ஆசிய கல்வி நிறுவனங்கள் தர வரிசை:
உலகளவில் வெளியிடப்படும் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில், மீண்டும் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
உலகளவில்
ஆண்டுதோறும் சில நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து, ரேங்க்
பட்டியலை வெளியிட்டு வருகிறது.
சமீபத்தில் "QS World University Ranking" வெளியிட்ட கல்வி நிறுவனங்களில் பட்டியலில், முதல் 200 இடங்களுக்குள், இந்தியாவைச் சேர்ந்த ஒரு கல்வி நிறுவனம் கூட இடம் பெறவில்லை.
சமீபத்தில் "QS World University Ranking" வெளியிட்ட கல்வி நிறுவனங்களில் பட்டியலில், முதல் 200 இடங்களுக்குள், இந்தியாவைச் சேர்ந்த ஒரு கல்வி நிறுவனம் கூட இடம் பெறவில்லை.
இதன்பின் இங்கிலாந்தின், "Times Higher Education (THE)"
வார இதழ், வெளியிட்ட உலகளவிலான டாப் 200 பட்டியலிலும் இந்தியாவுக்கு
இடமில்லை.
தற்போது இதே நிறுவனம் இந்தாண்டு முதன் முறையாக ஆசிய அளவில்
கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து (பாடத்திட்டம், ஆராய்ச்சி, சர்வதேச தரம்),
ஆசியாவுக்கான "டாப்100" கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை
வெளியிட்டுள்ளது.
இதில் இந்தியா சார்பில் வெறும் 3 கல்வி நிறுவனங்கள்
(ஐ.ஐ.டி., காரக்பூர், ஐ.ஐ.டி., மும்பை மற்றும் ஐ.ஐ.டி., ரூர்க்கி)
மட்டுமே இடம் பெற்றுள்ளன. அதே நேரத்தில் சீனாவில் இருந்து 15 கல்லூரிகள்
இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
அதிகபட்சமாக, ஜப்பானின் 23 கல்வி நிறுவனங்களும், அடுத்த
இடத்தில் தைவான் நாட்டில் இருந்து 18 கல்வி நிறுவனங்களும் இப்பட்டியில்
இடம் பெற்றுள்ளது. முதலிடத்தில் ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகம்
உள்ளது.
ஆசியாவின் டாப்10 கல்வி நிறுவனங்கள்
1 டோக்கியோ பல்கலைக்கழகம், ஜப்பான்
2 தேசிய பல்கலைக்கழகம், சிங்கப்பூர்
3 ஹாங்காங் பல்கலைக்கழகம், ஹாங்காங்
4 பீகிங் பல்கலைக்கழகம், சீனா
5 பேஹேங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், தென் கொரியா
6 டிசிங்குவா பல்கலைக்கழகம், சீனா
7 கைட்டோ பல்கலைக்கழகம், ஜப்பான்
8 சியோல் தேசிய பல்கலைக்கழகம், தென் கொரியா
9 ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஹாங்காங்
10 கொரியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், தென் கொரியா
2 தேசிய பல்கலைக்கழகம், சிங்கப்பூர்
3 ஹாங்காங் பல்கலைக்கழகம், ஹாங்காங்
4 பீகிங் பல்கலைக்கழகம், சீனா
5 பேஹேங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், தென் கொரியா
6 டிசிங்குவா பல்கலைக்கழகம், சீனா
7 கைட்டோ பல்கலைக்கழகம், ஜப்பான்
8 சியோல் தேசிய பல்கலைக்கழகம், தென் கொரியா
9 ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஹாங்காங்
10 கொரியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், தென் கொரியா
இந்தியா கல்வி நிறுவனங்கள் தர வரிசை
30 ஐ.ஐ.டி., காரக்பூர், இந்தியா
33 ஐ.ஐ.டி., மும்பை, இந்தியா
56 ஐ.ஐ.டி., ரூர்க்கி, இந்தியா
33 ஐ.ஐ.டி., மும்பை, இந்தியா
56 ஐ.ஐ.டி., ரூர்க்கி, இந்தியா
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...