BREAKING NEWS

R.L LIST- 2015

ஜெனவரி 
01.01.15 வியாழன் வருடப்பிறப்பு,வைகொண்டஏகாதசி  05.01.15 திங்கள் - ஆருத்தரா தரிசனம்  14.01.15 புதன் - போகிப்பண்டிகை  31.01.15 சனி - கர்வின் முகைதீன் அப்துல்காதர் 
பிப்ரவரி 
03.02.15 செவ்வாய் - தைபூசம்  17.02.15 செவ்வாய் - மகாசிவராத்திரி  18.02.15 புதன் - சாம்பல் புதன் 
மார்ச் 
04.03.15 புதன் - பகவான் வைகொண்ட ஆராதனை -மாசிமகம் 
ஏப்ரல் 
02.04.15 வியாழன் பெரியவியாழன்  05.04.15 ஞாயிறு  - ஈஸ்டர்  14.04.15 செவ்வாய் - அம்பேத்கார் பிறந்தநாள் 
மே 
03.05.15 ஞாயிறு  - புத்தஜெயந்தி சித்ரா பௌர்ணமி
16.05.15 சனி - ஷபே மிராஜ்
ஜூன் 
02.06.15 செவ்வாய் - ஷபேபராஅத் 19.06.15 வெள்ளி - ரம்ஜான் முதல் நாள் 
ஜூலை 
14.07.15 செவ்வாய் - ஷபே காதர் 
ஆகஸ்ட் 
03.08.15 திங்கள் - ஆடிப்பெருக்கு
28.08.15 வெள்ளி -ஓணம் -வரலஷ்மி விரதம்
29.08.15 சனி - ரிக்உபகாரமா ,யஜூர் உபகர்மா
30.08.15 ஞாயிறு - காயத்ரி
ஜெபம் 
செப்டம்பர் 
17.09.15 வியாழன் -சாமஉபகர்மா  23.09.15 புதன் - அர்பாஅக்டோபர்  15.10.15 வியாழன் - ஹிஜ்ரி 1437ம் வருடப்பிறப்பு
நவம்பர் 
02.11.15 திங்கள்-கல்லறைத் திருநாள் 10.11.15 செவ்வாய்-திபாவளி நோன்பு  25.11.15 புதன் - குருநானக்ஜெயந்தி திருக்கார்த்திகை தீபம் 
டிசம்பர் 
24.12.15-வியாழன்கிருஸ்துமஸ் ஈவ்
26.12.15 சனி - ஆருத்ரா தரிசனம்
31.12.15 வியாழன்-நியூ இயர்ஸ்  ஈவ்

viswa

TET TNPSC TRB Materials

Latest GO's

animated gif

LAB ASSISTANT EXAM DETAILS

Welcome to Kalvikural

PROMOTION PANEL AS ON 2015
YOUR STUDY MATERIAL WITHOUT EMAIL UPLOAD HERE
கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON KALVIKURAL என்று type செய்து 9944177387 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும்.தொடர்ந்து SMS சேவையை அளித்து வரும் ஒரே வலைதளம்  கல்விக்குரல் மட்டுமே! உங்களுக்கு தேவையான STUDY MATERIALS www.kalvikural.net மற்றும் அரசாணைக்கு www.kalvikural.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் என்றும் ஆசிரியர்களின் நலனில் கல்விக்குரல்....
YOUR STUDY MATERIAL SEND KALVIKKURAL@GMAIL.COM

Saturday, 25 April 2015

கள்ளக்குறிச்சி-10ம் ஆவகுப்பு விடைத்திருத்தும் மையம் ஆர்.ஆர் பள்ளியில் நடைபெற்ற மரம் நடுவிழா:

விழுப்புரம் மாவட்டம்-கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையத்தில் மாவட்டக்  கல்வி அலுவலர் திருமதி.கோ.தனமணி அவர்களால் தொடங்கப்பட்ட மரம் நடுவிழா நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு உங்கள் பார்வைக்கு:
மரம் நடுவிழா நிகழ்விற்கு மாத்தூர் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.செந்தில் குமார் அவர்கள்,தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் திரு.செல்வராஜ் அவர்கள்,TNGTA மாவட்டத் துனைத்தலைவர் திரு.இரவிச்சந்திரன் அவர்கள்.தண்டலை பெருவங்க்கூர் பட்டதாரி கணித ஆசிரியர் திரு.சிவனடி செல்வம் அவர்கள் ,பட்டதாரி ஆசிரியை திருமதி.உமா அவர்கள் மற்றும் தொட்டியம் அரசு மேல்நிலைப்பள்ளியின் பட்டதாரி கணித ஆசிரியர் திரு.ஈஸ்வரன் அவர்கள்,அரசு மேல்நிலைப்பள்ளி முரார்பாளையம் பட்டதாரி கணித ஆசிரியர் திரு.வடிவேல்  அவர்கள்  மற்றும் ஆசிரியர்கள் திரளாக கலந்துகொண்டனமூரார்பாலையம்ர்.ஒவ்வொரு ஆண்டும் விடைத்தாள் திருத்தும் மையத்தில் இறுதி நாளில் மரம் நடுவிழா நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.இதுபோன்ற நிகழ்வினால் எதிர்கால சந்ததிகள் வளம் பெறுவது உண்மை..

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 “மெயின்” தேர்வு – மே மாதத்திலிருந்து ஜூனுக்கு மாற்றம்!:

டிஎன்பிஎஸ்சி மூலமாக அடுத்த மாதம் நடைபெறவிருந்த குரூப் 1 பிரதான தேர்வு ஜூன் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இத்தேர்வானது மே மாதம் 2,3,4 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்தது. இந்த நிலையில், ஜுன் 5,6,7, ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. 79 பணியிடங்களுக்கான குரூப் 1 பிரதான தேர்வை எழுத 4389 பேர் தேர்வாகியுள்ளனர். இத்தேர்வானது சென்னை, கோவை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை உட்பட 33 மையங்களில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்ஜி., - மே 6; எம்.பி.பி.எஸ்., மே 11ல் விண்ணப்ப வினியோகம்:

தமிழகத்தில், இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், மே, 6ம் தேதியும் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம் வினியோகம் மே, 11ம் தேதியும் துவங்குகின்றன.தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 7ம் தேதி வெளியாகிறது என, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, எம்.பி.பி.எஸ்., மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோக தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில் கூடுதலாக 50 இடங்கள் ஒதுக்கீடு:

அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் இடங்களை விட கூடுதலாக 50 ஒதுக்கப்பட்டு 100 ஆக அதிகரித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு வருவதால் செவிலியருக்கான தேவையும், பணிவாய்ப்பும் அதிகரித்து வருகிறது. இதற்காக சிறந்த முறையில் செவிலியர் பயிற்சி அளிப்பதற்காக தமிழகம் முழுவதும் அரசு சார்பில் 23 செவிலியர் பயிற்சி பள்ளிகள் மருத்துவமனை வளாகங்களில் செயல்பட்டு வருகிறது.

'மாணவர் சேர்க்கைக்கு இணையதள மதிப்பெண் நகலை பயன்படுத்தலாம்':

இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் மதிப்பெண் நகல்களை பயன்படுத்தி, மாணவர்கள் சேர்க்கை நடத்தலாம்' என, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மாணவர் சேர்க்கை யில் கல்லூரிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா கூறியிருப்பதாவது: பாடங்களுக்கென விதிக்கப்பட்டுள்ள கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். இட ஒதுக்கீடு முறையை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

தொடக்கக் கல்வி - நிதியுதவி பெறும் பள்ளிகள் பள்ளிக்குழு புதுப்பித்தல் தொடர்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியத்தினை நிறுத்தம் செய்ய கூடாது என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு:


30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா?

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் எனப்படும், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட நிதியின் கீழ் சம்பளம் பெறும், 30 ஆயிரம் ஆசிரியர்கள், இம்மாதத்திற்கான சம்பளத்தை, வரும், 30ம் தேதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்திற்கான பெரும்பகுதி நிதியை, மத்திய அரசு வழங்குகிறது. இந்த நிதியில் இருந்து, 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, சம்பளம் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட திட்டத்திற்கான நிதி என்பதால், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான அனுமதியை, சம்பந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் கருவூலகங்களுக்கு, துறை உயர் அதிகாரி அனுப்ப வேண்டும். ஏற்கனவே வழங்கிய உத்தரவு, மார்ச் மாதத்துடன் முடிந்து விட்டது. ஏப்ரல் மாதத்தில் இருந்து, ஆறு மாதங்கள், தொடர்ந்து சம்பளம் பெற வேண்டும் எனில், உரிய உத்தரவை, இடைநிலைக் கல்வி திட்ட இயக்குனரகம் அனுப்ப வேண்டும். ஆனால் இதுவரை, சம்பளம் வழங்குவதற்கான உத்தரவு அனுப்பப்படாததால், சம்பள பில்களை, கருவூலகங்களில் சமர்ப்பிக்க முடியவில்லை. இதனால், 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, ஆசிரியர் சிலர் கூறியதாவது:

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணி ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடக்கம்:

தமிழகம் முழுவதும் அரசு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 4,362 ஆய்வகஉதவியாளர்கள் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு முதலில் எழுத்துத்தேர்வும் அதில் வெற்றிபெறுவோருக்கு நேர்முகத்தேர்வும் நடத்தப்படும். எழுத்துத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று தொடங்கியது. சிறப்பு சேவை மையங்களுக்கு தேர்வர்கள் நேரில் சென்று விண்ணப் பித்தனர். சென்னையில் சாந்தோம் மேல்நிலைப் பள்ளி மையத்துக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் சென்று ஆய்வு செய்தார். முதல் நாள் என்பதால் குறைந்த எண்ணிக் கையிலான தேர்வர்களே விண் ணப்பிக்க வந்திருந்தனர். ஆய் வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே 6-ம் தேதி. எழுத்துத்தேர்வு மே 31-ம் தேதி நடைபெற உள்ளது. 

தமிழ்வழியில் படித்திருந்தால் முதுகலை ஆசிரியர் பணி: உயர்நீதிமன்றம் உத்தரவு:

'முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு முதுகலை பட்டத்தை தமிழ் வழியில்படித்திருந்தால் மட்டுமே அரசாணைப்படி முன்னுரிமை அளிக்கப்படும்' என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.மதுரை புதூர் ஸ்டீபன் ராஜா. இவர் பி.ஏ.,(பொருளாதாரம்), பி.எட்., தமிழ் வழியிலும்; எம்.ஏ.,(பொருளாதாரம்) ஆங்கிலத்திலும் படித்துள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் 2013-14, 2014-15 ல் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு நடந்தது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை கோரி ஸ்டீபன் ராஜா விண்ணப்பித்தார். டி.ஆர்.பி., தலைவர் அதை நிராகரித்தார். ரத்து செய்யக்கோரிஉயர்நீதிமன்றத்தில் ஸ்டீபன் ராஜா மனு செய்தார். தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். ஸ்டீபன் ராஜா மேல்முறையீட்டில், 'தமிழ் வழியில் படித்தவர்களுக்கு20 சதவீத முன்னுரிமை ஒதுக்கீடு உண்டு. தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என கூறியிருந்தார். நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம்உத்தரவு:

Friday, 24 April 2015

மே முதல் வாரத்தில் பி.இ., எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம்:

பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே மாதம் முதல் வாரத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி (மே 7) அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, பி.இ., எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம் குறித்த நடைமுறைகள் தீவிரமாகியுள்ளன.
பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க எந்தத் தேதியில் இருந்து விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்பது ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

4,362 ஆய்வக உதவியாளர்கள் நியமனம்: போட்டித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்:

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.24) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு மே 31-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத்தை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி மே 6-ஆகும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணியின் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்; இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு உச்சவயது வரம்பு தளர்வு உண்டு:

அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் மாவட்டவாரியாக காலிப்பணியிட விவரம்:

Tamil Nadu District Wise 
villupuram – 317
Thiruvallur – 179
Salem - 176
Chennai – 33
Dharmapuri – 173
krishnagiri – 208
Coimbatore – 105
Nilagiri – 081
Tirupur – 141
Cuddalore - 166
Theni - 65
Dindigul – 96
Erode – 147
Madurai – 52

தாமதமாகிறது ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு:கோடை விடுமுறைக்குள் முடிக்கப்படுமா?

ஒவ்வொரு ஆண்டும் விருப்பத்தின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, அதை தொடர்ந்து பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கிறது. பங்கேற்க விரும்புவோரிடம் கோடை விடுமுறை துவங்கும் முன் ஏப்ரலில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு பள்ளிகள் திறப்பதற்கு முன் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும்.
கடந்தாண்டு சரியான திட்டமிடல் இன்றி பள்ளிகள் திறந்த பிறகும் கலந்தாய்வு தொடர்ந்தது. இதனால் குடும்பம், குழந்தைகளின் கல்வி ரீதியாக முடிவு எடுப்பதில் ஆசிரியர்கள் சிரமப்பட்டனர்.இந்தாண்டும் ஆசிரியர்களிடம் இதுவரை விருப்ப மனுக்கள் பெறப்படவில்லை. கோடை விடுமுறை துவங்கி விட்டதால் பொது கலந்தாய்வு தள்ளிப்போகும் நிலையுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்க மதுரை மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கூறியதாவது:பொது மாறுதல் கலந்தாய்வை குறிப்பிட்ட தேதிக்குள் முடித்தால் அந்த கல்வியாண்டில்ஆசிரியர்கள் திட்டமிட வசதியாக இருக்கும். கோடை விடுமுறைக்குள் இரு கலந்தாய்வுகளையும் நடத்தி முடிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றார்.

ஆபத்து கால சேவை பட்டயப் படிப்பு: ஜூன் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்:

ஆபத்து கால சேவை குறித்த முதுநிலை பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 15 கடைசித் தேதியாகும்.
108 ஆம்புலன்ஸ் சேவையை நடத்தி வரும் ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனத்தின் சார்பில் ஆபத்து கால சேவை குறித்த இரண்டு ஆண்டு கால முதுநிலை பட்டயப்படிப்பு ஹைதராபாதில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தப் படிப்புக்கு 2015-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். தாவரவியல், உயிரி வேதியியல், நுண்ணுயிரியல், உயிரிதொழில்நுட்பம், செவிலியப் படிப்பு, இயன்முறை மருத்துவம், அறிவியல் தொடர்பான படிப்புகள், இந்திய முறை மருத்துவமான சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா- இயற்கை மருத்துவம், ஹோமியோபதி உள்ளிட்டவற்றில் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களை வற்புறுத்தக் கூடாது:

தகுதிவாய்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியின, மதம் மாறிய தலித் மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு வற்புறுத்தக் கூடாது என சுயநிதி பொறியியல் கல்லூரிகளை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அந்த மாணவர்களுக்குத் தேர்வு அனுமதிச் சீட்டை வழங்கி, தேர்வை அவர்கள் சிறப்பான முறையில் எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்குமாறும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்து சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கும் தொழில்நுட்ப கல்வி ஆணையர் பிரவீண்குமார் அனுப்பியுள்ள கடித விவரம்:

200 ஆண்டுகள் பழைமையான ஓவியங்கள் புத்தகமாக தொகுப்பு :

சுமார் 200 ஆண்டுகளைக் கடந்த ஓவியங்கள் புத்தகமாகத் தொகுக்கப்பட்டு, சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, இந்தப் புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியது:
உலக புத்தக மற்றும் காப்புரிமை தினத்தை முன்னிட்டு, "ஒளித்திரையில் ஒரு ஓவியப் புத்தகம்' என்ற நூலை தொல்லியல் ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது. கடந்த 1816-ல் பிரிட்டனைச் சேர்ந்த வில்லியம் டேனியல், தாமஸ் டேனியல் ஆகியோர் இந்தியாவின் பாரம்பரியச் சின்னங்களை ஓவியங்களாக வரைந்தனர்.

கோத்தகிரியில் கின்னஸ் சாதனை முயற்சி:ஒரே இடத்தில் 6,670 பேர் புத்தகம் வாசிப்பு :

கின்னஸ் சாதனைக்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புத்தகத்தை வாசித்த வாசகர்கள்.கோத்தகிரியில் கின்னஸ் சாதனைக்காக வியாழக்கிழமை நடைபெற்ற வாசகர் சங்கமம் நிகழ்ச்சியில் ஒரே இடத்தில் அமர்ந்து 6,670 பேர் புத்தகங்களை வாசித்தனர்.உலக புத்தக தினத்தையொட்டி, கோத்தகிரி நூலக வாசகர் வட்டம் சார்பில் இந்நிகழ்ச்சி கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் பசுவராஜ் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் டி.கணேஷ்மூர்த்தி, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

8-வது வகுப்பில் கட்டாய தேர்ச்சியை ரத்து செய்ய வேண்டும் தனியார் பள்ளிகள் சங்க மாநாட்டில் தீர்மானம்

மாணவர்கள் நலன் கருதி 8-வது வகுப்பில் கட்டாய தேர்ச்சியை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் , மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்க வெள்ளிவிழா மாநாட்டில் தீர்மானம் நிறைவேறியது.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் சார்பில் வெள்ளிவிழா மாநாடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டை கவர்னர் கே.ரோசய்யா தொடங்கி வைத்து வெள்ளி விழா மலரை வெளியிட்டார்.

வாக்காளர் அட்டையில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய ஒரே விண்ணப்பம் தேர்தல் ஆணையம் திட்டம்:

வாக்காளர் அட்டையில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய ஒரே விண்ணப்பம் வழங்கும் எளிய நடை முறை கொண்டு வர தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:-
வாக்காளர் அட்டையில் ஆதார் எண்
வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண் இணைப்பதற்கான நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ந்தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் படி உள்ள 5 கோடியே 62 லட்சம் வாக்காளர்களிடம் தகவல் சேகரிப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. கடந்த 22-ந்தேதி நிலவரப்படி 3 கோடி வாக்காளர்களிடம் அவர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.

அதிகாரபூர்வ அறிவிப்பு:8 3/4 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு மே 21-ந் தேதி வெளியாகும்:

பள்ளிக்கூட மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடியதாக பிளஸ்-2 தேர்வுகருதப்படுகிறது. 
பிளஸ்-2 தேர்வு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை 8 லட்சத்து 86 ஆயிரத்து 27 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.
பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 18-ந்தேதி முடிவடைந்தது. தற்போது டேட்டா சென்டரில் மதிப்பெண் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

நிகர்நிலை பல்கலைக்கழகங்களை நெறிப்படுத்த வழிகாட்டுமுறை மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு:

இந்தியாவில் உள்ள 7 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பான வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால் மற்றும் பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் முன்னிலையான அமர்வு விசாரணை நடத்தியது.

குரூப்–1 மெயின்தேர்வு ஜூன் மாதம் 5–ந்தேதிக்கு தள்ளிவைப்பு:

துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட பல உயர்பதவிகளுக்கு ஆட்களை தேர்ந்து எடுப்பதற்கு குரூப்–1 தேர்வை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திவருகிறது. அதாவது குரூப்–1 தேர்வை பொருத்தவரை முதல்நிலை தேர்வு, மெயின்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவவை உள்ளன.

Thursday, 23 April 2015

TNTET GENERAL ENGLISH PAPER I PAPER II PART IV STUDY MATERIAL

THANKS TO MR ARSHANA KUMAR DHARMAPURI
TNTET GENERAL ENGLISH PAPER I PAPER II PART IV STUDY MATERIAL..CLICK HERE

TAMILNADU GOVERNMENT 6% DA INCREASED GOVERNMENT ORDER 121 DATE 22.01.2015 :

G.O.No.121 Dt: April 22, 2015    Download Icon(237KB)
ALLOWANCES – Dearness Allowance – Enhanced Rate of Dearness Allowance from 1st January 2015 – Orders – Issued.
அரசு ஆணை எண்.121 Dt: April 22, 2015    Download Icon(155KB)
படிகள் - அகவிலைப்படி - 01.01.2015 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் எழுத்து தேர்வு - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்:

அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களில் 4360 பேரை நியமிக்க போட்டித் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வினியோகிக்கப்பட உள்ளன.அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களில் உதவியாளர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக போட்டித் தேர்வு  நடத்தி அதில் தேர்ச்சி அடைவோரை மட்டுமே நியமிக்கவும் முடிவு செய்துள்ளது. இதற்காக 4360 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.இதற்கானவிண்ணப்பங்கள் நாளை முதல் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை அணுகி விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட பணிக்கு பத்தாம் வகுப்பு கல்வி தகுதியாக வைக்கப்பட்டுள்ளது. 18வயதுக்கு மேல் இருக்க வேண்டும். மே மாதம் 6ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள். மே 31ல் தேர்வு நடக்கும்.

அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும்:

அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும்.

காலிப்பணியிடம் : 4360
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
அடிப்படைஊதியம் விகிதம்  : 5,200- 20,200 .. 
தர ஊதியம் - 2400.

தேவைப்படும் சான்றிதழ் : 
*பத்தம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் 
*சாதிச்சான்றிதழ் 
*முன்னாள் இராணுவத்தினர் , மாற்றுத்திறனாள் சான்றிதழ் ( இருப்பின்) 
*பணு அனுபவ சான்றிதழ் இருப்பின் ( மாவட்ட்க்கல்வி அலுவலரால் அங்கீகரிக்கப்பட்டது மட்டும்)
* மாவட்ட வேலைவாய்ப்பக அடையாள அட்டை
*தமிழ்வழி முன்னுரிமை சான்றிதழ் 

வயதுவரம்பு: *எஸ்.ஸி 18 முதல் 35
*பி.சி,எம்.பி.சி 32, 
*ஓ.சி 30

தேர்வுக்கட்டனம் - 100 rs( எஸ்.சி,எஸ். சி.ஏ விலக்கு) 
சேவைக்கட்டணம் ௫-50rs அனைவருக்கும் 

பாடத்திட்டம் : 120 அறிவியல் கொள்குறி வகை வினாக்கள் ( பத்தாம் வகுப்பு தரம் ) 30 பொது அறிவு வினாக்கள் - மொத்தம் 150

தொகுதிப்பூதியம் பெறுபவர்களுக்கு மாதம் 40 ரூபாய் உயர்வு:

திருத்தப்பட்ட தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுபவர்களுக்கு மாதம்  ரூ.20 முதல் ரூ.40 வரை உயா்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:அரசு  ஊழியா–்களுக்கு அகவிலைப்படி கடந்த ஜனவாி 1ம் தேதி முதல் உயா்த்தி வழங்க  அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. எனவே திருத்தப்பட்ட தொகுப்பூதியம், நிலையான  ஊதியம், மதிப்பூதியம் பெறுபவா–்களுக்கும் ஜனவாி 1ம் தேதியில் இருந்து  தனிப்பட்ட தொகை உயா்த்தி வழங்கப்படும்.

மாதாந்திர ஓய்வூதியத்தில் வருமான வரி பிடித்தம்: தமிழக அரசு விளக்கம்:

மாதாந்திர ஓய்வூதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்வது தொடர்பாக, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து கருவூல கணக்குத் துறை இயக்ககம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஒவ்வொரு நிதியாண்டிலும் ஓய்வூதியதாரர்கள் மார்ச் முதல் பிப்ரவரி வரையில் ஓராண்டு வரை பெறும் மொத்த ஓய்வூதியத்தின் மீது வருமான வரி கணக்கிடப்படுகிறது. ஓய்வூதியதாரர்கள் தாங்கள் பெறும் மொத்த ஓய்வூதியம், முதலீடுகள், பிடித்தம் செய்யப்பட வேண்டிய விவரங்களை ஆண்டின் தொடக்கத்திலேயே தெரிவிப்பதற்கு வசதியாக கருவூலக் கணக்குத் துறை ஒரு படிவத்தை வடிவமைத்துள்ளது.

துப்புரவுப் பணியாளர், தண்ணீர்த்தொட்டி இயக்குவோருக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு:

துப்புரவு பணியாளர், நீர்த்தொட்டி இயக்குவோர் ஆகியோருக்கு ரூ. 20 முதல் ரூ. 40 வரை தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறைச் செயலாளர் க.சண்முகம் பிறப்பித்துள்ளார்.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆறு சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையின் கீழ் பணியாற்றுவோருக்கும் ஊதிய உயர்வு உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 4362 ஆய்வக உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி?

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பணியாற்ற 4362 ஆய்வக உதவியாளர்கள் தேர்வு செய்யப்படும் முறை பற்றி பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஆய்வக உதவியாளர் பணி
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களில் புதிதாக ஆய்வக உதவியாளர்கள் 4 ஆயிரத்து 362 பேர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-

பள்ளிக்கூட ஆசிரியர்கள் 8 பேர் கைது கழிவறையை சுத்தம் செய்ய மாணவர்களை ஈடுபடுத்தியவர்கள்:

தனியார் பள்ளிக்கூடத்தில், கழிவறையை சுத்தம் செய்ய மாணவர்களை ஈடுபடுத்தியது தொடர்பாக எழுந்த புகாரை தொடர்ந்து, 8 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
தனியார் பள்ளிக்கூடம்
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழப்பத்தை பண்டிதன்குறிச்சி கிராமத்தில், ஒரு தனியார் உயர்நிலை பள்ளிக்கூடம் உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூட கழிவறையை சுத்தம் செய்ய மாணவ-மாணவிகளை ஈடுபடுத்தியதாக ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இன்று உலக புத்தக தினம்-வாசிப்போம் அதுவே நம் சுவாசம் என யோசிப்போம்:

புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை மக்கள் மத்தியில் வளர்க்கும் வகையில் ஏப்ரல் 23-ந்தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது. நூல்கள் படித்து பாதுகாக்கப்பட வேண்டிய காலப்பெட்டகம். இது காகிதங்களில் அச்சடிக்கப்பட்டு தொகுக்கப்பட்ட தொகுப்பு அல்ல. கடந்த கால வரலாற்றை, இன்றைய நிகழ்வுகளை, செய்திகளை எதிர்கால தலைமுறைக்கு கொண்டு சேர்க்க எழுத்தின் வழி பதிவு செய்யப்பட்ட ஆவணமே நூல்கள்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். நேர்முக தேர்வை எதிர்கொள்வது எப்படி? பயிற்சி மாணவர்களுக்கு போலீஸ் ஐ.ஜி. ரவி அறிவுரை:

‘ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். நேர்முக தேர்வை எதிர்கொள்வது எப்படி?’ என்பது குறித்து, பயிற்சி பெறும் மாணவர்களுக்கு போலீஸ் ஐ.ஜி. எம்.ரவி அறிவுரை வழங்கினார்.
மத்திய அரசாங்க பதவி
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்பட மத்திய அரசாங்க பதவிக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, நேர்முக தேர்வு டெல்லியில் வரும் 27-ந்தேதி தொடங்கி மாநிலம் வாரியாக ஒரு மாத காலம் நடைபெற உள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு:

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படியை கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி, தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படியை கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் 6 சதவீதம் உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
ரூ.366 முதல் ரூ.4,620 வரை
இந்த அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும்.

Wednesday, 22 April 2015

Direct Recruitment of Senior Lecturers in DTERT / DIET - 2010 - 11:

Teachers Recruitment Board  College Road, Chennai-600006
Direct Recruitment of Senior Lecturers in DTERT / DIET - 2010 - 11
          
Provisional List After Revised Certificate Verification.


          As per the Notification No.3/2011 published on 31-12-2011, the Written Competitive Examination for the recruitment of Senior Lecturers for DTERT/DIET was held on 04-03-2012. Board conducted Certificate Verification for the  short listed candidates  on 18.06.2012  and also conducted Revised Certificate Verification on  10.04.2015 based on the written examination marks.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 6 சதவிகித அகவிலைப்படி உயர்வு:

தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உள்ளாட்சி அமைப்புகள், அரசு மானியம் பெறும்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும்வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் இந்தஅறிவிப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அகவிலைபப்டி உயர்வினால்அரசு ஊழியர்களுக்கு 366 ரூபாய் முதல் 4 ஆயிரத்து 620 ரூபாய் வரை சம்பள உயர்வுகிடைக்கும். ஜனவரி ஒன்றாம் தேதி முதல்கணகிடப்பட்டு நிலுவைத் தொகை ரொக்கமாக வழங்கப்படும் என அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் சுமார் 18 லட்சம், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் பயனடைவர்.

TET வழக்கு இறுதி விசாரணை ஒத்திவைப்பு-இந்த ஆண்டு அறிவிப்பு வருமா ?

ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறையை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வேறு வழக்குகள் நிலுவயில் உள்ள காரணத்தினால் TET வழக்கை விசாரிக்க போதிய காலஅவகாசம் 'இல்லாத காரணத்தினாலும் உச்ச நீதிமன்றத்தில் நேற்று  விசாரணைக்கு வந்த TET வழக்கு மீண்டும் ஜீலை 14க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு தகுதித்தேர்வு அறிவிப்பு வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மேலும் ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித்தேர்வு இந்த ஆண்டு நடத்தப்படும் என்கிறார்கள்.காத்திருப்போம் நல்லதே நடக்கும் 

PAY CONTINUATION ORDER FOR 624 RMSA POSTS IN MODEL SCHOOLS RELEASED:

பிளஸ்1 தேர்வு முடிவு வரும் முன்பு பிளஸ் 2 தொடக்கம் அரசு பள்ளிகளிலும் கோடை சிறப்பு வகுப்புகள்:


பிளஸ்1 தேர்வு முடிவுகள் வெளிவரும் முன்பே பிளஸ்2 மாணவர்களுக்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கோடை கால சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதற்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, இந்த திட்டத்தை அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் சிலவும் பின்பற்ற தொடங்கிவிட்டன. இதற்கான உத்தரவை அந்தந்த பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் வாய்மொழியாக பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

தொலைநிலைக் கல்வித் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு :

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன பட்டப் படிப்பு தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்படும் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், தொழில் படிப்புகளுக்கான 2015 மே மாத தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 20 கடைசித் தேதி என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தேர்வுக்கு இணையதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் வருகிற 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.www.ide.unom.ac.in, www.unom.ac.in ஆகிய இணையதளங்கள் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை. எம்.எஸ்ஸி. படிப்புகள்: விண்ணப்பிக்க மே 8 கடைசி :

அண்ணா பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் இரண்டு ஆண்டு எம்.எஸ்ஸி., எம்.ஃபில். படிப்புகளுக்கு மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தனி நுழைவுத் தேர்வு அடிப்படையில் இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. நுழைவுத் தேர்வு மே 31-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.இதற்கு பல்கலைக்கழக இணையதளம் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க மே 8 கடைசித் தேதியாகும்.மேலும் விவரங்களை www.annauniv.edu  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

அரசுப் பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை:

அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை (ஏப். 23) முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஏப்ரல் 23 முதல் மே 31-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஆகும். விடுமுறைக்குப் பிறகு, ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐஏஎஸ் நேர்முகத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு:

ஐஏஎஸ் நேர்முகத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சென்னை திருமங்கலத்தில் உள்ள ஃபோக்கஸ் அகாதெமியில் இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.இது குறித்து அந்த அகாதெமி சார்பில் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:ஐஏஎஸ் எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்று நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ள தமிழக மாணவர்களுக்கு தேர்வை எதிர்கொள்வது குறித்த இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.இந்தப் பயிற்சி வகுப்பு ஏப்ரல் 25, 26, மே 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், துறை வல்லுநர்கள் உள்ளிட்டோர் பயிற்சி அளிக்க உள்ளனர். பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94427 22537 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது?

மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வானது, தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநில அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மத்திய அரசு அதிகாரிகள்- ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வானது கடந்த 10-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழகத்தில் பணியாற்றக் கூடிய அனைத்து ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், அதிகாரிகளுக்கும் பொருந்தும். மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பைச் செயல்படுத்த வேண்டுமெனில், மாநில அரசு தனியாக உத்தரவை வெளியிட வேண்டும். அதன்படி, இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார்.

பெயிலானால் தற்கொலை முடிவுக்கு போகாதீர்கள் மாணவ-மாணவிகளுக்கு பெண் போலீசார் விழிப்புணர்வு:

சென்னையில் 10-வது வகுப்பு, பிளஸ்-2 பரீட்சை எழுதிய மாணவ, மாணவிகளுக்கு பெண் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் மூலம் அறிவுரை வழங்கி வருகிறார்கள். பெயிலானால் தற்கொலை முடிவுக்கு போகாதீர்கள் என்று அறிவுறுத்தி வருகிறார்கள்.
பெண் போலீசார் பிரசாரம்
சென்னையில் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், அனைத்து பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் தங்கள் போலீஸ் நிலையங்களில் வேலைபார்க்கும் பெண் போலீசாருடன், தெரு, தெருவாக சென்று விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 10-வது வகுப்பு, பிளஸ்-2 பரீட்சை எழுதிய மாணவ-மாணவிகளை பள்ளிகளுக்கும் வரவழைத்து விழிப்புணர்வு பிரசார கூட்டங்களை நடத்துகிறார்கள். இந்த கூட்டங்களுக்கு பெற்றோர்களும் வரவழைக்கப்படுகிறார்கள்.

அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் 4360 பேர் எழுத்துத்தேர்வு மூலம் நியமனம் 24–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்:

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு தேர்வுத்துறை எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்து எடுக்கப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க 24–ந்தேதி முதல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவிக்கும் நோடல் மையத்தில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் எஸ்.எஸ்.எல்.சி.படித்திருக்கவேண்டும். 18 வயதுக்கு குறைவு இல்லாமல் இருக்கவேண்டும். விண்ணப்பிக்க மே 6–ந்தேதி கடைசி நாள்.எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் மே 31–ந்தேதி நடைபெற உள்ளது.இதற்கான முழு அறிவிப்பு இன்று (புதன்கிழமை) வெளியாக உள்ளது.

சத்துணவு சமையல் உதவியாளருக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை சம்பளஉயர்வு அரசுக்கு சத்துணவு ஊழியர்கள் நன்றி:

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் கே.பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் நேற்று சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதியை தலைமைச்செயலகத்தில் சந்தித்துபேசினார்கள். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
கடந்த 15–ந்தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்ததில் ஈடுபட்டோம். வேலை நிறுத்தத்தை திரும்ப பெற்றுவிட்டு அமைச்சரை சந்தித்தோம். அப்போது அமைச்சர் கூறுகையில் சத்துணவு சமையல் உதவியாளர் 10 ஆண்டுகள் பணி முடித்திருந்தால் அவர்களுக்கு சம்பளத்தில் 3 சதவீத உயர்வும், 20 ஆண்டு பணி முடித்திருந்தால் அவர்களின் சம்பளத்தில் 3 சதவீத சம்பளமும் உயர்த்தப்படும் என்றும் கூறினார்.

ஜூலை மாதம் வெளியாகிறது விண்டோஸ் 10 ஓ.எஸ்:

நீண்ட எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள விண்டோஸ் 10 ஓ.எஸ். வரும் ஜூலை மாதம் வெளியாக உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் OEM நிர்வாகி தெரிவித்துள்ளார். ஏற்கனவே, பெர்ஸனல் மற்றும் நோட்புக் கம்ப்யூட்டர்களின் தேவை வெகுவாக சரிந்துள்ளதால் மைக்ரோசாப்ட்டின் ஹார்டுவேர் பார்ட்னரான AMD 180 மில்லியன் டாலர் அளவுக்கு கடும் நட்டத்தை சந்தித்துள்ளது. இந்நிலையில், புதிதாக வெளியாகும் விண்டோஸ் 10 ஓ.எஸ். மீண்டும் வியாபாரத்தை சூடுபிடிக்க செய்யும் என எதிர்பார்க்கிறது. தற்போது டெஸ்டிங் ஸ்டேஜில் இருக்கும் விண்டோஸ் 10 ஓ.எஸ். சமீபத்தில் தான் மொபைலுக்கான ஓ.எஸ். பிரிவியூவையும் வெளியிட்டது. புதிய விண்டோஸ் 10 ஓ.எஸ்-ல் வழக்கமான இண்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு பதிலாக ஸ்பார்டான் பிரவுசர் இணைக்கப்படுகிறது. இது டெக் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

SSLC MARCH APRIL 2015 ORIGINAL QUESTION PAPERS AND ANSWER KEY TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM:

ALL ANSWER KEY COLLECTED BY OUR KALVIKURAL SOCIAL SCIENCE CENTUM TEAM TEACHER 
MR.B. SRINIVASAN.M.A.,M.Ed.,M.C.A.,M.A(YOGA) 
GRADUATE TEACHER
GHS GANGALERI 635 122
KRISHNAGIRI - DT
CELL : 99943-94610
 
 MAR 2015 QUESTION PAPER PRIVATE
KEY TM
PRIVATE
KEY EM

GOVERNMENT
KEY TM

GOVERNMENT
KEY EM
 MAR 2015 TAMIL PAPER I DOWNLOAD DOWNLOAD DOWNLOAD DOWNLOAD
 MAR 2015 TAMIL PAPER II DOWNLOAD DOWNLOAD DOWNLOAD DOWNLOAD
 MAR 2015 ENGLISH PAPER I DOWNLOAD DOWNLOAD DOWNLOAD DOWNLOAD
 MAR 2015 ENGLISH PAPER II DOWNLOAD DOWNLOAD DOWNLOAD DOWNLOAD
 MAR 2015 MATHEMATICS DOWNLOAD DOWNLOAD DOWNLOAD DOWNLOAD
MAR 2015 SCIENCE DOWNLOAD DOWNLOAD DOWNLOAD DOWNLOAD
 MAR 2015 SOCIAL SCIENCE DOWNLOAD DOWNLOAD DOWNLOAD DOWNLOAD
 
Copyright © 2014 "கல்விக்குரல்"