ஸ்ரீபெரும்புதூர்:
பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தியின் பணியிடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி
மாணவர்கள் பெற்றோர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் இடையார்பாக்கம் கிராமத்தில்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஒன்று முதல் ஐந்து
வகுப்பு வரை சுமார் 150 மாணவ, மாணவியர்கள் அருகில் உள்ள கிராமங்களில்
இருந்து வந்து கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இங்கு பணிபுரிந்து
வந்த தலைமையாசிரியர் ஜெயந்தி இடமாற்றம் செய்யப்பட்டார். இதனை அறிந்த
மாணவர்கள், தலைமையாசிரியர் ஜெயந்தியின் இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி
பெற்றோர்கள் மாணவர்களுடன் கடந்த திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரை சந்தித்து
மனு அளித்தனர்.
Read More Click Here
Read More Click Here