TET தீர்ப்பு - உண்மை நிலை - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


TET தீர்ப்பு - உண்மை நிலை

 


TET தீர்ப்பு - உண்மை நிலை

அனைவருக்கும் வணக்கம் 

TET தேர்வு சார்ந்து, பதவி உயர்வுக்கு TET தேவையா? இல்லையா? என்ற வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு  வந்திருக்கிறது. பதவி உயர்வுக்கு TET தேவையா? இல்லையா? என்ற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல், நியமனத்திற்கும் TET கட்டாயம் என்று தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

இது குறித்து பல்வேறு வதந்திகள், பரப்பப்படுகிறது. 

உச்சநீதிமன்றம் பல்வேறு விஷயங்களை கருத்தில் கொள்ளவில்லை என்று ஒரு விவாதம் முன்வைக்கப்படுகிறது. 

ஒரு நீதிமன்றம் இருக்கின்ற சட்டங்களை விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க முடியுமே தவிர நடைமுறையில் இருக்கின்ற சட்டத்திற்கும் விதிகளுக்கும் முரணாக ஒரு தீர்ப்பை வழங்க இயலாது. இருக்கின்ற சட்டங்களும் விதிமுறைகளும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருந்தால் அதை  நசுக்க (Quash) , திருத்தம்(Amend)  செய்ய நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைக்க     முழு அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு முழு அதிகாரம் உண்டு.

TET வழக்கிலும் அதுவே நடந்திருக்கிறது. 

 உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நடைமுறையில் இருக்கின்ற RTE சட்டத்தின்படி சரியானது.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தமிழகத்தில் பாதிப்புக்கு உள்ளானதற்கு RTE சட்டத்தில் உள்ள 23(2) என்ற ஒரே ஒரு விதி தான் காரணம்.

நீதிமன்றத்தின் தீர்ப்பின் பத்தி 67 இல் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

As discussed above, NCTE made the TET a mandatory requirement vide its notification dated 23rd August, 2010. Be that as it may, in the year 2017, the Parliament made an amendment 59 in Section 23 of RTE Act by introducing a proviso in section 23(2) of the Act. The proviso reads thus: “Provided further that *every teacher appointed or in position as on the 31st March, 2015, who does not possess minimum qualifications* as laid down under sub-section (1), shall acquire such minimum qualifications within a period of four years from the date of commencement of the Right of Children to Free and Compulsory Education (Amendment) Act, 2017.” 

இந்த விதியில் உள்ள இரண்டே இரண்டு வார்த்தைகள் தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. RTE இல் உள்ள இந்த விதி 2017 இல் நாடாளுமன்றத்தால் மேற்கண்டவாறு திருத்தம் செய்யப்பட்டது.

Every Teacher, in position 

இதற்கு பொருள் பணியில் உள்ள பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும், RTE  சட்டம் சொல்லுகின்ற குறைந்தபட்ச தகுதியான TET தேர்ச்சி  பெற்று இருக்க வேண்டும். 

இந்த விதியைத்தான் உச்ச நீதிமன்றம் உரக்க சொல்லியிருக்கிறது. 

உண்மையில் உச்சநீதிமன்றம் ஒரு நன்மையை செய்திருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்து 142 ஐ பயன்படுத்தி ஐந்து வருடங்களுக்கு குறைவாக பணிக்காலம் உள்ள ஆசிரியர்களுக்கு ஒரு விலக்கு அளித்திருக்கிறது. 

1. 2001  க்கு முன் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு TET தேவை இல்லை என NCTE Regulations சொல்கிறதே ?

அவர்களுக்கு ஏன் விலக்கு அளிக்கப்படவில்லை?

2. RTE சட்டம் NCTE Regulations ஐ விட  மேலானது (Override). அதனால் rte சட்டமே மேலோங்கும்

2. 2001 க்குப் பின் நாங்கள் TRB எழுதித்தானே பணிக்கு வந்தோம்? ஆம். இதை உச்ச நீதிமன்றம் பரிசீலித்திருக்கலாம். ஆனால் RTE சட்டத்தில் TET தான் குறைந்த பட்ச தகுதி என்று சொல்லப்பட்டால் அந்த விதியை அப்படியே அமல் படுத்த உச்ச நீதிமன்றம் முடிவு செய்துவிட்டது. 

3. அப்படியானால் எல்லோரும் TET தேர்ச்சி பெற  வேண்டுமா?

01.09.2025 தேதியில்  5 வருட பணி காலம் உள்ள அனைவரும் இரண்டு ஆண்டு காலத்திற்குள் TET  தேர்ச்சி பெற வேண்டும் வேண்டும். ஐந்து வருடத்திற்கு குறைவான பணிக்காலம் கொண்டவரும் பதவி உயர்வு வேண்டுமென்றால்  TET தேர்ச்சி பெற வேண்டும்.

4. தமிழகத்தில் RTE சட்டம் நடைமுறைக்கு வந்த 29.08.2011 க்கு முன் நியமனம் பெற்ற ஆசிரியர்களும் TET தேர்ச்சி பெற வேண்டுமா?

தற்போதுள்ள தீர்ப்பின்படி நிச்சயமாக TET  தேர்ச்சி பெற வேண்டும்.

5. கேரளா, கர்நாடகா , ஆந்திரா பிற மாநிலங்கள் அவர்களின் அரசாணைகள் வழியே விலக்கு அளித்துள்ளதே ?

அவை எதுவும் செல்லாது. 

பொதுப் பட்டியலில் கல்வி இருப்பதால் மத்திய அரசும் (நாடாளுமன்றத்தில் இயற்றபடுகிற சட்டம்) ,  உச்ச நீதிமன்றமும் எடுக்கின்ற முடிவே இறுதியானது. *இதற்கு எதிராக எந்த மாநில அரசுகளும் கொள்கை முடிவு எடுக்க இயலாது

p>

6. இந்த வழக்கில் வாதி, பிரதிவாதிகளாக உள்ள தமிழ்நாடு மகாராஷ்டிரா போன்ற மாநில ஆசிரியர்களுக்கு மட்டும்தான் இந்த தீர்ப்பு பொருந்துமா? 

அனைத்து மாநில ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.

7. இதிலிருந்து தப்பிக்க வேறு ஏதேனும் வழிகள் உள்ளதா? 

1. மத்திய அரசு RTE சட்டத்தில் , இந்த சட்டம் Notify  செய்யப்பட்ட தேதிக்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு விலக்கு அளித்து திருத்தம் கொண்டு வரலாம்.

2. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

3. மாநில அரசே சிறப்பு தகுதி தேர்வு நடத்தலாம். 

3. தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்கலாம். 

4. இரண்டு வருட காலத்தில் எத்தனை தேர்வுகளை வேண்டுமானாலும் நடத்தலாம். 

5. ONLINE தேர்வுகளை நடத்தி உடனடியாக முடிவுகளை வெளியிடலாம்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H