சிலம்பத்தில் அரசு பள்ளி மாணவர் சாதனை:
திருத்தங்கல் எஸ்.ஆர்., அரசு மேல்நிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவர், சிலம்பத்தில் பதக்கங்களை குவித்துள்ளார்.திருத்தங்கல் எஸ்.ஆர்., அரசு மேல்நிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவர் கருக்குவேல்ராஜா,12. இவர், மகாராஷ்டிரா நவி மும்பையில் 2012-2013ம் ஆண்டிற்கான, தேசிய சிலம்பம் போட்டியில் பங்கேற்றார்.
14-17 வயது பிரிவு சப் ஜூனியர் 30 கிலோ எடை பிரிவு, தனித்திறன் போட்டியான ஒற்றை கம்பு சுற்றுதலில் தங்கம் வென்றார். சுருள்வாள் வீச்சில் வெள்ளி, வாள்வீச்சில் வெண்கல பதக்கங்களை வென்றார்.








