- KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Friday 28 June 2013

கல்லூரிகளில் ராகிங் தடுப்பு தீவிரம்:

ராகிங் கொடுமையை முற்றிலுமாக ஒழிக்கத் தேவையான ஏற்பாடுகளை, கல்லூரி முதல்வர்களும், துறைத் தலைவர்களும் மேற்கொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.கல்வி நிறுவனங்களில், "ராகிங்" தடைசெய்யப்பட்டுள்ள நிலையிலும், கல்லூரி நிர்வாகம், அரசுக்கு தெரியாமல் ஆங்காங்கே, கொடுமை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. ராகிங்கை மத்திய, மாநில அரசுகள் கடுமையான குற்றமாக அறிவித்துள்ளன; கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுகின்றன.

ராகிங் குற்றத்தில் ஈடுபடும் மாணவர்கள் கல்வி நிறுவனங்களிலிருந்து நீக்கப்படுவதுடன், வேறு மாநிலங்களிலுள்ள கல்லூரிகள், பல்கலைகளில் சேர்ந்து படிக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. குற்றத்தின் தன்மையை பொறுத்து, மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.
ராகிங்கால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படும் மாணவர்கள் சிலர், தற்கொலை வரை செல்கின்றனர்; இதனால் வரும் முன்விரோதத்தால் சிலர் கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாகவே உள்ளது.
சென்னை அருகே "ராகிங்" தொல்லையால் கல்லூரி மாணவர் ஒருவர், சமீபத்தில் உயிரிழந்தார். கடந்த 24ம் தேதி முதல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில், ராகிங்கை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து ராகிங் தடுப்பு குறித்து கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: ராகிங் கொடுமை நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
ராகிங் குறித்து புகார் பெறும் ஆசிரியர்களின் பெயர், முகவரி, போன் எண்களை கல்லூரி அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும். இது தொடர்பான, புகார் பெட்டி மற்றும் ஆலோசனைப் பெட்டியை அமைத்து, ராகிங் அறவே ஒழிக்கத் தேவையான ஏற்பாடுகளை, கல்லூரி முதல்வர்களும், துறைத் தலைவர்களும் மேற்கொள்ள வேண்டும்.
இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கல்லூரி முதல்வர்கள், இயக்குனர் அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகிங் கொடுமைக்கு எதிரான நடவடிக்கைக்காக உச்சநீதி மன்ற வழிகாட்டுதல் நகல் மற்றும் டில்லி மனித வள மேம்பாடுத் துறையின் கடித நகலும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் 1800-180-5522 என்ற ராகிங் தடுப்பு ஹெல்ப் லைன் உருவாக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் செயல்படும் இந்த இலவச டோல் எண்ணில் பாதிப்புக்குள்ளாகும் மாணவர்கள் புகார் அளிக்கலாம்; கவுன்சிலிங்கும் வழங்கப்படுகிறது. இது தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, பெங்காலி, பஞ்சாபி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் செயல்பட்டு வருகிறது.
கல்லூரிகளில் புகார் தர பயப்படும் மாணவர்கள் இதில் தொடர்பு கொள்ளலாம். மையத்திலிருந்து சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு புகார் அனுப்பப்பட்டு, ஏழு நாட்களுக்குள் புகார் மீதான நடவடிக்கை விபரம் பெறப்படுகிறது.

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H