தமிழகம் முழுவதும் பல்திறன் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்பு-SSA மூலம் நடத்தப்படுகிறது:
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பெரம்பலூர் அரசு
மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பல்திறன் போட்டிகளில் 65 பள்ளிகளில் இருந்து
மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை,
ஓவியம், ஓவியம், பாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பெரம்பலூர்
மாவட்ட பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்து 200 மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள்
திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள், மாவட்ட அளவு போட்டிகளில்
அதனைத் தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்புகளை
பெறுவார்கள் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.