100ஐ பிறப்பித்து 6-8 வகுப்பு களை பட்டதாரி ஆசிரியர் கள் மட்டுமே கையாள வேண்டும் என்றார்கள். அப்போது ஏராளமான இடைநிலை ஆசிரியர்கள் பணியில் இருந்தார்கள். அத்தனை பேரும் பட்டதாரி ஆசிரியருக்கான தகுதியை பெற்றே தீரவேண்டும் இல்லையென்றால் பணி நீக்கம் செய்வோம் என்றா கூறினார்கள்?இல்லையே?இன்று வரை அவர்கள் பணி முடித்து ஓய்வு பெறத்தானே செய்கிறார்கள்!அரசாணை 100 வந்த பின்னர்தான் 6-8வகுப்பு களுக்கு இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லையே தவிர ஏற்கனவே இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. TET என்பது 1-8 வகுப்புகளுக்கு மட்டும் தான் பொருந்தும். இன்று பட்டதாரி ஆசிரியர்கள்9,10 வகுப்பு களையும் கையாளுகிறார்கள்.9,10வகுப்புகளுக்கு TET தேவை என எங்கேயாவது கூறியிருக்கிறார்களா?இல்லையே!அப்படி பார்த்தால் மூத்த ஆசிரியர்கள் அனைவரையும் 9,10 வகுப்புகளை கையாள கொடுத்து விட்டு TET முடித்தவர்களை 6-8 வகுப்புகளை கையாள கொடுக்கலாம் அல்லவா?பணியில் மூத்தவர்களுக்கு 9,10 வகுப்பு கள் கொடுப்பதால் பணியில் இளைய TET முடித்த ஆசிரியர்கள் உரிமை கோர இயலாது அல்லவா?
என்னதான் புதுப்புது சட்டங்கள் தோன்றினாலும் ஏற்கனவே பணியில் இருப்பவர் எந்த விதத்திலும் எந்த காலத்திலும் பாதிக்கப்பட்டதுமில்லை; பாதிக்கப்போவதில்லை.இதற்கு elementary grade, induction teachers என பல உதாரணங்களை கூறமுடியும்.தற்போது மருத்துவத்துறை,நீதித்துறை போன்று பல துறைகளில் தகுதித் தேர்வு இருக்கத்தான் செய்கிறது.அவை ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு பொருந்துவதில்லை.பழுத்த ஓலையை பார்த்து குருத்தோலை சிரிக்கத்தான் செய்யும், தானும் சில நாட்களில் பழுத்து விடுவோம் என்பதை அறியாமல்.கண்டிப்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையாக உள்ள வழக்கு அரசாணைக்கு முன்னர் பணியில் இருப்பவர்களுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால் வீண் கவலை கொள்ளத்தேவையில்லை
இப்பதிவானது எவரது மனதையும் பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் வெளியிடவில்லை;எவரும் பாதிக்கக்கூடாது என்பதற்காக பதிவிடப்படுகிறது
சுயநல வாதிகள்,கர்மாவை நினைவில் கொள்ளாது அறியாமையால் வெளியிடும் பதிவுகளுக்கும், நமது பதிவுகளுக்கு அவர்கள் அளிக்கும் விமர்சனங்களுக்கும் ஆயிரம் பதில் கொடுக்க இயலும்.இருப்பினும் நடக்காத காரியத்திற்காக நம் நேரத்தை வீணாக்குவதில்லை என்பதால் எதனையும் செவி மடுக்கவில்லை!
நாஞ்சிலார்
இனியும் ஏன் TET கவலை








