பொதுத் தேர்வுகளை புகாருக்கு இடமின்றி நடத்த வேண்டும்-கல்வி அமைச்சர் ஆலோசனை:
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எந்தவித
புகாருக்கும் இடமின்றி நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
வைகைச் செல்வன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதற்காக, பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநர்களும் தேர்வுப் பணிகளை நேரில் சென்று கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
பள்ளிக் கல்வித் துறையின் புதிய அமைச்சராக வைகைச் செல்வன்
பொறுப்பேற்றவுடன் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் சென்னையில்
அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின்
செயல்பாடுகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.
முதல்வர் அறிவித்துள்ள திட்டங்களை விரைவாகவும், சிறப்பாகவும் நடத்திட
வேண்டும் என்றும் அவர் ஆலோசனைகளை வழங்கினார். பள்ளிக் கல்வித் துறையின்
செயலாளர் த.சபிதா, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி,
அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் முகமது அஸ்லம், தமிழ்நாட்டுப்
பாடநூல் கழகத் தலைவர் சண்முகவேல்ராஜ், பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநர்
கே.தேவராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.