பள்ளிக் குழந்தைகளுக்கு அறிவியல் குறித்த
புரிதல் மற்றும் செயல்வழிக் கற்றலை ஊக்குவிக்கும் நோக்கில் சேலத்தில்
ஐக்கன் சயின்டிபிக்கா என்ற செயல்முறைத் தேர்வு நடைபெற்றது. இதில் ஏராளமான
பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று, சிறிய அளவிலான எந்திரங்களின்
மாதிரிகளை வடிவமைத்தனர்.
செயல்வழிக் கற்றல் தேர்வு:
அறிவியல் பாடத்தின் மீது பள்ளி
மாணவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் விதமாக, சேலத்தில் அறிவியல் செயல்வழிக்
கற்றல் தேர்வுகள் நடத்தப்பட்டன. சேலத்தில் உள்ள பிஸி பீஸ் (Busy Bees),
கிட்ஸ் லைப்ரரி (Kids Library) மற்றும் மும்பையைச் சேர்ந்த மெக்சஸ்
எஜுகேஷன் (Mexus Education) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த செயல்வழித்
தேர்வை நடத்தின.
இதில் ஹைட்ராலிக் தத்துவத்தின்
அடிப்படையில் இயங்கும், ராட்சத கிரேன், பொக்ளின் உள்ளிட்ட ஆறு வகையான
படைப்புகளுக்கான விளக்கங்கள் மற்றும் உதிரி பாகங்கள் மாணவர்களுக்கு
வழங்கப்பட்டன. சிறந்த படைப்புகளை உருவாக்கும் மாணவர்கள் தேர்வு
செய்யப்பட்டு, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு அனுப்பப்பட
உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அதிகரிக்கும் மாணவர்களின் ஆர்வம்:
அறிவியலை மாணவப் பருவத்திலேயே
செயல்வழியாகக் கற்பதற்கு வாய்ப்பளிக்கும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி
தங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது என்று
தெரிவிக்கின்றனர் பெற்றோர். மேலும் அறிவியல் மீதான அச்சம் நீங்கி, தற்போது
தங்கள் குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகரித்திருப்பதாகவும் அவர்கள்
கூறுகின்றனர்.
அறிவியல் ரீதியான அணுகுமுறை தேவை:
நமது அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும்
கடினமான பணிகளை சுலபமாக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகள், மனித சமுதாயத்தின்
வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய
செயல்வழிக் பயிற்சிகள், மாணவ, மாணவிகளின் அறிவியல் ரீதியான அணுகுமுறையை
அடிப்படையிலேயே தெளிவாக்க உதவும் என்கின்றனர் கல்வியாளர்கள்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...