வாழ்க்கைத் தத்துவம் - கவிதை - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

POST HOME AD

Post Top Ad

Tuesday, 10 September 2019

வாழ்க்கைத் தத்துவம் - கவிதை

வாழ்க்கைத் தத்துவம்

- கவிதை.

பாழும்
வயிற்றை நிரப்ப
வேகாத வெயிலில்
வேகும் கூத்துக்களை
ஆடும் கழைக்கூத்தாடியின்
ஆட்டமெல்லாம் தத்துவம்..!

ஆயிரமாயிரம் பூக்களில் பயணித்து
வில்லாய் வளைந்து விழும்
சொட்டுத்
தேன் எடுத்தாலும்
கட்டித்தேன் என்பது தேனீக்களின் தத்துவமே..!
தரைக்கே வராமல்
காற்றோடு கலந்தும்..
பூமியோடு கரைந்தும்..
ஒளி தரும் நிலவின்
அழகோ
தத்துவம்..!

கண்ணுக்குப் புலனாகாமல்
எங்கோ உருவாகி
கடலில் சங்கமிக்கும்
நதியின் பயணம் தத்துவமே..!

தெருப் புழுதியில்
வீடு கட்டி..
பால் காய்ச்சாமல்
குடிபுகும் கறையானின்
மண்வீடு
தத்துவமே..!

உலகின் பொய்யை உள்ளத்தில் சுமந்து..
பொய்யின் உருவம் கொண்டு..
புனிதத்தை மறைக்கும்
இருளின் உருவமான
மனிதனே..
பொய்தானே
உன்
வாழ்க்கைத் தத்துவம்..!

- ப.ஜார்ஜ்.M.Sc.D.T.Ed

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad